புகைப்பட ஹைக்கூ 23
புகைப்பட ஹைக்கூ 23
வானம் வரையும்
வரைபடம்!
மின்னல்!
விரிசல் விழுந்ததும்
ஒழுகியது வானம்
மின்னல்!
வெளிச்ச கோடு
வெட்டி மறைந்தது
மின்னல்!
வெட்டிக் கொடுத்தது
கிட்டவில்லை பயன்
மின்னல்!
கோட்டுச்சித்திரம்
போட்டதும் கொட்டியது மழை!
மின்னல்!
இருண்டதும் ஏற்றியது
விளக்கு
மின்னல்!
எல்லைக்கோடு அல்ல
வெளிச்சக் கோடு!
மின்னல்!
வெட்டியதும்
மூடிக்கொண்டார்கள் கண்ணை!
மின்னல்!
மழையை
திருடிச் சென்றது
மின்னல்!
ஒலிஒளி போட்டியில்
முந்திக்கொண்டது
மின்னல்!
மோதலில்
முளைத்த பிள்ளை
மின்னல்! தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!
நன்றி!
மின்னலடிக்கும் வரிகளை ரசித்தேன்...
ReplyDeleteவிரைவில் மழையும் வரட்டும்...
ஏதோ இப்படியாவது மக்கள் சந்தோசப்படட்டும்னு மழைக்கவிதையா.... கொஞ்சம் பயமாத்தானிருக்கு இப்படி கற்பனையிலே மட்டும்தான் பார்க்க முடியுமா?.... கவிதைகள் அழகு
ReplyDeleteவலைப்பூவை திறந்தேன்
ReplyDeleteவாசிக்க காத்திருந்தது மின்னல் ...!
நாங்களும் எழுதுவோம்ல கவிதா, ச்சே கவித...
// விரிசல் விழுந்ததும்
ReplyDeleteஒழுகியது வானம்
மின்னல்!//- ரசனை!
ada ...
ReplyDelete