முருகர் எப்படி தூங்குவார்?நடிக வேளும் முருக வேலும்! உண்மை நிகழ்ச்சி!


கிருபானந்த வாரியார் திருமணம் ஒன்றிற்குத் தலைமை தாங்கச் சென்றிருந்தார். அங்கே நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் வந்திருந்தார்.

இருவரும் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருக்க திருமண பேச்சுக்கு இடையே நடிகவேள் தனது வழக்கமான கிண்டலுடன், "சாமி. முருகனுக்கு ஆறு தலைன்றானுங்கோ, ராத்திரி தூங்கும் போது எப்படி ஒரு பக்கமா படுப்பாரு.?

கூடி இருந்தவர்கள் அனைவரும் சிரிக்க.. வாரியாருடன் வந்தவர்கள் தர்மசங்கடத்துடன் நெளிந்தார்கள்.

வாரியார் புன்சிரிப்புடன், திருமண ஏற்பாடுகளை பார்த்துக் கொண்டு இருந்த மணமக்களின் தந்தையரை அழைத்து அவர்களிடம் கேட்டார், “நேத்து தூங்கினீங்களா?”

அவர்கள் இருவரும் "இன்னைக்குக் கல்யாணத்தை வச்சுக்கிட்டு எங்க சாமி தூங்கறது” என்றார்கள்.

வாரியார், நடிகவேளைப் பார்த்துச் சொன்னார்.

ஒரு குழந்தையின் வாழ்க்கையை நடத்தி வைக்க நினைச்ச இவங்களுக்கேத் தூக்கம் வரவில்லை... உலக மக்கள் அனைவரும் எம்பெருமானோட குழந்தைகள். அவருக்கு எப்படி தூக்கம் வரும்? அவருக்குத் தூங்கறதுக்கு நேரம் ஏது?" என்றார்.
                                                                                                                                                                                      நன்றி: முகநூல்

Comments

 1. அருமை... நடிகவேள் அன்று தூங்கினாரா...? தெரியவில்லை...

  ReplyDelete
  Replies
  1. சபாஷ்.. சரியான கேள்வி..

   Delete
 2. தங்கள் அருமையான பதிவுகளை TamilBM ( http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.

  ReplyDelete
 3. நடிகவேளுக்கே பல்பா.

  ReplyDelete
 4. கிருபானந்த வாரியார் கிருபானந்த வாரியார்தான்

  ReplyDelete
 5. அட்டகாசம்..

  ReplyDelete
 6. அருமை பிகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. நல்ல கேள்வி நல்ல பதில்
  கேள்விபடாத தகவல்
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2