எனக்கா வழி இல்லை? பாப்பா மலர்!
எனக்கா வழி இல்லை? பாப்பா
மலர்!
அந்த வீடு பழங்காலத்து வீடு! வாசலில் பெரிய திண்ணை
அதற்கடுத்து ரேழி எனப்படும் ஒரு சிறு தாழ்வாரம் அதற்கடுத்து கூடம் முற்றம், அறைகள்
பின் வாசல் என நீண்டு இருந்தது. இது மாதிரி வீடுகள் இப்போது கிராமத்தில் எல்லாம் கூட
மறைந்துவிட்டது. அந்த மாதிரியான ஒரு அழகான வீட்டின் திண்ணையில் சாய்வாக அமர்ந்து கொண்டு
ஒரு தாத்தா தன் பேரன் பேத்திகளுக்கு கதைச் சொல்லிக் கொண்டிருந்தார்.
இதெல்லாம் இப்போது நாம் கதைகளில்தான் படிக்கிறோம்!
பிள்ளைகள் பள்ளியில் இருந்து வந்ததும் டியுசன், அப்புறம் ஹோம் ஒர்க், அப்புறம் கார்டூன்
சேனல் என மாறிவிட்டனர் இப்போது. வீடுகளில் பெரியவர்களும் இருப்பதில்லை! அம்மா அப்பாவோடு
சரி! அப்படியே ஒன்றிரண்டு ச்வீட்டில் பெரியவர்கள் இருந்தாலும் அவர்களோடு பேச பிள்ளைகள்
தயாராக இருப்பதில்லை! எங்கள் காலத்தில் எல்லாம் தாத்தா பாட்டிகள் இந்த மாதிரி இரவு
நேரத்திலோ சாயங்கால பொழுதிலோ பேரன் பேத்திகளை அமர்த்திக்க் கொண்டு புராணக் கதைகள்,
விக்ரமாதித்தன் வேதாளம்,மதனகாமராஜன் கதை என பல சுவையான கதைகளை சொல்லுவார்கள்.
அப்படி ஒரு தாத்தாதான் இப்போது இந்த கதையில் தன்
பிள்ளைகளுக்கு கதை சொல்லிக் கொண்டு இருந்தார். நமக்கு அவர் சொல்லும் கதை தேவையில்லை!
அவர் கதை சொல்லும் போது என்ன நடக்கிறது என்று பார்ப்போம்!
அந்த தாத்தா கதை சொல்லிக் கொண்டிருக்கும் போது
அந்த பக்கமாக சுவற்றோரத்தில் ஒரு சிற்றெரும்பு வந்தது. சிற்றெரும்பு என்றாலும் அது
மகா கர்வம் பிடித்த எறும்பு. தன்னுடைய ஆற்றல் மீது அதற்கு அபார நம்பிக்கை! அது பிறந்த
போது யாரோ சொல்லிவிட்டார்களாம் ஒரு யானையைக் கூட கொல்லக் கூடிய வலிமை நமக்குண்டு என்று.
அதனால் அது மிகவும் தெனாவட்டாக நடந்துகொள்ளும். யானையையே வெல்லக் கூடிய நான் யாருக்கு
பயப்பட வேண்டும்? என்று மிகவும் வேகமாக ஊர்ந்து வந்தது சிற்றெரும்பு.
பேரனுக்கு கதைச் சொல்லிக் கொண்டிருந்த தாத்தா
தன் முதுகை அந்த சுவற்றில் பதித்திருந்தார். சாய்வாக அமர்ந்திருந்த அவரது முதுகு எறும்புக்கு
வழிவிட மறுத்தது. எறும்பால் அந்த தடையை மீறிச் செல்ல முடியவில்லை! சுற்றிக் கொண்டு
செல்ல அந்த எறும்புக்கு மனமில்லை!
எறும்புக்கு கோபம் கோபமாக வந்தது. ஒரு பெரிய
யானையையே கொல்லக்கூடிய எனக்கா வழி இல்லை! வழிவிட மறுக்கும் உன்னை என்ன செய்கிறேன் பார்!
என்று கறுவியது. தனது சிவந்த கொடுக்கால் தாத்தாவை கடித்தது. சுவாரஸ்யமாக கதைச் சொல்லிக்
கொண்டிருந்த தாத்தாவிற்கு எறும்பின் கடி எரிச்சலை ஏற்படுத்தியது.
சே! சதா இந்த எறும்புகளோட ஒரே ரோதனையா போச்சு!
என்று முதுகில் தட்டி எறும்பை பிடித்து எடுத்து நசுக்கிவிட்டார்.
எறும்பு தன் கர்வத்தால் உயிரை இழந்தது!
நீதி: அகம்பாவம் ஆளை வீழ்த்தும்!
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவுகுறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
சிறுவர்களுக்கான கதையும் கருத்தும் அருமை
ReplyDeleteமிகவும் ரசித்துப்படித்தேன்
வாழ்த்துக்கள்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா!
Deleteசின்னக்கதை,சிறப்பான கதை
ReplyDeleteநன்றி ஐயா!
Deleteஅன்பின் சுரேஷ் - சிறிய கதையாயினும் அகம்பாவம் ஆளை வீழ்த்தும் என்ற கருத்தினை அடிப்படையாகக் கொண்ட கதை - அருமை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஅன்பின் சுரேஷ் - 1250 பதிவுகளூக்கு மேல் எழுதி உள்ள திறமை பாராட்டுக்க்குரியது. வலைச்சரம் ( http://blogintamil.blogspot.com ) பற்றி அறிந்திருக்கலாம் - மின்னஞ்சல் முகவரி தருக - தொடர்பு கொள்வோம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா - cheenakay@gmail.com
ReplyDeleteவாழ்த்திற்கு மிக்க நன்றி ஐயா! வலைச்சரம் பற்றி அறியாதோர் உண்டா? இரண்டு தினங்களாக உடல் நலம் சீராக இல்லாமையால் அதிக நேரம் இணையத்தில் செலவிட முடியவில்லை! விரைவில் தொடர்பு கொள்கிறேன்! எனது மின்னஞ்சல் முகவரி thalir.ssb@gmail.com. மிக்க நன்றி ஐயா!
Delete