கடலை வித்து இருபத்தஞ்சாயிரம் கோடி சம்பாதிச்ச தலைவர்! ஜோக்ஸ்!
சிரிக்க வைத்த சிரிப்புக்கள் பகுதி 9
1. மதுவிலக்குன்னா தலைவருக்கு என்னன்னெ தெரியலை!
எப்படி?
மின்வெட்டு நேரங்களில் வீட்டுக்கு ஒரு
மது ‘விளக்கு’ அரசு தந்தா வெளிச்சமா இருக்குமேங்கிறாரு!
வினோதினி
2. மன்னர்
இப்போது போதையில் இருக்கிறார் என்று எப்படி சொல்கிறீர்?
பார் முரசு கொட்டட்டும் என்று அறிவிக்கிறாரே!
எம்.ஏ.நிவேதா
3. நம்மக் கட்சிக்கு புத்துயிர் வரப்போகுதுன்னு எப்படி
சொல்றே?
மகளிர் அணித்தலைவி முழுகாம இருக்காங்களாம்!
ஆறுமுகம்.
4. கணவன் மனைவி சண்டை நாலு சுவருக்கு நடுவுலதான் இருக்கணும்!
அப்போ தப்பிச்சு ஓடக்கூட எனக்கு உரிமை
இல்லையா?
ஏ. இக்பால்.
5. ஜெயில்ல இருக்கறதை கூட தலைவர் பெருமையா
சொல்லிக்கிறாரே எப்படி?
போலீஸ் பாதுகாப்புல இருக்கேங்கிறாரே!
பா. முத்துராஜ்.
5. குடிமக்களின் நலன் கருதி ஒரு தொழிற்சாலை துவங்குங்கன்னு
சொன்னதை தலைவர் தப்பா புரிஞ்சிகிட்டார்!
6. எப்படி?
ஊறுகாய் கம்பெனி ஆரம்பிச்சிட்டார்!
என். சண்முகம்.
7. கோமா ஸ்டேஜ்ல இருந்த எங்க தலைவரை எப்படி டாக்டர்
பேச வச்சீங்க?
கடைசி முயற்சியா அவர் முன் மைக்கை நீட்டினோம்
பேசிட்டார்!
அதிரை புகாரி
8. நீங்க படிக்கும் போது கண்ணாடி போட்டுக்கங்க!
நான் படிச்சு முடிச்சுட்டு இப்ப வேலைக்கு
போயிக்கிட்டு இருக்கேனே டாக்டர்!
லதா சாந்தி.
9. அவர் ஏன் படிக்கும் போது நெளியறாரு!
புத்தகப்புழுவாம்!
எஸ். செந்தில்
10. பார்க்கிறதுக்கு ஒல்லியா இருக்காரு! இவரைப்போய் குத்துச்சண்டை
சாம்பியன்னு சொல்றீங்களே!
உள்குத்து பண்றதுல இவர் ஒரு நிபுணருங்க!
என்.குமார்.
11. சேவல் கூவறதுக்கு முன்னாடியே எழுந்து என் பையன் வேலையை
ஆரம்பிச்சிடுவான்!
அப்படி என்ன வேலை?
கோழி திருடறதுதான்!
வி. வள்ளி மணாளன்
12. அவர் போலி டாக்டருன்னு எப்படி சொல்றே?
மார்ச்சுவரியிலே ‘பாடியை’ பாக்க வாங்கன்னு
கூப்பிட்டா ஏன் அங்க பனியன் கிடையாதான்னு கேக்கறாரே!
பி. இக்பால்
13. தலைவர் அகிம்சாவாதியா இருக்கலாம் அதுக்காக இப்படியா?
ஏன் என்னாச்சு?
ஆயுத எழுத்துக்கு தடைகோரி வழக்கு போட்டிருக்காரே!
யாழ்நிலா
14. பொய் சொல்லும் போட்டி ஆரம்பித்த முதல் வினாடியே முதல்
போட்டியாளனுக்கே அமைச்சர் பரிசு வழங்கி விட்டாராமே எப்படி?
மன்னரைப் பார்த்து ‘மாவீரனே’ என்று ஆரம்பித்தானாம்!
வெ.ராஜாராமன்.
15. எதிரி நாட்டு மன்னன் மீது நம்ம மன்னர் ஏன் கோபமாய்
இருக்காரு?
இப்போதெல்லாம் சதைப்பற்று இல்லாத மெலிந்த
புறாவையே தூது அனுப்புகிறாராம்!
எஸ்.டிசோசா.
16. மன்னா! தங்களை போல இளவரசரும் வாளை எடுத்துக் கொண்டு
கிளம்பிவிட்டார்!
சபாஷ் போருக்கா?
ஹி.. ஹி.. பேரிச்சம் பழம் வாங்க மன்னா!
என்.உஷாதேவி
17. எதிரி மன்னனின் தலையை சீவிட்டு வாங்கன்னு நீங்க மன்னரிடம்
சொல்லியிருக்க கூடாது மகாராணி!
ஏன் இப்ப என்ன ஆச்சு?
ஒரு சீப்பை கையில் எடுத்துகிட்டு வேகமா
போய்கிட்டு இருக்கார்!
ராசி.
18. கடலை வித்து இருபத்தஞ்சாயிரம் கோடி சம்பாதிச்சேன்னு
தலைவர் சொன்னப்ப நம்பலை!
எப்படி நம்பினே?
அரபிக் கடலையும் வங்கக் கடலையும் யாரோ
ஒரு இளிச்ச வாயன் கிட்ட வித்திருக்காரு!
தீ. ஆதவன்.
19. டார்லிங்! நாளைக்கு நம்ம கல்யாண நாள்.. இதுவரைக்கும்
நான் பார்க்காத இடத்துக்கு என்னைக் கூட்டிட்டு போங்க!
வா செல்லம்! கிச்சனுக்கு போகலாம்!
எம்.விக்னேஷ்.
20. குண்டு பல்பை யூஸ் பண்ணக் கூடாதுன்னு சொல்றாங்க தலைவரே!
சோடா பாட்டில் சைக்கிள் செயின்னு யூஸ்
பண்ணுங்கய்யா!
க.சுப்புராஜ்.
நன்றி! தினமலர்-வாரமலர்
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த
கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
சுவாரசியமான தொகுப்பு
ReplyDeleteஹா.... ஹா....
ReplyDeleteநன்றி...
ஹஹா ...சிரித்தேன்
ReplyDeleteசிறப்பான நகைச்சுவை முத்துக்கள் :) வாழ்த்துக்கள் சகோ .
ReplyDelete