“பொண்ணு லவ் மேரேஜ் பண்ணிட்டா மாப்பிள்ளையை இப்படித்தான் சொல்வாங்களோ?” ஜோக்ஸ்
ஜோக்ஸ்!
1. தங்கத்தை எங்கிருந்து வெட்டி எடுப்பாங்கன்னு
கேட்டதுக்கு தலைவர் மானத்தை வாங்கிட்டாரு!
என்ன
சொன்னாரு?
கழுத்திலிருந்துன்னு
சொல்றாரு!
சி. சாமிநாதன்.
2.தலைவரோட
பாஸ்போர்ட்டை முடக்கிட்டாங்களா… அடுத்து என்ன செய்யப்போறார்?
கள்ளத்தோணியை ரெடி பண்ணிட்டார்!
நா. கிருஷ்ணசாமி.
3.வங்கி
திறப்புவிழாவுக்கு கூப்பிட்டா தலைவர் என்ன இப்படி சொல்றாரு…?
என்ன சொல்றாரு?
சின்னதா,
பிக்பாக்கெட்”னா ஓ.கே ஆனா வங்கியெல்லாம் என்னால திறக்க முடியாதுங்கிறார்!
சி.சாமிநாதன்.
4.எதுக்காக
அந்த ரெண்டு பிச்சைக்காரங்களும் திருவோட்டை மாத்திக்கிறாங்க?
சம்பந்தி
ஆகப் போறாங்களாம்!
சு.ஜெயகவிதா.
5.அதுதான்
என்கவுண்டர் போலீஸ்காரர் வீடுன்னு எதை வைச்சு சொல்றீங்க?
சுவத்துல
விளம்பரம் மற்றும் நோட்டீஸ் ஒட்டுவோர் மீது ‘சுடும்’நடவடிக்கை எடுக்கப்படும்னு
எழுதி வைச்சிருக்காரே!
குலவந்தன்.
6.
தலைவருக்கு கையில எப்படி சொறி சிரங்கு வந்ததாம்?
எதிர்கட்சி மேல ஓவரா புழுதிவாரி தூற்றினாராம்!
வி.முருகன்.
7.தலைவர்
எதையும் தொழில் முறையில்தான் செய்வார்?
அதுக்காக
… கலவரத்துல பஸ்கண்ணாடிகளை உடைக்க காண்ட்ராக்ட் விட்டிருக்கிறது ரொம்ப ஒவர்ங்க!
வி.சகிதாமுருகன்.
8.தலைவருக்கு
தேர்தல்கமிஷணரை விட பாங்க் மேனேஜரைத்தான் ரொம்ப பிடிக்கும்!
ஏன்?
இவர்
‘டெபாசிட்’டை வட்டியோட திருப்பிக்கொடுத்துடுவாரே!
பி.சண்முகம்.
9.தலைவரே! 100முறை கட்சி மாறினதுக்காக உங்களை
பார்க்க கின்னஸ்காரங்க வந்திருக்காங்க!
கின்னஸ்
மாதிரி பேருதெரியாத கட்சியிலே நான் சேரமாட்டென்னு சொல்லி அனுப்பிடு!
எஸ்.சடையப்பன்.
10.தலைவரோட பொது அறிவு கவலையளிக்கிறது!
தேர்தல்களில் ‘நோட்டா’பயன்படுத்த தேர்தல்கமிஷன்
அனுமதிங்கிறதை படிச்சிட்டு அப்புறம் சில்லரைகளை பயன்படுத்தக் கூடாதான்னு
கேக்கிறார்!
மங்கையர்க்கரசி
11.நேத்து நடந்த நம்ம கட்சியின் பொதுக்கூட்டத்துக்கு
ஒரு ஆள்கூட வரலை!
அப்புறம்?
மேடையிலிருந்த
பாதிபேரை கீழே இறக்கி மேடைக்கு முன்னாடி உக்காரவைச்சு கூட்டம் நடத்தினோம்!
அதிரைபுகாரி.
12.நீங்க
கோயிலுக்கு பாதயாத்திரை போவதற்கு பேங்குல ஏன் லோன் கேட்குறீங்க?
கால்நடைக்கு லோன் தருவதா சொன்னாங்களே!
தேனி முருகேசன்.
13.பாம்பை வச்சி ஒரு படம் எடுத்தீங்களே என்னாச்சு
சார்?
பெட்டிக்குள்ளேயே
முடங்கி கிடக்குது சார்?
வி.ரேவதி
14.இது
கொலைதான்னு எப்படி இத்தனை உறுதியா சொல்றீங்க?
டீவி சீரியல் பார்க்கும்போதுதானே
செத்திருக்காரு!
எஸ்.கார்த்திக் ஆனந்த்
15.எனக்கு நீ நூறு ரூபாய் தரணும் மறந்துட்டியா?
எங்க மறக்கவிடறே! அதான் அப்பப்போ
ஞாபகப்படுத்திட்டே இருக்கியே!
ஜி.எஸ்.ஸ்ரீமதி.
16.
ஆபிஸிற்கு ஒரு வாரம் லீவு போட்டதை ஏன் உடனடியாக கேன்சல் செய்து விட்டீர்கள்?
டாக்டர்தான் நல்லா தூங்கி ரெஸ்ட் எடுக்கணும்னு
சொன்னார்!
சீ. இருளப்பசாமி.
17 நான், சிங்கம்யா!
அதுக்காக… சிறைச்சாலைக்கு
போகமாட்டேன்.மிருககாட்சி சாலைக்குத்தான் போவேன்னு, நீங்க சொல்றது நல்லால்லே
தலைவரே!
பொன் ராஜசீலன்.
18.
இன்னிக்கு நமக்கு திருமணமாகி முப்பது வருசமாச்சு, இந்த நாளில் கூடவா இப்படி
குடிச்சிட்டுவந்து…
காமாட்சி, துக்கம் வந்தா தான் கொஞ்சம்
குடிப்பேன்னு உனக்கு தெரியுமில்ல!
லீலாபீர்
19. தாங்கள் சோமபானம் அருந்தி குப்புற கவிழ்ந்து கிடப்பதை உடனே நிறுத்துங்கள் அரசே!
என்ன ஆயிற்று அமைச்சரே!
தங்களைப்பற்றி புலவர் குப்புறநானூறு
பாடியுள்ளார்!
வெ.ராஜாராமன்.
20.
எங்களுக்கு விலையில்லா மாப்பிள்ளை கிடைச்சிருக்கார்!
ஓ.. உங்க பொண்ணுக்கு லவ் மெரேஜா?
லெ.நா.சிவகுமார்.
21. மன்னரை வானாளாவ புகழ்ந்து பாடியும் அந்தப்புலவரை
சிறையிலடைக்க சொல்கிறாரே… ஏன்?
அவர் இவ்வளவு நேரம் புகழ்ந்து பாடியது
பக்கத்து நாட்டு மன்னரையாம்!
குடந்தை கே. சுந்தர்
22. ஆனாலும் அந்த ஆஸ்பத்திரி ரொம்பவும் மோசம்!
எப்படிச்
சொல்றே?
பெட்சார்ஜ்
அல்லாம பில்லோ சார்ஜும் போடறாங்களே!
ஜக்கி.
நன்றி:
தினமலர்-வாரமலர்.
தங்கள்
வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!
நன்றி!
ஹ... ஹா... ஹா... ஹா... அனைத்தும்...
ReplyDeleteரசித்தேன்.
ReplyDeleteரசித்தேன் நண்பரே நன்றி
ReplyDeleteரசித்தேன்.
ReplyDeleteரசித்தேன். நன்றி
ReplyDeleteஅனைத்தும் அருமை. ரசித்தேன்.
ReplyDelete