உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 13
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி
13
சென்ற பகுதியில் திசைச்சொற்களை பார்த்தோம்.
படித்து பாராட்டி ஊக்கம் தந்த அனைத்து அன்பர்களுக்கும் நன்றி! இன்று மயங்கொலிப்பிழை
என்ற ஒன்றை பார்க்கப்போகிறோம்.
அதென்ன மயங்கொலிப்பிழை?!
சொற்களை உச்சரிப்பதில் ஏற்படும் ழகற ளகற வேறுபாடுகள் ஒலி வேறுபாடுகள்தான் மயங்கொலிப்
பிழை.
பிழை- திருத்தம்.
1.அறசாங்கம்- அரசாங்கம்
2,அளங்காரம்- அலங்காரம்
3. இறுந்த- இருந்த
4. நூரு- நூறு.
5. புரப்படு- புறப்படு
6.உர்ப்பத்தி- உற்பத்தி
7.கல்லூறி- கல்லூரி
8.திறுடன் திருடன்
9.மதுறை- மதுரை
10.வறவேற்ப்பு- வரவேற்பு
11நேரமிள்ளை- நேரமில்லை
12பொருலை- பொருளை
13.பளர்- பலர்
14.மக்கல்- மக்கள்
15.நெள்- நெல்
16.திருவிளா- திருவிழா
17.குளந்தை- குழந்தை
18.பல்லிக்கூடம்-பள்ளிக்கூடம்
19.தமிள்- தமிழ்
20நள்ளவர்- நல்லவர்.
இவைதான் மயங்கொலிப்பிழைகளும் அதற்கான
திருத்தங்களும். இன்றைய தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் பலர் இப்படித்தான் மயங்கொலி
பேசி நம்மை மகிழ்வித்து கொண்டு இருக்கின்றனர். புழுவை கூண்டுக்குள் அடைத்து கொட்டியே
குளவியாக மாற்றுமாம் குளவி. அது போல நம்மை நல்ல தமிழை மறக்க செய்து வருகின்றன இன்றைய
தொலைக்காட்சிகள் மற்றும் பண்பலை வானொலிகள்.
சரி கொஞ்சம் இலக்கியம் சுவைப்போம்!
கவி காளமேகத்தை அறியாதார் இலர். இரு பொருள் பட பாடுவதிலும் ஆசு கவி இயற்றுவதிலும்
வல்லவரான அவரை திருமலை ராயனின்
அவைப்புலவர் ஒருவர் வம்புக்கு இழுத்து கொட்டைப் பாக்கில்
ஆரம்பித்து களிப்பாக்கில் முடிக்குமாறு ஒரு கவி பாடச் சொன்னார். காளமேகம் சளைத்தவரா
என்ன? அவர் வாயிலிருந்து மேகம் மழை பொழிவது போல பொழிந்த கவி இது.
‘கொட்டைப் பாக்கும் ஒரு கண் கூடையைப் பாக்கும் மடியில்
பிட்டைப் பாக்கும் பாகம் பெண்பாக்கும்- முட்டநெஞ்சே
ஆரணனும்
நாரணனும் ஆதிமறையும் தேடும்
காரணனை கண்டுகளிப் பாக்கு!’
ஆரணன் என்பவன் நான்முகன், நாரணன் என்பவன்
திருமால், ஆதிமறை என்பது வேதம். இம்மூவரும் தேடுகின்ற காரணன் சிவபெருமான். இவரை இம்மூவரும்
எப்படி தரிசித்தனர். மதுரையில் சிவன் பிட்டுக்கு மண் சுமந்த போது. கொட்டைப்பாக்கும்
என்பது கொட்டாகிய மண்வெட்டியை பார்க்கும் கூடையை பார்க்கும் கூடையில் உள்ள மண்ணை பார்க்கும் மடியில் இருந்த பிட்டை பார்க்கும் அத்துடன் தன்னுடைய
இல்லாளாகிய இறைவி உமாதேவியை பார்க்கும் சிவபெருமானை கண்டு களித்தார்கள் என்பது பொருள்.
பார்க்கும் என்பதை பாக்கும் என்று மறுவச் செய்து சொல்விளையாட்டு நடத்தி நம்மை
களிப்பாக்கிவிட்டார் அல்லவா காளமேகம்!
மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் இன்னும்
நிறைய விஷயங்களுடன் சந்திப்போம்! நன்றி!
டிஸ்கி} காய்ச்சல் குறைந்தாலும் உடல்
சோர்வு குறையவில்லை!வெயிலின் தாக்கம் வேறு அதிகம் உள்ளது. அதனால் நிறைய நேரம் கணிணி
முன் செலவிட முடியவில்லை! போதாக் குறைக்கு மின்வெட்டு வேறு. விரைவில் நண்பர்களின் தளத்தினை
சென்று பார்த்து கருத்திடுவேன்! அதுவரை பொறுத்தருள்க! நன்றி!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த
கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள் நன்றி!
விளக்கம் அருமை... தொடருங்கள் நலத்துடன்...
ReplyDeleteகொட்டைப் பாக்கு பாடல் பற்றி தெரிய வைத்தமைக்கு நன்றி ..நல்ல தொடர் பதிவு
ReplyDeleteபயனுள்ள பகிர்வு தொடர வாழ்த்துக்கள் சகோ .
ReplyDeletenalla pakirvu...!
ReplyDeletemikka nantri!
nalamadaiya piraarthikkiren...
மயங்கொலிப்பிழை - மிகவும் பயனுள்ள பதிவு . தொடருங்கள் நன்றி
ReplyDeleteபதிவுகளிலேயே இத்தகைய பிழைகள் மலிந்திருக்கின்றனவே.யாரை நோவது?
ReplyDeleteஅருமையான விளக்கம் அண்ணா தொடருங்கள்
ReplyDelete