சிம்ரனை மறக்காத சிங்கத்தமிழன்! சிரிக்கவைத்த சிரிப்புக்கள்! பகுதி 10

 சிரிக்க வைத்த சிரிப்புக்கள் பகுதி 10


1.   தலைவரை அதுக்கு லாயக்கில்லைன்னு கட்சியிலே சொல்லிட்டாங்களாம்!
எதுக்கு?
அது தெரியலைன்னுதான் தலைவர் புலம்புறாரு!
                        என்.உஷாதேவி.
2.   பலதரப்பட்ட மக்களை சந்திச்சிட்டு வருகிறேன்னு தலைவர் சொல்றாரே.. சுற்றுப்பயணம் போயிட்டு வர்றாரோ?
ஜெயில்ல இருந்து  வர்றார்!
                      என். உஷாதேவி.
3.   ஏம்ப்பா ஒரு வாரமா ஆளையே காணோம்.. எங்கே போனே?
நம்ம தலைவருக்கு பிடிவாரண்ட் வந்துச்சுன்னா எங்கெங்கே தலைமறைவா இருக்கலாம்னு லோகேஷன் பார்க்க அனுப்பியிருந்தாருப்பா!
                        எம்.எச். இக்பால்.
4.   மாப்பிள்ளையோட அப்பாவுக்கு சின்னவீடு இருக்கு போலிருக்கே!
எப்படிச் சொல்றே?
பாருங்களேன்! கல்யாண பத்திரிக்கையிலே மூணு வீட்டாரின் அழைப்புனு போட்டிருக்கே!
                     வி.சாரதிடேச்சு.
5.   சாமி! புள்ள ஏதோ காத்துக்கருப்பை பார்த்து பயந்துருச்சுன்னு நினைக்கிறேன்!
பயப்படாதீங்க! திடீர்னு வந்துட்டு போன கரண்ட்டைப்பார்த்து பயந்திருக்கு. சரி பண்ணிரலாம்!
                              கி.ரவிக்குமார்.
6.   ஜெயில்ல இருக்கும் நம்ம தலைவர் ரொம்ப ஓவராத்தான் போறாரு!
எப்படி சொல்றே?
ஜாமீன் கேட்டு ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பி இருக்காரே!
                 
            வீ.விஷ்ணுகுமார்
7.   எங்கள் தலைவருக்கு அடிக்கடி மனசு மாறுற பழக்கமெல்லாம் கிடையாது!
அதுக்காக ‘சிம்ரனை மறக்காத சிங்கத்தமிழனே’ ன்னா ஃப்ளக்ஸ் பேனர் வைப்பீங்க?
                              பர்வீன் யூனுஸ்
8.   அந்த வித்வான் எந்த தைரியத்துல தினமும் ஒரு கச்சேரி பண்றாரு!
கேக்கறதுக்கு யாரும் இல்லைங்கிற தைரியத்திலதான்!
                       பா.ஜெயக்குமார்.
9.   ஆபரேஷன் செஞ்சிகிட்ட உங்க கணவருக்குக் கொஞ்சநாள் ஷாக் நியுஸ் எதுவும் சொல்லாதீங்க!
கரண்ட் வந்துருச்சுன்னு கூடவா டாக்டர்?
                         என்.உஷா தேவி.
10. நான் சாப்பிட வேண்டிய மருந்து பேரை சீட்டில எழுதி தராம என் உடம்புல பச்சை குத்திவிடறீங்களே ஏன் டாக்டர்?
இதை நீங்க தொடர்ந்து பதினைஞ்சு வருஷத்துக்கு சாப்பிடணுமே!
                          சிக்ஸ்முகம்
11. தலைவர் தகவல் அறியும் உரிமை சட்டத்துல என்ன கேட்டார் தெரியுமா?
என்னது?
தமிழ்நாட்டுல எல்லா வசதியும் உள்ள ஜெயில் எதுன்னு?
                   பி.பாலாஜிகணேஷ்
12. சீரியல்ல அப்பா ரோல்ல நடிக்க சான்ஸ் கேட்கறீங்களே உங்களுக்கு என்ன தகுதி இருக்கு?
நான் நாலு குழந்தைக்கு அப்பா சார்!
                          வி.சாரதிடேச்சு.
13. படை வீரர்களே! புறப்பட தயாராகுங்கள்!
மன்னா! நமது படையில் அப்படி யாரும் இல்லையே!
        
         நா.கி.பிரசாத்.
14. நம் மன்னர் சிங்கம் வளர்க்க போகிறாராமே!
அப்படியாவது நம் அரண்மனையில் ஒரு சிங்கம் இருக்கிறது என்று நாடு முழுவதும் செய்தி பரவாதா என்ற நப்பாசைதான்!
                கதா.க. சேரன்.
15. எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்று ஏன் மன்னா சொன்னீர்கள்?
அதற்கு என்ன அமைச்சரே இப்போது?
அந்தப்புரத்தில் ஆண்கள் கூட்டம் அலைமோதுகிறது பாருங்கள்!
                   நா.கி. பிரசாத்.
16. தலைவர் திடீர்னு தோட்டக்காரனை கூப்பிட்டுவெச்சு சத்தம் போடுறாரு?
தோட்டத்துக்கு செம்மண் லாரி வர்றப்பல்லாம் ‘சம்மன் வந்திருக்கு...சம்மன் வந்திருக்கு’ன்னு எகனை மொகனையா சொல்லியிருக்கான்.
                   பெ. கருணை வள்ளல்.
17. நல்லவருமான வல்லவருமான சிறந்தவருமான பெருமை மிக்கவருமான அருமை மிக்கவருமான...
தலைவரு வருமான் விரும்பிங்கிறதை அவன் தெளிவா புரிஞ்சி வெச்சிருக்கான்யா!
                                 வீ.விஷ்ணுகுமார்.
18. அன்பால் பகைவரை வெல்லலாம் அமைச்சரே!
ஆமாம் மன்னா! உங்களால் அவனை அம்பால் வெல்ல  முடியாதல்லவா?
                       ஜக்கி
19. நமது மன்னர் எதற்காக புலவரை நாடு கடத்தி விட்டார்?
மன்னர் பதுங்கு குழியில் ஒளிந்து மீண்டு வந்ததை ‘ அண்டர்கிரவுண்டு ஒண்டரே’ னு நக்கலா கவிதை பாடியிருக்கிறார்!
                     க.சரவணகுமார்.
20.  குழந்தைக்கு தலைவர் வெச்ச பேரு பிடிக்கலைன்னு பதினைஞ்சு நாள் கழிச்சி வந்து சொல்றீங்க அப்படி என்ன பேர் வச்சார்?
நாராயணசாமி!
                    எஸ்.பி வளர்மதி.
நன்றி: ஆனந்தவிகடன்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. நல்ல நகைச்சுவை பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  2. சிரிக்க வைத்த பதிவு. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. நல்ல நகைச்சுவை விருந்து
    படித்து ரசித்தோம்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2