தானாக தீப்பிடித்து எரியும் குழந்தை! மருத்துவர்கள் திணறல்!
சென்னை: தானாக தீப்பிடித்து எரியும் அதிசய குழந்தை சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள டி.பரஸ்கனி கிராமத்தைச் சேர்ந்தவர் கர்ணன் (26). இவரது மனைவி ராஜேஸ்வரி (23). காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த மே மாதம் 22 ஆம் தேதி ஆண் குழந்தை ஒன்று இந்த தம்பதிக்கு பிறந்தது. அந்த குழந்தைக்கு ராகுல் என பெயர் சூட்டினர். சரியாக 8ம் நாளில் குழந்தையின் உடலில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.இதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். தீ பிடித்த குழந்தை பச்சிளங் குழந்தையின் உடலில் தீப்பிடித்து எரிந்ததால் உடலில் பல இடங்களில் தீக்காயங்கள் ஏற்பட்டன. சில நாட்களில் அந்த காயம் ஆறிப்போனது. ஒருமுறையல்ல இருமுறையல்ல பிறந்து இரண்டரை மாதத்தில் பலமுறை குழந்தையின் உடலில் தீப்பிடித்து எரியவே காரணம் தெரியாத பெற்றோர் கதறித்துடித்தனர். பல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் கோவில் கோவிலாகப் போய் பரிகாரம் வேறு செய்தனர். பாண்டிச்சேரியில் சிகிச்சை இறுதியாக, புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகும் ராகுலின் உடலில் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அந்த கிராம மக்களே அதிர்ச்சி அடைந்தனர். குடும்பத்தை ஊரைவிட்டும் ஒதுக்கி வைத்தனர். இதனால் தற்கொலை வரை சென்றார் குழந்தையின் தாய். மண்ணெண்ணைய் வாசனை இந்நிலையில், குழந்தை தீப்பிடித்தும் எரியும் செய்தி தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் பரவியது. குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தையின் உடலில் இருந்து மண்எண்ணை வாசனை வருவதாக தெரிவித்தனர்.
அதிசய குழந்தை ராகுலை அதிசய குழந்தையாகவே மருத்துவர்கள் பார்த்தனர். இதனையடுத்து ராகுல், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு நேற்று இரவு கொண்டு வரப்பட்டான். கீழ்ப்பாக்கம் மருத்துவமனை முதல்வர் ராமகிருஷ்ணன் மேற்பார்வையில் ராகுல் உடல் முழுவதும் பரிசோதனை செய்யப்பட்டது. மிரண்ட மருத்துவர்கள் குழந்தை தீப்பற்றி எரிவது குறித்து பெற்றோர் கூறிய தகவல் சென்னை டாக்டர்களையும் மிரள வைத்துள்ளது. குழந்தைகள் நல வார்டில் சிறப்பு டாக்டர் குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள். குழந்தைகள் நலம், சிறுநீரகம் துறை மற்றும் தோல் நோய் துறை டாக்டர்கள் முழுமையாக இன்று பரிசோதனை செய்தனர். அபூர்வ நோய் குழந்தை ராகுலுக்கு உடலில் தீப்பற்றி எரியும் அபூர்வ நோய் ஏற்பட்டுள்ளது. இது மருத்துவ உலகில் அதிசயம். இப்படிப்பட்ட குழந்தைகள் அரிதாகத்தான் பிறக்கும். அப்படித்தான் ராகுலும் பிறந்துள்ளான். இந்த குழந்தை அதிசய குழந்தை என்றே கூறலாம். தமிழ்நாட்டில் முதன் முதலாக இப்போதுதான் இதுபோன்று அதிசய குழந்தை பிறந்து இருக்கிறது' மருந்து கிடையாது கடந்த 300 ஆண்டுகளில் சுமார் 200 குழந்தைகளுக்கு இந்த நோய் இருந்துள்ளது. இவர்களது உடலில் இருந்து வெளியேறும் ஆல்கஹால் எனப்படும் வாயுவால், உடலில் தீப்பற்றிக் கொள்கிறது. இதற்கு இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. தீவிர கண்காணிப்பில் ராகுல் ராகுலுக்கு தற்போது தீக்காயத்திற்கான பொதுவான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு டாக்டர் மற்றும் நர்ஸ் குழந்தையை கண்காணித்து வருகிறார்கள். ராகுலின் பெற்றோரும் அருகில் இருந்து ராகுலை கவனித்து வருகின்றனர். மீண்டும் உடலில் தீப்பிடிக்காமல் இருக்க தண்ணீர், தீ தடுப்பு சாதனங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளது.நன்றி: தட்ஸ் தமிழ்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து
ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
விசாரனையில் தானாக எரியவில்லை தந்தை இதற்கு காரணமாக இருக்கலாம் என்று உணர்ந்து இனி தீ பிடித்தால் நீதான் பொறுப்பு என்று தந்தையை எச்சரித்து அனுப்பியதாகவும், அதன் பின் குழந்தையின் உடலில் தீ பற்றவில்லை எனவும் பத்திரிகையில் படித்ததாக நினைவு....
ReplyDelete