தளிர் ஹைக்கூ கவிதைகள் 14


1. நூல் இல்லாமல்
    வலைபின்னியது
    சிலந்தி!

2. இடித்து தள்ளியும்
    முளைத்துவிட்டது 
     சிலந்திக் கூடு!

3. இழப்பை மறந்து
    கொண்டாட்டம்!
    வருடப் பிறப்பு!

4. ஒரு வருடவாழ்க்கை
    உற்சாகமாய் பிறக்கிறது!
    வருடப்பிறப்பு!

5.  விடிந்ததும்
     முளைக்கின்றன
      கவலைகள்!

6.  வெட்டி எடுத்தார்கள்
      கரைந்து போனது
       பனிக்கட்டி!

7.    ஆரத்தழுவியதும்
        அதிகமானது நடுக்கம்!
        குளிர்!

8.   மண்ணில் மலர்ந்தன
      மனம்கவர் பூக்கள்!
      மார்கழி கோலங்கள்!

9.    மழை பொழிந்தும்
       வதங்கின பயிர்கள்
        பனி!

10.  தேங்கியதும்
        படிந்தது
        அழுக்கு!

11.  வாசம் பரவியதும்
       பாசம் காட்டின வண்டுகள்
        பூக்கள்!

12. வழிகாட்டியது
      உடன்வரவில்லை!
       பலகை!

13. கண்ணை நோண்டி
      சுவைத்தார்கள்
       நுங்கு!

14. துன்பத்திலும்
      சிரித்துக் கொண்டிருந்தது
      குழந்தை!


டிஸ்கி}  புதிய ஆண்டின் துவக்கத்தில் கூடுதல் பணிகள் வந்தமையால் இணையம் வர முடியவில்லை! இனி வாரம் ஒன்றிரண்டு பதிவுகள் மட்டுமே எழுத முடியும் போல் உள்ளது. அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். நாளை 4-1-14 நமது வலைப்பூவின் நான்காம் ஆண்டு துவக்கம்! நேரம் கிடைப்பின் பதிவு வெளிவரும்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. அருமையான கவிதைகள்.... பாராட்டுகள்.

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. நான்காம் ஆண்டு விழா வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  4. அருமையான கைக்கூக்கள் ! வாழ்த்துக்கள் சகோதரா தொடரட்டும்
    இனிதே தங்களின் கைக்கூ வரிகள் .

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2