புகைப்பட ஹைக்கூ 45


அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!

புகைப்பட ஹைக்கூ 45


மீசைக் கயிற்றில்
தேசக்கொடி!
ஒளிரும் இந்தியா!

சுதந்திரமாய்
ஒரு சுதந்திரதினம்!
மீசையில் கொடி!

விதிகள் மீறினாலும்
வீசவில்லை
தேசபக்தி!

கொடியில் வர்ணம்
நாட்டையும்
விடவில்லை!

 முகத்தில் ஒளிர்வது
 முன்னேறும்
 இந்தியா!

கொடிக்கு வணக்கம்
கொடுத்தது
குழந்தை மனசு!

பாசம்
மீசையில் மட்டுமல்ல
தேசத்திடமும்!

பார்த்து வளர்த்த மீசை
பாரத கொடிக்கு
மேசை!

எல்லை மீறியது
மகிழ்ச்சி!
மீசையில் கொடி!

வளரும் பாரதம்
வளர்க்கிறது
மீசையுடன் கொடி!

கொடி படர
இடம் கொடுத்தது
முடி!

முடி சூடா மன்னரிடம்
குடிபுகுந்தது
கொடி!

குடிமகனின்
கொடிப்பாசம்!
மீசையில் கொடி!

சுதந்திரதினத்தில்
சிறைபட்டது
மீசையில் கொடி!

கொடி புகுந்ததால்
குடிபுகுந்தது
மகிழ்ச்சி!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

டிஸ்கி] கணிணி பழுது அடைந்தமையால் நான்குதினங்களாக புதிய பதிவு இடமுடியவில்லை! பிறரது பதிவுகளையும் வாசிக்க முடியவில்லை! பொறுத்தருள்க! நன்றி!


Comments

 1. நல்ல கற்பனைகள். படத்திற்கு பொருத்தம்

  ReplyDelete
 2. கொடிக்கும் மீசைக்கும் வீர வணக்கங்கள் !

  ReplyDelete
 3. அருமை! நல்ல கற்பனை!

  சுதந்திரதின நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. வணக்கம்!

  சுதந்திர வாழ்த்தினைக் சூடுகிறேன்! வாழ்க
  இதந்தரும் வாழ்வில் இனித்து!

  கவிஞர்கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 6

வெற்றி உன் பக்கம்! கவிதை!