அருள்மிகு காரிய சித்தி கணபதி திருக்கோவில் நத்தம் கிராமம்

ஓம் எனும் பிரணவத்தின் பொருள் தெரியாததால் பிரம்மனின் தலையில் குட்டி சிறையில் அடைக்கிறார் பாலமுருகன். அப்படி பிரம்மா சிறைபட்ட தலம் ஆண்டார்குப்பம்.சிவபெருமான் வேண்டுகோளுக்கிணங்கி முருகர் பிரம்மனை விடுவிக்கிறார்.விடுதலையான பிரம்மனுக்கு சிருஷ்டி கை கூடவில்லை.
தந்தையின் கவலையறிந்து நாரதர் கை கொடுக்கமுன் வந்தார்.
                      ஐயனே,முழுமுதல் கடவுளான கணபதியை மறந்ததால் வந்த வினை இது.ஆகையால் தாங்கள் சிறைபட்ட இடத்திற்கு தென்மேற்கே நெல்லிவனம் எனுமிடத்தில் கணபதியை குறித்து தவம் இயற்றுங்கள் காரியம் கைகூடும் என்றார். பிரம்மன் நெல்லி வனம் வந்து  12 ஆண்டுகள் கணபதியை தியானித்து தவம் புரிந்தார். கணபதியும் தவத்திற்கு மெச்சி பிரம்மனுக்கு காட்சி தந்து தடை நீக்கி வரம் தந்து அருளினார்.
                            பிரம்மனின் காரியம் கை கூடியது போல இங்கு வரும் பக்தர்களின் காரியங்கள் கை கூடும் என்பது நம்பிக்கை. திருமணத்தடை,வேலைவாய்ப்பு ,புத்திரப்பேறு ,கல்வித்தடைகள் அகன்று வாழ்வில் வளம் பெறுகும்.
                                 16 சுற்று பிரதட்சணம் சிதறு காய் விடல் போன்ற எளிய பிரார்த்தனைகள் மூலம் நம் கோரிக்கைகள் முன் நிறுத்தபடுகின்றன.









               வழி: சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து கும்மிடி பூண்டி பொன்னேரி செல்லும் பேருந்துகளில் ஏறி பஞ்செட்டி பஸ் நிறுத்தத்தில் இறங்க வேண்டும்  அங்கிருந்து மேற்கே செல்லும் சாலையில் 3 கி.மி தொலைவில் உள்ளது ஆலயம். பஸ் வசதி இல்லை. ஜணப்பன் சத்திரம் கூட்டு ச்சாலையிலிருந்து ஆட்டோ வசதி உண்டு கட்டணம் ரூ 100 . பஸ் ரூட் 58சி,558சி,132,133,112ஏ,113,90,533.

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2