சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 1


சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 1


1.   ஆச்சர்யமா இருக்கு.. தனி ஆளா எப்படி ஒரே ராத்திரியில பத்து வீடுகள்ல திருடின?
“யுவர் ஆனர்... தேங்க்யூ பார் யுவர் ஹானர்!”
                        வீ. விஷ்ணுகுமார்.
2.   இந்த சபாவுல நேத்து ஒரு மணி நேரம் என்னோட கச்சேரிதான்!
அதான் நடுவுல கொஞ்சம் கூட்டத்தை காணோமா?
                            சிக்ஸ்முகம்
3.   தலைவரே பவர்கட்டுக்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கீங்கே?
யூ.பி.எஸ் போட்டிருக்கேன், தேவைப்பட்டா ஜெனரேட்டர் போடச் சொல்வேன்!
                        வீ. விஷ்ணுகுமார்.
4.   எங்க தலைவர் தனி ஆளா நின்னு ஒரு கட்சியையே தோற்றுவித்தவர். உங்க தலைவர்?
தோற்று கட்சியையே வித்தவர்!
                             சொக்கம்பட்டி தேவதாசன்.
5.   என்னங்க கல்யாண பத்திரிக்கையிலே மாப்பிள்ளை பேரையே காணலை?
நான் தான் சொன்னேனே மாப்பிள்ளைக்கு விளம்பரம்லாம் பிடிக்காதுன்னு!
                               வி. சாரதிடேச்சு.
6.   தலைவர் இவ்வளவு அப்பாவியா?
ஏன் கேட்கிற?
ஜட்ஜ் முன் ஜாமின் தரமுடியாதுன்னதும் பின் ஜாமினாவாது தரக்கூடாதான்னு கெஞ்சினாரே!
                             வி. சகிதா முருகன்.
7.   எவ்வளவு தைரியம் இருந்தா ஜெயில்லருந்து டி.வி சேனலுக்கு மொபைல்ல பேசிகிட்டு இருப்பே?
கோபப்படாதீங்க சார்! பாட்டை உங்க பேருக்குத்தான் டெடிகேட் பண்ணச் சொல்லியிருக்கேன்!
                                        அ.ரியாஸ்
  8. நாங்கள் ஒன்றும் பிரிவினை வாதம் பேசுபவர்கள் அல்ல.. பாளையங்கோட்டையில் இருந்து திஹார் வரை இந்தியா ஒரே தேசம் என்பதை எங்கள் தலைவர் நன்கு உணர்ந்துள்ளார் என்பதைக் கூறிக் கொள்கிறோம்.
                        கிணத்துக்கடவு ரவி.
9.   எத்தனை கோடி  செலவானாலும் சரி நமது சட்டசபையை ஐ.நா சபையாக மாற்றியே தீருவேன் என்று உறுதி கூறுகிறேன்!
                            லெ.நா.சிவகுமார்
10. தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்திருக்கவே கூடாதா ஏன்?
போலி டாக்டர்கள் கைதுன்னு பேப்பர்ல படிச்சதும் தலைமறைவு ஆயிட்டாரே!
                           பர்வீன் யூனூஸ்.
11. இந்த டாக்டர் இதற்கு முன்னலால மாந்தீரீக வேலை பார்த்தவர்னு நினைக்கிறேன்!
எப்படி சொல்றே?
இங்கு நோய்கள் விரட்டப்படும்னு எழுதி வைச்சிருக்காரே!
                                  கி.ரவிக்குமார்
12. விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர்னு தலைவர் சொல்றாரே அப்படியா?
நீ வேற கைதான எல்லா வழக்குகள்லயும் போராடி ஜாமீன் வாங்கி வந்ததைத்தான் அப்படிச் சொல்றார்!
                            பர்வீன் யூனூஸ்.
13. நம் மன்னர் ஏன் பல்லக்கின் கூரை மீது ஏறி அமர்ந்து இருக்கிறார்?
பஸ் டே மாதிரி பல்லக்கு டே கொண்டாடுகிறாராம்!
                              க. கலைவாணன்.
   14.  மெட்ரோ ரயில் திட்டம் தனக்கு பிடிக்கலைன்னு எரிச்சல் படுகிறாரே தலைவர் ஏன்?
   மறியலும் பண்ண முடியாது. டிக்கெட் எடுக்காமலும் போக முடியாது அப்புறம் இது தேவையான்னு கேக்கறார்!
                                தீபா கவுதம்.
 15.தலைவரோட விஞ்ஞான அறிவு கூடி இருக்குன்னு எப்படி சொல்றே?
பல் டாக்டர் கிட்ட போய் தங்கப்பல்லை எடுத்திட்டு ‘ப்ளு டூத்’ பொருத்துங்கன்னு கேட்கிறாரே!
                                            எல் அலமேலு.
 16.அந்த ரூம் கதவுல “களிப்பறை” ன்னு எழுதி இருக்கே ஏன்?
என் புருசன் தமிழ் ஆர்வலர்.. பெட்ரூமைத்தான் அப்படி எழுதி இருக்கார்!
                                          ஒய். ஜாக்குலின்.
 17.நம்ம தலைவர் ஏட்டிக்கு போட்டியா பேசறது ஏற்றுக்கொள்ளும் படியா இல்லே!
 ஏன்?
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாம்புகளுக்கு நாகப்பட்டினத்தில் விழிப்புணர்வு முகாம் நடத்துவோம்னு பேசுறார்.
                               பி. லட்சுமி
18.நம்ம பாகவதர் சம்சாரம் எதுக்கு டாக்டர பார்த்துட்டு போறாங்க?
 காது கேக்காம இருக்க ஆபரேஷன் செய்துகிட்டு போறாங்களாம்!
                                       சக்ரபாணி தேசிகன்.

நன்றி: ஆனந்தவிகடன், வாரமலர்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப் படுத்துங்கள்! நன்றி!


   

Comments

  1. நல்ல நகைச்சுவை துணுக்குகள்.

    ReplyDelete
  2. ஹா.. ஹா... நல்ல நகைச்சுவைகள்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2