சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி2
சிரிக்க
வைத்த சிரிப்புக்கள்! பகுதி2
1.நம்ம
ஏட்டையா பத்திரிக்கைகளுக்கு ஜோக் எழுதி அனுப்புவாரா?
எப்படி கபாலி கண்டுபிடிச்ச?
மாமூலுக்கு
பதிலா ஐநூறு அஞ்சல் அட்டை வேணும்னு கேக்கறாரே?
அ. பேச்சியப்பன்.
2.தலைவர்
கம்ப்யூட்டருக்கு தார் பூசி அழிக்கும் போராட்டம் தொடங்கப் போறேன்னு சொல்றாரே ஏன்?
பேஸ்புக்கில யாரோ அவரை பத்தி தாறுமாறா எழுதிக்கிட்டே
இருக்காங்களாம்!
பி. பர்சானா.
3.தமிழகத்திலே
பவர் கட்டை பத்தி கவலைப்படாத ஒரே வியாபார நிறுவனம் எது தெரியுமா?
தெரியலையே?
இருட்டுக்கடை அல்வா கடைதான்!
டி.கே சுகுமார்.
4 சம்பாதிக்கறதுக்கு
தலைவருக்கு மட்டும் எப்படித்தான் புதுபுது ஐடியாவா தோணுதோ!
ஏன் என்ன செய்யறார்?
நாலு ஆசிரமங்களை லீஸுக்கு எடுத்து நடத்தறாரே!
பி. முத்துசாமி.
5.குடிச்சுட்டா
எதைத்தான் பேசறதுன்னு விவஸ்தையே இல்லாம பேசக்கூடாது தலைவரே!
ஏன்யா அப்படிச் சொல்றே?
பின்னே முதல் அமைச்சராக முடியலைன்னா வட்டி அமைச்சராவது
ஆவேன்னு நீங்க சொல்றீங்களே அதுக்கு பேரென்ன?
ராஜ்குமார்.
6. தலைவர்
சிக்கனத்தை கடைபிடிக்க என்ன வழிச் சொல்றார்?
பெட்ரோல்
குண்டுக்கு பதிலா டீசல் குண்டு எரியச் சொல்றார்!
கருணை வள்ளல்.
7.தலைவரோட
அறுபதாம் கல்யாணத்துல தலைவர் எதுக்கு அந்த தொண்டரை அடிச்சாரு?
இப்பவாவது
குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்துக்கங்க தலைவரேன்னு சொன்னாராம்!
சி.
கோபால்.
8.உங்க
அறிவை வச்சு எப்படியாவது பார்லிமெண்ட் தேர்தல்ல ஜெயிச்சாகணும் தலைவரே!
அடப் போய்யா! நான் என்ன வச்சிகிட்டா வஞ்சகம் பண்றேன்!
கு. வின்செண்ட்.
9.ஐ டோண்ட்
நோ ன்னா என்னடா அர்த்தம்?
எனக்குத் தெரியாது!
அட உனக்கும் தெரியாதா?
ப. ராஜேஸ்வரி.
10.டேய்
ரங்கா.. சைக்கிளுக்கு காத்து இல்லைன்னு சொன்னேனே என்ன செஞ்சே?
ஃபேனுக்கு கீழே நிறுத்தி இருக்கிறேன் முதலாளி!
ஸ்ரீரவி ராகுல்.
11. மாப்பிள்ளை
கமல் ரசிகரா இருக்கலாம்... அதுக்காக இப்படியா?
என்ன சொல்றாரு?
கல்யாண
வீடியோவை கல்யாணத்துக்கு முதல் நாளே டி டி. எச் ல ஒளிபரப்பணும்னு சொல்றாரே!
ராம் ஆதிநாராயணன்.
12.தலைவர்
ஏன் கிடைச்ச பத்மஸ்ரீ பட்டத்தை வேண்டாம்னு சொல்லிட்டார்!
உங்களுக்கு பத்மஸ்ரீ கிடைச்சிட்டா தன் பதவியை ராஜினாமா
செய்துடுவேன்னு மகளிர் அணித்தலைவி பயமுறுத்துறாங்களாம்!
என் சண்முகம்.
13.என்ன
சொல்றீங்க இருபது வருஷமா சைக்கிளில் போயும் உடம்பு குறையலையா?
ஆமாங்க டாக்டர் நான் கேரியர்ல உக்காந்துப்பேன்!
ஜே. தனலட்சுமி
14.நம்ம
தலைவர் செய்யற மோசடிக்கு அளவே இல்லாம போச்சு?
என்ன
ஆச்சு?
கரண்ட்
வேண்டி யாகம் நடத்த போறதா சொல்லி நன்கொடை வசூலிச்சிகிட்டிருக்கார்!
சி. சரஸ்வதி.
15.தலைவர்
காற்றாலையை பார்த்துட்டு கோபமாயிட்டாரு!
ஏன்?
கரண்ட் இல்லாத நேரத்துல எதுக்கு இவ்ளோ பேன் அப்படின்னுதான்!
எம். பூர்ணிமா.
16.நான்
சட்டசபைக்கு வருவதில்லை என்று கேலி பேசுவோரை கேட்கிறேன்! நான் கோர்ட்டுக்கு போவது முக்கியமா?
இல்லை சட்டசபைக்கு வருவது முக்கியமா?
அம்பை தேவா.
17பக்தையே!
ஏன் என் தவத்தை கலைத்தாய்?
நம்ம ரெண்டு பேரையும் அரெஸ்ட் பண்ண போலீஸ் வந்திருக்கு!
பர்வீன்
யூனுஸ்
18.அந்த
திருடனுக்கு ஓவர் தெனாவட்டுன்னு எத வச்சி சொல்றீங்க ஏட்டய்யா?
நாங்க பூட்டுல கைவச்சாத்தான் நீங்க வீட்ல கால்
வைக்க முடியும்னு சொல்றானே!
காயல் ஹாஜா.
19.குறுகிய
காலத்துல நீங்க எப்படி ஆயிரம் கோடி சம்பாதிச்சீங்க?
ஜட்ஜ் ஐயா! ஆர்வத்துல கேக்கறீங்களா? இல்ல ஆதங்கத்துல
கேக்கறீங்களா?
பெ. பாண்டியன்.
20.தலைவர்
மலை வாசஸ்தலத்துல ஓய்வு எடுக்கும் போதே நினைச்சேன்!
என்ன ஆச்சு?
அவர் மேல மலை அபகரிப்பு வழக்கு போட்டிருக்காங்க!
சிக்ஸ்
முகம்.
நன்றி:
வாரமலர், சிறுவர்மலர், ஆனந்தவிகடன்.
தங்கள்
வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப் படுத்துங்கள்!
நன்றி!
ஹா...ஹா... நல்லதொரு நகைச்சுவை தொகுப்பு...
ReplyDeleteநன்றி...
நல்ல நகைச்சுவை தொகுப்பு சுரேஷ்.
ReplyDeleteஹிஹி..இப்படியும் பதிவு போடலாமா நல்ல காமெடி
ReplyDeletenalla sirippu...!
ReplyDeletenantri!
//ஐ டோண்ட் நோ ன்னா என்னடா அர்த்தம்?
ReplyDeleteஎனக்குத் தெரியாது!
அட உனக்கும் தெரியாதா? // ஹா ஹா. மிகவும் ரசித்தது