விஜய வருஷத்திய பஞ்சாங்க பலன்!
விஜய வருஷத்திய பஞ்சாங்க
பலன்!
தமிழ் புத்தாண்டு சர்ச்சைகளில்
மீண்டு மீண்டும் சித்திரை ஒன்றாம் நாள் தமிழ் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சர்ச்சைகள் இருக்கட்டும் இந்த தமிழ் ஆண்டு மக்களுக்கு எப்படி இருக்கும்? மழை பெய்யுமா?
சுபிட்சம் நிலவுமா? என்ற கேள்விகளுக்கு விஜய வருட பஞ்சாங்கங்கள் பலன்கள் சொல்கின்றன.
ஆற்காடு ஸ்ரீ சீதாராம ஹனுமான் சர்வ முகூர்த்த பஞ்சாங்கம்
கூறும் பலன்கள் சிலவற்றை கீழே தொடர்ந்து காண்போம்.
விஜய வருடத்திற்கு கலியப்தம் 5114. நவகிரக ஆதிபத்யங்களில்
ராஜா-குரு மந்திரி சனி, சேனாதிபதி சனி, அர்க்காதிபதி சனி, மேகாதிபதி சனி, தான்யாதிபதி
சந்திரன், இரஸாதிபதி குரு பசுக்களின் நாயகர் கோபாலன் இந்த விஜய வருடத்திற்கு நவ நாயகர்களாக
வருவதால் இந்த ஆண்டு நல்ல மழை பெய்யும். மத்திய-மாநில அரசுகளில் புதிய புதிய திட்டங்கள்
அமுலுக்கு வரும். முக்கிய பதவியில் இருக்கும் தலைவர்களுக்கு பதவியிலே பயம் ஏற்படும்.
இந்த ஆண்டு 11 புயல்கள் உருவாகி அதில் ஆறு புயல்கள் பலவீனமடையும். இந்த ஆண்டு மக்களுக்கு
தெய்வ வழிபாட்டில் அதிக நம்பிக்கை உண்டாகும். தங்கம், கல்நகைகள், வெள்ளி, மாணிக்கம்,
புஷ்ப ராகம் விலைகள் சிறிது குறையும் வாய்ப்பு உண்டு. பணவீக்கம் குறையும்.கட்டிட சாமான்கள்
விலை ஏறும்.இந்திய ராணுவம் வலுப்பெறும்.பொதுவாக நல்ல மழை பொழியும்.
விஜய வருஷத்திய வெண்பா.
மண்ணில் விசய வருட மழைமிகுதி
எண்ணுசிறு தானியங்க ளெங்குமே-நண்ணும்
பயம் பெருகி நொந்து பரிவாரமெல்லாம்
நயங்களின்றி வாடுமென நாட்டு.
பலன்: இந்த விஜய வருசத்தில்
நல்ல மழை பெய்து தானியங்கள் நன்கு விளையும். பயிர்களில் விஷப்பூச்சிகள் குறையும். அரசு
அதிகாரிகள் மக்களுக்கு நன்மை செய்வார்கள். வடதேசத்தில் சிலரினால் பிரிவினை ஏற்படும்.
எங்கும் ஊற்று பெறுக்கினால் புஞ்சை தானியம் விளைச்சல் அதிகரிக்கும். உணவுக்கட்டுப்பாடு
நீங்கும் பஞ்சம் குறையும்.தினமலர் நாளிதழில் வந்துள்ள பலன்கள் கீழே
தமிழ் புத்தாண்டு பிறக்கும் வேளை: ஏப்.14ல் விஜய தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. ஆனாலும், ஏப்.13 சனிக்கிழமை வளர்பிறை சதுர்த்தி, கார்த்திகை நட்சத்திரம் அமிர்தயோக வேளையில் இரவு 11.52 தனுசு லக்னத்திலேயே பிறந்து விடுகிறது. புத்தாண்டு பிறக்கும் நேரத்தின் அடிப்படையில், ஆண்டு முழுதும் நல்லமழை பொழியும் என்றும், விவசாயிகள் நல்ல மகசூல் காண்பர் என்றும் பஞ்சாங்கங்களில் கூறப்பட்டுள்ளது. தமிழ் ஆண்டு அறுபதில் விஜய 27வது ஆண்டாகும். சுபகிரகமான குரு, இந்த ஆண்டின் ராஜாவாக இருக்கிறார். குருவும், சந்திரனும் பலமாக இருப்பதால் இவ்வாண்டில் ராஜயோகம் பெறுபவர்கள் எண்ணிக்கை உயரும்.
புத்தாண்டில் என்ன நடக்கும்?
*பெண் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர்.
*குருவும் சந்திரனும் சம்மந்தப்படுவதால் தட்பவெப்பநிலை சீராக இருக்கும்.
*ஆடி முதல் மார்கழி வரையில் நல்ல மழையும், தைமுதல் ஆனிவரையில் சுமாரான மழையும் பெய்யும்.
*மக்களிடம் தெய்வபக்தி மேலோங்கும்.
*பழைய கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தேறும்.
*ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் சிறப்பாக நடக்கும். ரியல் எஸ்டேட் வியாபாரம் வளர்ச்சி பெறும். நிலமதிப்பு அதிகரிக்கும்.
*தங்கம், வெள்ளி விலை ஏறுவதும் இறங்குவதுமாக நிலையில்லாமல் இருக்கும்.
*மளிகை, தானியம், அரிசி, இயந்திரம், வாகனங்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விலை உயரும். வாசனை திரவியங்களின் விலை குறையும்.
*மணல் பற்றாக்குறை நீங்கும்.
*வங்கி கடனுதவியால் மக்கள் நல்வாழ்வு காண்பர்.
*தொழிலாளர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். மின்சார தடை அதிகரிக்கும்.
*அதிகாரிகள் கருப்பு பணத்தை அதிகளவில் கண்டுபிடிப்பர்.
*மத்திய,மாநிலஅரசுகளுக்கிடை@ய கருத்துவேறுபாடு அதிகரிக்கும்.
*ஏழை மக்களுக்கு அரசு சலுகைகளை வாரி வழங்கும்.
*வனவளம் அதிகரிப்பதால் விலங்குகள் நிம்மதியாக வாழும்.
*அயல்நாட்டு மோகம் குறையும். மீனவர்களின் பிரச்னை தீர அரசு நடவடிக்கை எடுக்கும்.

நன்றி: தினமலர்
விஜய வருடம் நல்ல பலன்களை
நல்கிட ஆண்டவனை வணங்கிடுவோம்! நன்றி!
கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நல்லொழுக்கம், நோயின்மை, முயற்சி, வெற்றி - எனும் 16 வகையான செல்வங்களைப் பெற்று வளமுடன் வாழ, இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎனதினிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள் .
ReplyDelete