சென்னை மாப்பிள்ளையே! உனக்கு வரவேற்பில்லையே!
விளையாட்டில் புகலாமா
அரசியல்!
விளையாட விட வேண்டும்
இலங்கை வீரர்களை
முழக்கமிடுகிறது ஒரு கூட்டம்!
இவர்கள் விளையாடாவிட்டால்
இனவெறிதான் தீர்ந்திடுமோ?
தண்டனைதான் கிடைத்திடுமா
கொடுங்கோலன் பக்ஷேவிற்கு!
கூடாது கூடாது! விளையாட்டில்
கூடாது அரசியல்
என்கிறது ஓர் கூட்டம்!
முத்தையா முரளிதரன்
முதலிடம் உலக பந்து வீச்சாளர்களில்
உரைக்கின்றார் சென்னையில்
விளையாடுவேன்!
இலங்கை என்னை தமிழனென்று
ஒதுக்கவில்லை!
அணியில் இடம் கொடுத்து
ஆதரித்தது!
உலகசாதனை புரிய உதவி புரிந்தது
ஒரு நாளும் தமிழர்களை
உதாசீனப்படுத்தியது இல்லை!
இயம்புகின்றார் இப்படி?
இலங்கையின் கொலைபாதகம்
அவர் கண் முன்னே தெரியவில்லை!
காசும் பணமும்தான் தெரிகிறது!
முத்தையா!
உங்கள் வார்த்தைகள் இப்படி
சொத்தையாகலாமா?
ஈழத்து படுகொலைகள்!
உங்கள் கண்ணில் படவில்லையோ!
பச்சிளம் பாலகன் முதல்
பல்லிழந்த பெரியோர் வரை
கொன்று குவித்த இலங்கை
இராணுவம்!
ஆவணமாக்கியுள்ளது சேனல்
நான்கு
என்னும் தொலைக்காட்சி!
தொலைக்காட்சி காட்சிகளைபார்த்து
கூட தொலைந்து போன
உங்கள் மனசாட்சி திரும்பவில்லையோ?
எத்தனை பாதகங்கள் தமிழருக்கு
இழைத்துள்ளான்
ஈழத்து படுபாவி!
என்னே அவன் அகம்பாவம்!
ஏற்றிக் கொளுத்த வேண்டும்
கொடும்பாவி!
மாணவ செல்வங்கள்
ஆணவ ராஜபக்சேவை எதிர்த்து
நடத்தும்
போராட்டம்! இதில் உங்கள்
பங்கு
இல்லையென்றாலும்
பங்குபெற தவிர்த்திருக்கலாம்
ஐபிஎல் கொண்டாட்டம்!
தமிழகத்து மருமகன் எனினும்
தாய் மொழி தமிழ் எனினும்
தாயகம் ஈழம் எனினும்
தாங்குவது சிங்களத்தையா?
உன் தூஸ்ரா எல்லாம்
வெறும் ஜால்ரா வாகி
போனதேன்!
தமிழ் மக்களிடம் உன் ஆண்டவன்
ஆடியிருக்கலாம் விளையாட்டு!
தமிழகத்தில் நீ ஆடலாமோ
கிரிக்கெட்டு!
இரக்கம் சிறிது இருப்பினும்
உறக்கம் வராது
இலங்கை போர்க்குற்ற
காட்சிகள் பார்த்து!
ஹென்றி ஒலேங்கா எனும்
கருப்பின வீரன்
உன்னைப்போல் சாதனை வீரன்
அல்ல!
ராபர்ட் முகாபே எனும் அதிபர்
வெள்ளையருக்கெதிராக புரிந்தான்
ஆட்சி! இதை மாற்ற வேண்டும்
என்று தூக்கி எறிந்தான்
விளையாட்டை!
கருப்பு பேட்ஜ் அணிந்து
விளையாடி
எதிர்ப்பை தெரிவித்தான்
அரசனிடம்
எதிர்ப்பை சம்பாதித்தான்!
நாடு விட்டு நாடு ஓடினான்
ஆனாலும்
நா பிறழ வில்லை! அவனல்லவோ
வீரன்!
நீ தமிழன் எனில் தமிழகத்து
மருமகன்
எனில்
தவிர்த்து விடு ஐபிஎல்லை!
இல்லையெனில்
சென்னை
மாப்பிள்ளையே! உனக்கு இங்கு
வரவேற்பில்லையே!
உன் அரசு தமிழரிடம் உயிரோடு
விளையாடியதால்
இப்போது புகுந்துள்ளது
விளையாட்டில் அரசியல்!
இவ்விளையாட்டில் நீ தூஸ்ரா
இல்லை!
வெறும் தூசே!
டிஸ்கி} நாட்டு நடப்புக்களை
வைத்து சீனி அருமையான கவிதைகள் எழுதி வருகிறார். அவர் பாணியில் என் முயற்சி இது! படித்து
கருத்திட்டு உதவுங்கள்! நன்றி!
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
பணம் கண்ணை மறைத்த பின் வேறென்ன தெரியும்...?
ReplyDeleteபுதிய முயற்சி நன்று...
தொடர வாழ்த்துக்கள் தோழரே...
முத்தையா!
ReplyDeleteஉங்கள் வார்த்தைகள் இப்படி
சொத்தையாகலாமா?.....அருமை
சுரேஷ் கவிதை அருமை.
ReplyDeleteஅவனுக்கு அடுத்தவரை புரிந்துகொள்ளும் அளவுக்கு தன உறவை இனத்தை கூடப் பார்க்காமல் பணத்தை மட்டுமே பார்க்கும் அவனிடம் நல்லாய்தான் கேட்டீர்கள்
ReplyDeletekavithai!
ReplyDeleteunarvukalai killiyathu....!
ennaiyum sonna ungal anpirku aayiram nantrikal....
Anna kavi arumai
ReplyDeleteஇந்தத் தமிழன் முதன் முதலில் இலங்கை அணியில் சேர பட்ட பாட்டை மறந்துவிட்டான். அன்று ஆட்சிக்கட்டில் இருந்த ஜேஆரின் கூட்டம் இவனை உள்ளே விட மறுத்தது. அப்போது சிங்கள அரசின் வால்பிடியாய் இருந்த தொண்டமானின் தயவினால் தான் உள் நுழைய முடிந்தது. அவை எல்லாம் இந்த துஸ்ராவிற்கு மறந்து விட்டது ஆச்சரியமே
ReplyDelete