புகைப்பட ஹைக்கூ 66
புகைப்பட
ஹைக்கூ 66
சோறூட்ட
பூட்டப்பட்டது
ஏர்!
ஓடை
திறந்ததும்
கூட்டப்பட்டது
சேடை!
உழவுக்கு
உழைத்தன
காளைகள்!
சேற்றுவயல்
ஊட்டுகிறது
ஊற்றுப்பசி!
பண்பட்டதும்
பரிசு
தந்தது
நிலம்!
கழி
பேசியதும்
களைப்பை
மறந்தன
காளைகள்!
புதைபட்ட
வாழ்வு
மீட்டெடுத்தது
உழவு!
தடம்
மாறிய உழவை
நேர்
செய்தன
ஏர்மாடுகள்!
கூட்ட
கூட்ட
குறைந்தது
பாரம்!
ஏர்!
உழவு
செய்கையில்
உவப்பு
கொள்கிறது
நிலம்!
விளைநிலமாக
விதைக்கப்படுகிறது
உழவு!
தேரோடும்
வீதிகளை
தேர்வுசெய்ய
புறப்பட்டது
ஏர்!
சேறும்
ஏரும்
ஜோராய்
தந்தது
சோறு!
ஏர்பிடிக்கையில்
வேர்பிடித்தது
உழவு!
விலைநிலங்களுக்கு
மத்தியில்
ஒரு
விளைநிலம்!
களம்
புகுந்த கலப்பை!
களிப்படைந்தது
நிலம்!
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
வேர்பிடித்தது உட்பட அனைத்தும் அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
Arumaingo...!
ReplyDeleteநாஞ்சில் நாட்டு நிலத்தின் கவிதை போல அருமை !
ReplyDeleteஅருமை
ReplyDeleteஅருமை. ரசித்தேன்.
ReplyDeleteஅருமையான ஒரு கவிதை. நன்றாக இருக்கிறது .
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete