புகைப்பட ஹைக்கூ 46
புகைப்பட ஹைக்கூ 46
இறங்கி வந்த கடவுள்
குழந்தைகள்
ஊர்வலம்!
மேளதாளம்
ஆட்டம் பாட்டம்
அமர்க்களமான ஆண்டவன் ஊர்வலம்!
மழலைகள் அழைத்ததும்
மகிழ்வோடு கிளம்பினார் கடவுள்
பிள்ளைகள் ஊர்வலம்!
தேரில்லை பல்லக்கில்லை
துட்டும் இல்லை
துவங்கியது கடவுள் பவனி!
பிள்ளைகள்
அன்பில்
கட்டுண்ட கடவுள்!
கரைபுரண்ட உற்சாகத்தில்
மிதந்தார்
கடவுள்!
பிள்ளை
விளையாட்டில்
பிள்ளையார்
காசில்லா
மாசில்லா
ஊர்வலம்
கள்ளம் இல்லா
பிள்ளைகளிடம்
துள்ளி வந்தார் கடவுள்!
ஆடித்திருவிழா
ஆடி மகிழும்
பிள்ளைகள்!
வாண்டுகள் உலகத்தில்
வண்ணமிகு
ஊர்வலம்!
கடவுள்களிடம்
கடன் பட்டார்
கடவுள்!
பிள்ளை விளையாட்டில்
பொம்மை ஆனார்
கடவுள்!
டிஸ்கி} ஏறக்குறைய இரு
வாரங்களுக்கு பிறகு இடும் பதிவு. எனது கணிணி பழுது அடைந்து சரி செய்ய முடியாமல்
போனதால் புது கணிணி வாங்கி முதல் பதிவு இது.
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
நல்லது... நன்றி.....
ReplyDeleteநன்றாக இருக்கிறது.
ReplyDelete