ஆளுக்கொரு நீதி!
ஆளுக்கொரு நீதி!
ஆளுக்கொரு நீதி
கூடாதிங்கு நியதி-அதனால்
நீதி தேவதை இருக்கிறாள்
கண்ணை மூடி!
ஆனால் நடப்பதோ வெறும் கேலி
இதை வெளியில் சொன்னால்
அவமதிப்பு!
என்பார்கள் ஆனால் இது
அவமானம் அன்றோ!
சஞ்சய் தத்
மும்பை குண்டுவெடிப்பு
குற்றவாளிகளுக்கு அளித்தார்
புகலிடம்!
அதனால் அடைந்தார் சங்கடம்!
நீதிமன்றம் விசாரித்து
செய்தது
ஊர்ஜிதம்!
சிறையில் இருக்க வேண்டும்
ஐந்து ஆண்டு!
நீதி சொன்னது கூண்டு!
அதற்கு தந்தது அவகாசம்!
நடிகர் என்பதால்
பரிந்து வந்தது ஒரு கூட்டம்!
சாமான்யன் செய்தால் தவறு
அதையே சாம்பியன் செய்தால்
வரலாறோ?
கண்ணீர் மல்க அளித்தார்
பேட்டி
சிறைக்கு செல்வேன் என
ஊடகத்தை கூட்டி!
இன்று கேட்கிறார் அவகாசம்!
படப்பிடிப்பு வேலைகள்
இருக்கிறதாம் பத்தவில்லையாம்
அவகாசம்!
இது என்ன நீதி?
உப்பை தின்றவன் தண்ணீர்
குடித்துதானே
ஆகவேண்டும்!
ஏழைக்கொரு நீதி
இவருக்கொரு நீதியா?
இன்னும் எனக்கு புரியவில்லை!
மின்னும் நட்சத்திரம் என்பதால்
மிகுதியாய் பரிவு காட்டலாமோ?
இதே குற்றம் செய்த பிறரெல்லாம்
சிறையில் இருக்கையில் இவருக்கு
மட்டும் விதிவிலக்கோ?
தவறு செய்தது ஊர்ஜிதமானால்
உடனே சிறையில் தள்ளாமல்
தண்டனையை தள்ளிவைப்பதோ?
விளங்க வில்லை எனக்கு!
இதே நீதி எல்லோருக்கும்
உண்டென்றால் உடைந்து போகாதா
பாதுகாப்பு!
வினோதமான தீர்ப்பு
விரைவில் வரவேண்டும் நல்ல
தீர்ப்பு!
டிஸ்கி: தமிழ் புத்தாண்டில்
ஒரு புதிய முடிவு எடுத்துள்ளேன்! தினம் தோறும் பதிவிடுவதை குறைத்து வாரம் ஒன்றிரண்டு
பதிவுகள் மட்டுமே எழுதலாம் என்று முடிவெடுத்துள்ளேன். நிறைய எழுதுவதை விட நிறைவாக எழுதலாம்
என்று எண்ணம். அத்துடன் பணிச்சுமையும் அதிகரித்துள்ளது. உங்களின் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
நன்றி!
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவுகுறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
பணத்தைப் பொறுத்து தான் தீர்ப்பு...
ReplyDeleteநல்லதொரு நிறைவான முடிவுக்கு வாழ்த்துக்கள்...
nalla sinthanai...
ReplyDeletevaazhthukkal...!
இந்தியாவின் இறையான்மையும், நீதியின் மேன்மையும் காக்கப்படவேண்டும்.
ReplyDelete