சலங்கை வலி! பகுதி 3
சலங்கை வலி! பகுதி 3
என்னது மாயா கும்முடிபூண்டி போயிட்டா நான் எப்படி
பங்ஷன் பண்றது? அந்த பொண்ணுதான் மொத்த டான்ஸையும் குத்தகைக்கு எடுத்து வச்சிருக்கு!
ஏன் இதுமாதிரி பண்றாங்க என்றேன்.
நம்ம வ்யும் பண்றது நல்லா இல்லே! அவன பத்தி வீட்டுல
யாரோ சொல்லியிருக்காங்க போல அதான் மாயாவை அனுப்ப மாட்டேங்கிறாங்க!
யாரோ சொல்ல வில்லை! இவனே தான் சொல்லியிருக்கவேண்டும்
என்று என்னுள் தோன்றியது.
தங்கைகளை அழைத்து வேறு
நபர்களை வைத்து நடன நிகழ்ச்சி பண்ண முடியுமா என்று ஆலோசனை செய்தேன். அது சாத்தியம்
இல்லை என்று தோன்றியது. சரி சாட்சிக்காரன் காலில் விழுவதை சண்டைக்காரன் காலில் விழுவதே
மேல் என்று சென்னை நண்பரை அழைத்தேன்.
நண்பா! அந்த பொண்ணு வீடு உனக்கு சொந்தம்தானே!
நீ சொன்னா கேட்பார்கள் இல்லையா? ஊருக்கு போறதை ஒருநாள் தள்ளிப் போடச் சொல்லு! நம்ம
பங்க்ஷன் நடக்குறது உன் கையிலதான் இருக்கு! இல்லேன்னா சங்கம் பேரு கெட்டுடும்! நிறைய பேரு டொனேசன் கொடுத்து
இருக்காங்க! அவங்களுக்கு பதில் சொல்ல முடியாது. நீதான் எப்படியாவது ஹெல்ப் பண்ணி என்னை
காப்பாத்தனும் என்றேன்.
அவனால் முடியாது என்று சொல்ல முடியவில்லை! எங்கள்
சங்கத்தில் அவனும் ஒருவன் அல்லவா? சரி நான் அவங்க வீட்டுல சொல்லி பார்க்கிறேன்! நாளைக்கு
சொல்றேன் என்றான்.
பரபரப்பாக அந்த நாள் கழிந்தது!
மறுநாள் காலை! விடிந்ததும் சென்னை நண்பன் வந்தான்.
அனைவரும் ஆவலுடன் அவன் முகத்தை பார்த்தோம்! விஷயம் சக்ஸஸ் நண்பா! என்றான்.
தேங்ஸ்டா! என்றேன். ஆனா அந்த பொண்ணு இன்னிக்கு
ரிகர்சல் எல்லாம் வராது! நாளைக்கு ஸ்ட்ரெய்ட்டா ப்ரோகிராமுக்குத்தான் வரும் என்றான்.
தங்கைகளை பார்த்தேன்! அவர்கள் பரவாயில்லை! எல்லாம்
டிரெயினிங் ஆகியிருக்கு! அது போதும்! என்றார்கள். சமயத்துல வந்து ஹெல்ப் பண்ணேடா இல்லேன்னா
என் ப்ரோகிராமே பாழாகி இருக்கும் என்றேன். உன்னாலத்தான் இந்த ப்ரொகிராமே நடக்குது என்று
அவனை தூக்கி வைத்தேன். அவனும் மகிழ்ச்சியாக ப்ரோகிராமுக்கு உதவினான்.
மறுநாள் மே ஒன்றாம் தேதி திட்டமிட்டபடி ப்ரோகிராம்
சிறப்பாக நடைபெற்றது. அந்த பெண்ணும் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து கலந்து கொண்டாள்.
நமது ஹீரோவும் வர இருவரும் விழியால் பேசிக் கொண்டார்கள். எனக்கு டென்சன் எகிறியது.
எங்கே ப்ரோகிராம் கெட்டுவிட போகிறது என்று.
ஆனால் சென்னை நண்பர் இதை பெரிது படுத்தவில்லை!
சமயம் கிடைத்தபோது நான் வ்யுமிடம் பார்த்து நடந்துக்கோ நண்பா! உன்னை கவனிக்க ஆள் இருக்கு!
அது என் ப்ரோகிராமையும் பாதிச்சுடக் கூடாது என்றேன்.
இல்லே! அவனால என்ன பண்ண முடியும்! நீங்க கவலைப்படாதீங்க
பாஸ் என்று ஹீரோ கெத்தாக சொன்னாலும் எனக்கு அந்த நிகழ்ச்சி முடியும் வரை டென்சன் தான்.
ஒரு வழியாய் இரவு ஒன்பது மணிக்கு நிகழ்ச்சி முடிந்து போனதும் அனைவருக்கும் பரிசளித்து
விழாவின் சிறப்பு நாயகியான மாயாவிற்கு கூடுதல் பரிசை அளித்தும் சென்னை நண்பருக்கு நினைவு
பரிசு வழங்கியும் விழாவை நிறைவு செய்தோம்.
இதற்கு எங்கள் கிராம மக்கள் திரளாக வந்து நிகழ்ச்சிகளை
கண்டு களித்து சிறப்பித்ததுடன் பாராட்டியும் சென்றார்கள். அப்போது வெளிவந்து கொண்டிருந்த
கதிரவன் இதழில் ஆண்டுவிழா சிறப்பாக நடைபெற்றது என்று செய்தியும் வெளியானது.
சொன்ன படி அந்த பெண் அடுத்த நாள் ஊருக்கு ஜூட்
விட்டுவிட்டது! நம்ம நண்பரும் அதை மறந்து வேறு காதலில் மூழ்கிப் போனார்.
அதென்ன சலங்கை வலி! என்கிறீர்களா?
நடனம் சம்பந்த பட்ட தலைப்பு வேண்டுமல்லவா? அதான்
அந்த பெண் சலங்கை கட்டி ஆட எனக்கல்லவோ வலி வந்தது! அதான்!
இந்த நிகழ்ச்சியை பார்த்த எங்கள் ஊர் இளைஞர் மன்றத்தினர்
அவர்களின் ஆண்டுவிழாவிற்கு இதே ப்ரோகிராம் செய்து தரவேண்டும் என்று கேட்டார்கள். அப்போது
பெற்றோர்களே வலியவந்து தங்கள் பிள்ளைகளை நடனத்தில் சேர்த்துக் கொள்ளும்படியும் கேட்டார்கள்
அப்படி சேர்த்து இன்னும் சிறப்பாக நிகழ்ச்சி செய்து கொடுத்தோம். இப்படி சிறப்பாக வளர்ந்த
சங்கம் நாலணா ஊழலால் கெட்டது.
அதென்ன நாலணா ஊழல்!
நாளை பார்க்கலாம்!
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
சங்கம் வைக்கும் அளவிற்கு சென்றதென்றால் அதனின் அருமை தெரிகிறது...
ReplyDeleteஆவலுடன் தொடர்கிறேன்...
உடல்நலம் சரியாகி விட்டதா...?
அந்த பெண் சலங்கை கட்டி ஆட எனக்கல்லவோ வலி வந்தது! //தொடருங்கள்
ReplyDelete