வாழ்க்கைச்சக்கரம்! கவிதை!

தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவினர் நடத்திய கவிதைப்போட்டியில் வெற்றிப்பெற்ற என் கவிதை. தேர்ந்தெடுத்த நடுவர் கி. ரவிக்குமார் சாருக்கும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவினருக்கும் மிக்க நன்றி! படக்கவிதை.

கவிதைப் போட்டி!

ஒளிப்படமாய் விளங்குகிறது எங்கள் வாழ்க்கை!
ஒளிப்பதற்கு ஏதும் இல்லை!
இருசக்கர வாகனத்தில்
ஆறு பேர் பயணிக்கிறோம்!
துவிசக்கரம் போல சுழல்கிறது
நடுத்தரமான வாழ்க்கைப் பயணம்!
அதிக சுமைதான்!
ஆனாலும் இழுத்துக் கொண்டே ஓடுகின்றோம்!
சுமக்க கஷ்டப்படுவதில்லை!
சோகங்களைக் கூட சுமைகளிடையே
தொலைத்துவிட்டு
சுகங்களை தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம்!
கல்யாணம் சீர்வரிசை, காதுகுத்து
காய்ச்சல் தலைவலி, திடீர் பயணம்
என்று தினம் தினம் முளைக்கும் புது
சுமைகள் நடுத்தரனின் வாழ்வில்
நாள்தோறும் சகஜமே!
நடுத்தரனுக்கு தோள் கொடுத்து உதவும்
இரு சக்கரப்பிறவி நான்!
என்ன செய்ய? அவன் பாரத்தை குறைக்க
என் மீதும் பாரமேற்றிக் கொள்கிறேன்!
நடுத்தரனின் சுமைகளோடு ஒப்பிட்டால்
என் பாரம் குறைவுதான்!
இறுதி மூச்சிருக்கும் வரை
இழுக்கின்றான் குடும்ப பாரம்!
இறுதி எண்ணெய்த்துளி வரை அவனோடு
அவன் குடும்பம் சுமக்கிறேன்!
இறக்கிவிட்டு பயணிக்கையில் என் பாரம் குறைகிறது
இறுதிவரை குறைவதில்லை அவன் பாரம்!நத்தம். எஸ்.சுரேஷ்பாபு.

Comments

  1. நல்ல கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete
  2. சக சமக்காலப் படைப்பு.
    சில சகலரோடு..திரிக்க ப்பட்டு..ஒரு பொதுவில் திணிக்க‌ப்பட்ட...ஒரு சூழல்.நத்தம் சுரேஷ் பாபு.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2