தளிர் ஹைக்கூ கவிதைகள்! 24
தளிர் ஹைக்கூ கவிதைகள்!
குளுமை அணைத்ததும்
போர்த்திக் கொண்டது பூமி!
இருட்டு!
மழையில் உதித்தது
சூரியன்!
வாகனமுகப்புவிளக்கு!
ஒளியினைத்தேடி
உயிரினை இழந்தன
ஈசல்கள்!
மஞ்சள் பூசிக்
குளித்தது பூமி!
மாலைவெயில்!
வியர்த்துப் போன மலர்கள்
விசிறிவிடுகின்றன
வண்ணத்துப்பூச்சிகள்!
குழு நடனம் ஆடின
வயல்கள்!
காற்றின் வருகை!
வெட்கமின்றி
பற்றிக்கொண்டது!
செடியில் கொடி!
சூடான சொற்களால்
தீய்ந்து போனது
உறவுகள்!
வெம்மை பீடிக்கையில்
விரட்டி வந்தது
மழை!
சத்தமிட்டே
நல்லபெயர் எடுக்கிறது
பல்லி!
துடைத்து எடுத்தது
வீட்டை
வறுமை!
ஓசையிட்டு
தட்டி எழுப்புகிறது
காற்று!
தலைக்கனம் அதிகமானதால்
தரையில் வீசப்பட்டன
மலர்கள்!
சூரியன் வரைந்த
ஓவியம்!
வானவில்!
கடற்கரை மணலாய்
காலொட்டி வந்தன
பழம் நினைவுகள்!
ஈரக்காலில்
பதியும் தடங்கள்
இனக்கவர்ச்சி!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!
நன்றி!
அனைத்தும் அழகாக உள்ளது... எதார்த்தமானவை....
ReplyDeleteவியர்த்துப் போன மலர்கள்
விசிறிவிடுகின்றன
வண்ணத்துப்பூச்சிகள்!
இது சிறப்பாக அல்லது...
வலைச்சரத்தில் தங்கள் தளத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். வறுமையைப்பற்றிய வரிகள் மிக அழகாகவும் ஆழமாகவும் இருக்கின்றன. வாழ்த்துக்கள்!
ReplyDelete