காதல் போயின் காதல்! என்னுடைய பார்வையில்!

காதல் போயின் காதல்! என்னுடைய பார்வையில்!


கோவை ஆவி தயாரித்து ஷைனிங் ஸ்டார் சீனுவின் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள காதல் போயின் காதல் குறும்படத்தைப் பற்றி முகநூலிலும் வலைப்பூக்களிலும் படப்பிடிப்பு துவக்க நாளில் இருந்தே பரபரப்பாக பல நண்பர்கள் பதிவுகள் செய்து பேசிக்கொண்டாலும் நான் அமைதியாகவே இருந்தேன்.

     பொதுவாகவே எனக்கு சினிமா அறிவும் ரசனையும் கொஞ்சம் குறைவுதான். கொஞ்சம் என்ன நிறைய என்றுகூடச் சொல்லலாம். அதனால் எந்த படமாக இருந்தாலும் முதல் ஆளாய் முட்டி மோதிப் பார்ப்பதில் எல்லாம் விருப்பம் இல்லாதவன். பதிவுலக நண்பர்கள் நடித்த இந்த படத்தைக் கூட இவ்வளவு சீக்கிரம் பார்ப்பேன் என்று நான் நினைக்கவில்லை!

    காலையில் சீக்கிரமே எழுந்துவிட்டேன். பல் துலக்கி காபியும் அருந்தியாகிவிட்டது. என்ன செய்யலாம்? மொபைலை எடுத்து நெட்டை ஆன் செய்தேன். முந்தின இரவில் போட்ட பதிவுக்கு என்ன பின்னூட்டங்கள் வந்திருக்கிறது என்று ஜிமெயில் போய் பார்ப்பது என் வழக்கம். அதன்படி ஜிமெயில் சென்று பார்த்தேன் என் கிரிக்கெட் பதிவிற்கு மொத்தம் மூன்றே கமெண்ட் மட்டுமே வந்திருந்தது எனக்கு ஏமாற்றம் தந்தது. ச்சே! இந்த பதிவில் எங்கோ குறை இருக்கிறது! என்று ஏமாற்றத்துடன் பேஸ் புக் ஆன் செய்தேன்.

             இரண்டாவது பதிவே சீனுவின் குறும்பட பதிவுதான்! லிங்கும் கொடுத்திருந்தார். மணி 5.45 தான் ஆகியிருந்தது. மொபைலில் இணைய வேகம் நன்றாக இருக்க யூ டியுப் ஓபன் ஆகி படம் தடங்கலின்றி ஓடியது. அது மேலும் ஆர்வத்தை தூண்டியது. இப்போது கணிணியில் ஓபன் செய்தால் இன்னும் வளையம் சுழன்றுகொண்டே இருக்கிறது ஐந்து நிமிடமாய்! ஆனால் காலையில் அப்படி தடங்கல் இல்லை!

     டைட்டில் ஆரம்பிக்கும் போதே ஆவியின் குரலில் கவிதை ஒன்று சொல்ல என்று கீதா மேடம் இணைந்து பாடி அசத்திவிட்டனர் டைட்டில் பாடலை!
கோவை ஆவியும் அரசனும் சேர்ந்து எழுதியுள்ள அந்த பாடல் நான்கும் நான்கும் எட்டுவரிதான் என்றாலும்  அருமையாக உள்ளது.

    கதை ஒன்றும் புதிது இல்லைதான்! வழக்கமான காதல் தோல்வி கதைதான்! ஆனால் அதை சொல்லிய விதம் அசத்தல். ரிஷ்விக்காக சீனுவும், ரேஷ்மாவாக மதுவந்தியும் சிறப்பாகவே நடித்து இருக்கிறார். அதிலும் எல்லோரும் சொல்லுவது போல நடிப்பில் சீனுவை மதுவந்தி ஓவர் டேக் செய்தாலும் சீனுவின் பர்ஃபார்மென்ஸை குறைச்சொல்ல முடியாது. வசனங்கள் குறைவாக பேசினாலும் அண்டர் ப்ளே பண்ணி அசத்தி விடுகிறார்.


    காதலித்த பெண் திடுமென வெட்டிங் கார்ட் கொடுக்கும் போதும் அந்த பெண்ணின் நினைவாக அவளின் பொருட்களை சேகரிக்கும் போதும் அசத்தி இருக்கிறார் சீனு.

   குட்டிப்பையன் ரக்‌ஷித்  (பதிவர்கார்த்திக் சரவணன்அவர்களின்மகன்) சித்தி இல்லே அம்மா என்று சொல்லும் போது எல்லோரையும் ஓவர் டேக் ஆக்கிவிடுகிறார். மதுவந்திக்கு குரல் யார் கொடுத்தார்கள் அவருடைய சொந்த குரலாகவே இருக்குமென்று ஊகிக்கிறேன்.நன்றாகவே டப் செய்துள்ளார்.

    முல்லை வேந்தனின் படத்தொகுப்பு படத்தை விறுவிறுப்பாக காட்டுகிறது. தமிழ்வாசி குரல் ஒலி சரியில்லை என்று சொல்லியிருந்தார். ஆனால் என் ப்ரவுசரில் காதைப் பிளக்கிறது ஒலி! ஆகையால் ஒலிப்பதிவிலும் குறை இல்லை!

    காதலை எதற்கு தியாகம் செய்கிறார் மதுவந்தி என்பதை கடைசி சீனில் சொல்லாமல் சொல்லி டிவிஸ்ட் அடித்திருக்கிறார் ஆவி. ஆனாலும் காதல் போயின் காதல் என்ற பெயர் பொருத்தம் எனக்கு புரியவில்லை!

   காதலுடனான காதல் போய் பிள்ளையுடனான காதல் என்று அர்த்தம் கொள்ளவேண்டுமா? என் சிற்றறிவுக்கு விளங்க வில்லை! இதற்கு மேல் எனக்கு சினிமா அறிவு இல்லாததால் நிறைய சொல்லி உங்களை வெறுப்பேற்ற விரும்பவில்லை!

    கோவை ஆவியின் டைரக்‌ஷன் டச் சிறப்பு! இவர் மேலும் பல சிறப்பான குறும்படங்களையும் சினிமா படங்களையும் தந்து நம்மை மகிழ்விப்பார் என்று நம்பலாம். மகிழ்விக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    குடந்தையார், துளசிதரன், சீனுவின் நண்பர்களான அனைவருமே இயல்பாகவே நடித்து உள்ளார்கள். முதல் படத்திலேயே அசத்தி உள்ள சீனு எனக்கு நடிக்கத் தெரியாது என்று இனி சொல்ல முடியாது. அது போல மதுவந்தியும் மிக இயல்பாக நடித்து பாராட்டை பெறுகிறார்.

     பத்துநிமிடம் ஜாலியாக ரசித்து பார்க்க ஏற்ற குறும்படம்! கடைசி கட்டத்தில் மனதில் அப்படியே பதிந்துவிடுவதும் டைட்டில் பாடல் மீண்டும் மீண்டும் ஹம் செய்ய வைப்பதும் படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட்.

ஆக மொத்தத்தில் அனைவரும் ரசிக்கக் கூடிய ஆகச்சிறந்த குறும்படம் காதல் போயின் காதல்! அனைவரும் கண்டு ரசியுங்கள்! வாழ்த்துங்கள்!

கோவை ஆவி டீம் நண்பர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!


குறும்படத்திற்கான யூ டியுப்  லிங்க் இதோ! படத்தை தரவிறக்கி தர நினைத்தாலும் இணைய வேகம் ஒத்துழைக்க வில்லை!  இதோ லிங்க்  காதல் போயின் காதல்- குறும்படம்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. நலமா சகோ? பல நாட்களாய் வலைப்பக்கங்கள் வர இயலவில்லை.
    குறும்படம் நானும் பார்த்தேன். அருமை!

    ReplyDelete
    Replies
    1. நலமா உள்ளேன் சகோ! நானும் சில நாட்களாய் வலைப்பக்கம் வருவது குறைந்துவிட்டது!

      Delete
  2. // குட்டிப்பையன் கார்த்திக் சரவணன் சித்தி இல்லே அம்மா என்று சொல்லும் போது எல்லோரையும் ஓவர் டேக் ஆக்கிவிடுகிறார்.//

    பாராட்டுக்கு மிக்க அண்ணா... என் பெயர் தான் கார்த்திக் சரவணன்... என் மகன் பெயர் ரக்ஷித்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க சரவணன்! நன்றி! இப்போது திருத்தி விட்டேன்!

      Delete
  3. நன்றி சுரேஷ். அருமையான விரிவான விமர்சனம். உங்க ஊக்குவிப்புக்கு நன்றி

    ReplyDelete
  4. நன்றி சுரேஷ். அருமையான விரிவான விமர்சனம். உங்க ஊக்குவிப்புக்கு நன்றி

    ReplyDelete
  5. வணக்கம்
    ஐயா
    விமர்சனத்தை பார்க்கும் போது படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை இதோ இணைப்பின் வழி பார்க்கிறேன்..பகிர்வுக்கு நன்றி.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. நன்றி சுரேஷ் சார்

    ReplyDelete
  7. கிட்டத்தட்ட என்னுடைய பார்வையும் இதுதான்.. என்ன எனக்கு நடிக்க வருகிறது என்று என்னைத்தவிர நீங்கள் எல்லாரும் கூறிவிட்டீர்கள் :-)

    சின்ன சின்ன குறைகள் நண்பர்கள் மொலமாகவும் நாங்களாகவும் அறிந்து கொண்டாலும் இது ஒரு நல்ல அனுபவம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை....

    ReplyDelete
  8. நானும் பார்த்தேன் அருமை.

    ReplyDelete
  9. ஏதேனும் ஓர் அன்பு நம்மை ஆட்கொள்ளும்...! இப்படியும் இருக்கலாம்...!

    ReplyDelete
  10. குறும் படம் அருமை
    பாராட்டுவோம்

    ReplyDelete
  11. மிக்க நன்று சுரேஷ்! தங்களின் விமர்சனத்திற்கும், பாட்டைப் பாராட்டியதற்கும். - துளசி, கீதா

    ஆவிக்குத்தான் நான் நன்றி எத்தனை சொன்னாலும் முடிவில்லை..., என்னையும் அவரது படத்தில் பாட வைத்ததற்கு. - கீதா

    மிக்க நன்றி சுரேஷ் !

    ReplyDelete
  12. உங்களது இதற்கு முன்னான இடுகைகளுக்கு வருகின்றோம். ஒரு சுற்று சுற்றிவிட்டு....ஏன்ன்றால் ஒரு வாராத்திற்கும் மேல் ஆகிவிட்டது.....மற்ற தளங்கள் போய்.....வருகின்ரோம் மீண்டும்.....

    ReplyDelete
  13. விரியான விமர்சனம் அருமையான பாராட்டு ஆவி குழுவுக்கு.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2