பதிவர் சந்திப்புக்கு ஏன் போக வேண்டும்?

பதிவர் சந்திப்புக்கு ஏன் போக வேண்டும்?


தமிழ் வலைப்பதிவர்களின் இரண்டாம் ஆண்டு சந்திப்பும் பிரபல பதிவர்களின் புத்தக வெளியீடும் வரும் ஞாயிறு அன்று சென்னையில் நடைபெற உள்ளது. பதிவர் சந்திப்பு குறித்து நிறைய பேர் நிறையவும் நிறைவாகவும் எழுதி விட்டார்கள். நேற்று கூட மதுரைத் தமிழன் அவரது பாணியில் சிறப்பாக எழுதி அசத்தி விட்டார்.
    சென்ற வருடம் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை! இந்த வருடமும் உறுதியாக கலந்து கொள்வேன் என்று சொல்வதற்கு இல்லை! இருந்த போதும் பதிவர் சந்திப்பு குறித்து பதிவு வெளியிட ஆசை! ஆனால் எனது கணிணி பழுது அடைந்ததாலும் பணி சுமையினாலும் உடனடியாக பதிவு வெளியிட வில்லை! இதோ இரண்டு நாள்கள்தான் உள்ளன ஏதாவது பதிவிடா விட்டால் எப்படி? பதிவர் சந்திப்புக்கு எதுவும் உடலுழைப்புதான் செய்ய வில்லை! செய்தியை ஒரு நாலு பேருக்காவது பகிர வேண்டாமா? அதனால்தான் இந்த பதிவு.

    முதலில் இந்த வலைபதிவர் சந்திப்பை இரண்டாவது ஆண்டாக வெற்றிகரமாக நடத்தும் குழுவினருக்கு எனது பாராட்டுக்கள். வலைபதிவர்கள் வலையிலும் முகநூலிலும், டிவிட்டர் போன்றவற்றிலும் எண்ணற்றோர் இருப்பினும் அவர்கள் ஒன்றாக குழுமுவது என்பது ஒரு மகத்தான காரியம். தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் விரவிக் கிடக்கும் இந்த பதிவர்கள் ஒருங்கிணைவது முக்கியம். சிதறிக் கிடக்கும் பதிவர்களை ஒருங்கினைக்கும் ஒரு உன்னத முயற்சிதான் பதிவர் சந்திப்பு.
     பல இனங்கள், மொழிகள், உள்ள நாட்டில் வலைபதிவர்கள் தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்த உதவும் சிறப்பான பணியினை இந்த சந்திப்பு உருவாக்க கூடும்.
   ஏதோ பொழுது போக்கிற்காக எழுதுகிறோம்! மேம்போக்காக வெளியிடுகிறோம் என்றில்லாமல் பல்வேறு உபயோககரமான செய்திகளை சுவையாக வெளியிடும் சாமான்யர்களின் கூட்டம்தான் பதிவர்கள் சந்திப்பு கூட்டம்.
    சமிப காலமாக கருத்துசுதந்திரம் பறிக்கப்படும் நிலையில் பதிவர்கள் இருக்கும் சமயத்தில் நாம் ஒருங்கினைந்து நமது வலிமையை காட்ட வேண்டிய நிலையில் இருக்கிறோம். அழைப்பு வந்தது இல்லை! என்றில்லாமல் நமது விழா என்று ஒவ்வொரு பதிவரும் இந்த விழாவில் கலந்து கொள்வதோடு விழா நடக்க உறுதுணையாக இருக்க வேண்டும்.
  இந்த பதிவர் சந்திப்பினால் விளையக் கூடிய நன்மை என்ன? பதிவர்கள் என்றொரு இனம் இருக்கிறது வெளியுலகத்தினருக்கு சொல்ல முடிகிறது.இதுவரை பதிவுகளில் மட்டுமே சந்தித்து கொண்டிருந்த பலர் நேரடியாக சந்தித்து உரையாட முடிகிறது. மூத்தபதிவர்களின் கருத்துக்கள் ஆலோசனைகள் தமது பதிவை திறம்பட மேம்படுத்த உதவும்.
    இப்படி ஒன்று கூடுவதால் நம்மிடையே ஒற்றுமையும் சகோதரத்துவமும் நட்பும் ஏற்படுகிறது. வட மூலையிலும் தென் மூலையிலும் மூலைக்கொன்றாய் இருக்கும் நாம் இந்த சந்திப்பில் சந்தித்து நமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டு அளவளாவி மகிழ முடிகிறது.
  இதெல்லாவற்றையும் விட நமக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கிறது. புதிய நட்புகள் கிடைக்கிறது. மகிழ்ச்சி கிடைக்கிறது. இது போதாதா?
    லாபம் நட்டம் பார்க்காமல் ஒன்றுகூடுவோம்! வென்று காட்டுவோம் நண்பர்களே!

பதிவர் சந்திப்பு குறித்த மேலதிக தகவல்களுக்கு இங்கே செல்லவும்!டிஸ்கி: இவ்வளவு சொல்லி விட்டு நீங்கள் வராமல் இருந்தால் எப்படி? என்பவர்களுக்கு கட்டாயம் வர முயற்சிக்கிறேன்! என்பதே என்பதில்! சிக்கலில் இருந்து விடுபட்டு வர சற்று தாமதமாகலாம் என்று நினைக்கிறேன்!Comments

  1. நீங்கள் நிச்சயம் வர வேண்டும் என்பது எங்கள் விருப்பம்

    ReplyDelete
  2. பதிவர் திருவிழா வெற்றி பெற வாழ்த்துவோம்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 6

வெற்றி உன் பக்கம்! கவிதை!