தினமணி கவிதை மணியில் இந்த மாதம் வெளியான எனது கவிதைகள்!

தினமணி கவிதை மணியில் எனது கவிதைகள் இடம்பெறுவதை அறிந்திருப்பீர்கள்! இந்தமாதம் வேலைப்பளுவினால் அதை உங்களுடன் வாரா வாரம் பகிர்ந்து கொள்ள முடியவில்லை! இந்த மாதம் வெளியான  எனது  இரண்டு கவிதைகள் இதோ!

விடையில்லா விடுகதை: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

By கவிதைமணி  |   Published on : 03rd December 2017 06:19 PM  |   அ+அ அ-   |  
வாழ்க்கை ஓர் விடுகதை என்றே
விடைதேடிப் புறப்பட்டேன்!
விடியல்கள் தோறும் புதுப்புது
விடுகதைகள் முளைத்தது!
நித்தம் ஒரு நாடகம்!
சித்தம் போன போக்கில்
பயணிக்கிறது வாழ்க்கை!
ஆடிக்கொண்டிருப்பது நாமென்றாலும்
ஆட்டுவிப்பது நாமில்லை!
நான் நானென்றே சொல்லித்திரிகிறோம்
உண்மையில் “நான்” யாரென்றே
தெரியாமல்!
ஊரெல்லாம் அடித்து சேர்த்து வைத்தவனுக்கும்
பாரெல்லாம் கொடிகட்டி பறப்பவனுக்கும்
நாடெல்லாம் ஓர் குடையில் ஆண்டவனுக்கும்
கூட விடையில்லா விடுகதைதான் வாழ்க்கை!
குவித்த கோடிகள் கூட வருவதில்லை!
கொண்டிட்ட பழிச்சொல் மாண்டும் மறைவதில்லை!
சேர்த்திட்ட புகழுக்கு மறைவில்லை!
சேர்ப்பதும் தோற்பதும் வாழ்வதும் வீழ்வதும்
நம் கையில் இல்லை!
ஒரு நொடியில் உதிக்கும் ஆசை
ஓரு படுகுழியில் தள்ளிவிடும்!
ஒரு சமயம் உச்சியில் ஏற்றிவைக்கும் செயல்!
ஒரு சமயம் பாதாளத்தில் தள்ளிவிடும்!
முடிவெடுப்பது நாம் தான் என்றாலும்
முடிவாவது நம் கையில் இல்லை!
சீராக பயணிக்கும் வாழ்க்கையில்
சிறு தடங்கல்கள் உதிக்கையில்
விடையில்லா விடுகதையாகிவிடுகின்றது
விடை தேடி பயணிப்போம்
விடையில்லா விடுகதையினூடே!






பெண் எனும் பிரபஞ்சம்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு

By கவிதைமணி  |   Published on : 11th December 2017 03:36 PM  |   அ+அ அ-   |  
உயிர்கள் நிறைந்த பிரபஞ்சத்தில்
பல்வேறு பிம்பமமாய் பிரதிபலிக்கிறாள் பெண்!
பிள்ளைக்குத் தாய்!
கணவனுக்கு மனைவி!
தாய் தகப்பனுக்கு மகள்!
உடன் பிறந்தோருக்கு சகோதரி!
தோழனுக்கு தோழி!
எத்தனை எத்தனை பிம்பங்கள்!
பெண் இல்லா வீடு- இரு
கண் இல்லா வீடு!
பெண்ணில்லா பிரபஞ்சம்!
உயிரில்லா வெளி!
தாய்மையும் கருணையும்
தயையும் இரக்கமும் மட்டுமல்ல பெண்!
வீரமும் விவேகமும்
ஆக்கமும் ஆற்றலும்
சக்தியும் சாதனையும்
நீக்கமற நிறைந்தவள்!
தன்னலம் கருதா தாய் அவள்!
சுயநலம் இல்லா சோதி அவள்!
பெண்ணே தெய்வம்!
பெண்ணே ஆக்குபவள்!
பெண்ணே அழிப்பவள்!
ஆற்றலும் அவளே! அடக்கமும் அவளே!
நல்ல ஆண் உருவாவது
நற்பெண்ணாலே!
பிரபஞ்சம் இயக்கும் பிரபஞ்சம்
பெண் சக்தி!
பெண் எனும் பிரபஞ்சம்
இல்லையேல் இயங்காது
இப்பிரபஞ்சம்!


    தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2