புகைப்பட ஹைக்கூ 63
புகைப்பட ஹைக்கூ 63
அடிபட்டது பெண்மை!
அசிங்கப்பட்டது
ஆண்மை!
வெறிநாய் கூட்டத்திடம்
வீழ்ந்தது
மனிதம்!
புனிதம்
பேசுவோர்
மறந்தார்
மனிதம்!
வீழ்ந்த
பெண்ணிடம்
தாழ்ந்தது
ஆண்மை!
வீரம்
புகுகையில்
ஒளிந்தது
ஈரம்!
இளைஞர்கள்
அல்ல!
இதயம்
இல்லா
கொலைஞர்கள்!
பாதகம்
இழைக்கின்றனர்
பாதை
மாறிய
இளைஞர்கள்!
கலவர
பூமியில்
உலாவரும்
மிருகங்கள்!
மிரண்ட
பெண்ணை
மிரட்டும்
கோழைகள்!
கலவரம்
பூத்ததும்
கலைந்தது
கண்ணியம்!
சிறைபட்ட
காட்சியில்
உடைபட்டது
நெஞ்சம்!
விலங்குகள் வலையில்
விலங்கிட்டது
பெண்மை!
மறந்துபோனது மனிதம்
அறுந்து போனது அன்பு!
முறிந்து போனது பண்பு!
படம்(வங்கதேச கலவரம்) நன்றி: தினமலர்
டிஸ்கி}
சரியாக இதே நாளில் 2011ம் ஆண்டில் தளிரில் முதல் பதிவாக பொங்கல் வாழ்த்து
வெளியானது. இன்று நான்காம் ஆண்டில் அடியெடுத்து வளர்ந்து நிற்கிறது தளிர். இடையில்
சில களைகள் உருவாக களைந்து தளிர் இன்று வளர்ந்து நிற்கிறது. இது விருட்சமாக
உருவெடுக்க உங்களின் ஆசிகளையும் ஆதரவினையும் நாடுகிறது. வேளைப்பளு காரணமாக
தொடர்ந்து பதிவிட முடியவில்லை! மற்றவர்களின் வலைதளங்களுக்கு செல்ல முடியவில்லை!
விரைவில் வழக்கமாக தளிர் துளிர்விடும். அதுவரை பொறுத்தருள்க!
தங்கள்
வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!
நன்றி!
சிறப்பான பதிவு.......தேவையானதும் கூட..
ReplyDeleteவாழ்த்துகள் நண்பா!!
ReplyDeleteNalla varikal..
ReplyDeleteSeyvathu kodumaikkaararkal..
இவர்கள் மனிதர்கள் அல்ல விலங்குகள்
ReplyDeleteபுகைப்பட ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
ReplyDeleteமுற்றிலும் உண்மை
இன்றும் வாழ்கின்றனர்
காட்டுமிராண்டிகள் !
மனிதாபிமானம்
மறந்து விட்ட
மடையர்கள் !
பெண்ணிடம்
வீரம் காட்டும்
கோழைகள் !
இவன்களிடம்
பேச முடியுமா ?
அகிம்சை !
விலங்குகளை விட கேவலமானவர்கள்...
ReplyDeleteஇந்த ஆண்டு மேலும் சிறப்பாக அமைய, தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் இனிய 2014 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteகேவலமானவர்கள்.....
ReplyDeleteநான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வலைத்தளத்திற்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்.
அருமையான கவிதைக்கும்
ReplyDeleteசிறப்பான நான்காம் ஆண்டுப் பகிர்வுக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்