புகைப்பட ஹைக்கூ 47

புகைப்பட ஹைக்கூ 47


உறைவிடம் இல்லாதவர்களிடம்
உறைந்து கிடக்கிறது
அன்பு!

வற்றிய பூமியில்
ஊற்றெடுத்தது
வற்றாத பாசம்!

நடைபாதையில்
நடப்பட்டது
அன்பு!

ஒளிந்து கொண்ட
பாசம் வெளிப்பட்டது
நடைபாதை சிறுவர்கள்!

உடை இல்லாவிட்டாலும்
தடைபடவில்லை பாசம்
வீதியில் சிறுவர்கள்!

பாச நிழலில்
இளைப்பாறியது
குழந்தை!

வறுமையிலும்
வளர்ந்து நிற்கிறது
பாசம்!

ஊட்டி வளர்க்கப்படுகிறது
குழந்தைமட்டுமல்ல
பாசமும்!

நிறம் கருத்தாலும்
நீர்த்துப்போகவில்லை!
பாசம்!

ஏழையானாலும்
ஏழையாகவில்லை!
பாசம்!

விலையில்லா பொருள்
விளைந்தது
சிறுவனிடம்!

தேடினாலும் கிடைக்காது
தேக்கி வைத்த பாசம்
இயந்திர உலகில்

பொங்கிய மகிழ்ச்சியில்
வீங்கி உடைந்தது
பாசம்!

அள்ளி அணைத்ததும்
அடைபட்டது
அன்பு!

கொடுக்க கொடுக்க
குறையாது
அன்பு!

நீரூற்றாமலே
வேரூன்றியது
அன்பு!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2