பவுர்ணமியில் ஓர் அமாவாசை
பவுர்ணமியில் ஓர் அமாவாசை!
சிறுகதை எழுதியவர் எஸ்.எஸ்.பி
உலகின் அழகிய கடற்கறைகளுள் ஒன்றான மெரினாவில் சுண்டல்காரன் ஒருவனின் ‘தொணதொணப்பை’ பொருக்க மாட்டாமல் வாங்கிய சுண்டல் பொட்டலத்துடன் மணலில் அமர்ந்திருந்த என்னை அந்த குரல் கலைத்தது.
“ஹாய் சத்யா எப்படி இருக்கே?”
பரிச்சயமான குரலைக்கேட்டு நிமிர்ந்த நான் “ஹலோ,நீ... நீங்க நிலா தானே? நீங்க எப்படி இங்கே?”
“சாட்சாத் நிலாவேதான்! சத்யா சவுக்கியமா?”
“நிலா நீ கல்யாணமாகி மும்பையில இல்ல இருந்தே இப்ப மாற்றல் ஆகி வந்திருக்கியா? இல்ல வெகெஷனா?”
“அதெல்லாம் பழயகதை சத்யா நான் இப்ப மெட்ராஸ்லதான் இருக்கேன் ஆறுமாசமாச்சு சென்னை வந்து” “ஹஸ்பெண்ட் சவுக்கியமா?”
“அவர் போயி பத்து மாசமாச்சு” “என்ன சொல்றீங்க?”
“எஸ் சத்யா, என் புருஷன் இறந்து பத்து மாசமாகுது!” “ஆனா நீங்க?..” “பூவும் பொட்டுமா உன்கிட்ட பேசிட்டிருக்கேன் சந்தோஷமா!..”
“சந்தோஷமாகவா?..” அதிர்ந்தேன். “எஸ்... பூவும் பொட்டும் எடுத்துட்டு வெள்ளை புடவையோட இருக்கிறதல்லாம் அந்தக்காலம் சத்யா! எல்லோரும் ஒருநாள் இறக்க போறோம் இன்னிக்கு அவர்னா நாளைக்கு நான்! இருக்கும் வரைக்கும் வாழ்க்கையை சந்தோஷமா வாழப் பழகனும் சத்யா” நிலாவா பேசுவது என்னால் நம்ப முடியவில்லை.வியந்துபோனேன். “ஆனாலும் இந்த சின்ன வயசுல உனக்கு இப்படி ஆகியிருக்க கூடாது நிலா” “எப்படி ஆச்சு?” மாசிவ் அட்டாக் மடியில படுத்துண்டே போயிட்டார். வாட் எ பிட்டி ஐயம் ஸாரி நிலா இட்ஸ் ஓகே இதெல்லாம் வாழ்க்கையின் நிஜங்கள்.இப்ப எங்க இருக்கே நிலா?
“இப்ப நான் தனியாத்தான் இருக்கேன் அம்மா அப்பா எற்கனவே இல்ல இருந்த ஒரே அண்ணனும் அமெரிக்காவில செட்டில் ஆயிட்டான்.அவர்போனப்புறம் நான் மெட்ராஸ் வந்துட்டேன் நாலு மாசமா தி.நகர்லதான் இருக்கேன்.பக்கத்துல ஒரு கான்வெண்ட்ல டீச்சரா ஒர்க் பண்றேன் பொழுது போகனும்ல”
“ சரி என் சோக கதையையே கேட்டுண்டிருந்தா? உன் லைஃப் எப்படி போகுது கல்யாணம் ஆயிடுச்சா? எத்தன பசங்க?”
“ம்ம்.. ஆயிடுச்சு ஒரு பையன் இருக்கான்” “அப்ப குடும்பஸ்தனா மாறிட்ட எனக்கு பத்திரிக்கை கூட அனுப்பல நான் என்ன பாவியா?” “சேச்சே அதெல்லாம் ஒன்னுமில்ல ஒன்னோட அட்ரஸ் கிடைக்கல” “சரி நேரமாவுதுஇந்தா என் அட்ரஸ் ஒருநாள் ஒய்ஃபையும் பையனையும் கூட்டிட்டுவா பை!”
கடற்கரை இருட்டத்தொடங்கிவிட்டது.நான்பழைய நினைவுகளை அசைபோடத்துவங்கினேன். நானும் நிலாவும் ஓரே காலேஜ்.என்னுடய நெருக்கமான தோழியாக நிலா விளங்கினாள். எனக்கு கடல் கடற்கரை மிகவும் பிடிக்கும். எத்தனயோ நாட்கள் நாங்களிருவரும் பீச்சிற்கு வந்திருக்கிறோம். கல்லூரி வட்டாரமே எங்களைப் பற்றித்தான் பேசியது. காதலர்கள் என்று சொன்னது. எனக்கும் அந்த ஆசைஉண்டு ஆனால் அதை சொல்லத் தயங்கினேன். ஒருநாள் அவளிடம் என் விருப்பத்தை சொல்ல முனைந்தபோது அவள் தன் கல்யாண அழைப்பிதழை நீட்டினாள். அதனால் என் காதலை சொல்லாமல் விட்டுவிட்டேன்.
திருமணத்திற்கு சென்று வாழ்த்தினேன் பம்பாய் மாப்பிள்ளை என்னைவிட வசதி படைத்தவன் நன்றாக இருக்கட்டுமென வாழ்த்தினேன் ஆனால் இன்று நிலாவை விதவைக்கோலத்தில் பார்க்க முடியவில்லை. என்னால் காலத்தின் வேகத்தை புரிந்து கொள்ள முடிய வில்லை.
ஒரு ஞாயிற்றுக் கிழமை நிலாவின் வீட்டிற்குச் சென்றேன். மலர்ந்த முகமாய் ஒய்ஃப் வரலியா சத்யா? என்றாள்.இல்ல நிலா வீட்ல நீ மட்டும்தான் இருக்கியா? குழந்தை எதுவும்?
அவள் கண்கள் கலங்கிவிட்டது.அந்த பாக்கியம் எனக்கில்ல சத்யா என்றாள். சாரி நிலா
நிலா குழந்தைகளை நேசிப்பவள் எங்கே குழ்ந்தைகளை கண்டாலும் தூக்கி கொஞ்சி முத்தமிட்டு எதாவது வாங்கித் தருவாள். அவளுக்கு ஒரு குழந்தையை கடவுள் கொடுக்கவில்லை என்ன கல்மணம் இந்த கடவுளுக்கு?
ஒருநாள் என் வீட்டிற்கு நிறைய விளையாட்டு பொருள்களுடன் வந்து என் பிள்ளையோடு விளையாடினாள்.
அன்று இரவு என் மனைவியிடம் அவளைப்பற்றி சொன்னபோது பாவங்க என்றாள். எனக்கும் பாவாமாகத்தான் இருந்தது.
நிலா அடிக்கடி வீட்டிற்கு வர ஆரம்பித்தாள். பையனுடன் விளையாடி என்னுடன் அரட்டையடித்து மனைவியிடம் சமையல் பழகி என்று அவள் வருகை சகஜமாகிப்போன போது என் மனதில் சலனம் ஏற்பட்டது. இவள் நமக்கு மனைவியாக இருக்க வேண்டியவள் என்ற எண்ணம் மேலோங்க தொடங்கியது. அந்த எண்ணத்தை துடைக்க அவளுடன் பழகுவதை தவிர்க்க முடிவு செய்தேன்.
அன்று அவள் வீட்டிற்கு சென்றேன். “நிலா உன்கிட்ட தனியா பேசனும்” “நாம தனியாத் தானெ இருக்கோம்.” அ... அது. ‘சொல்லுங்க’ “இனிமே நீ என் வீட்டுக்கு வராதே நிலா” “ஏன் ஏன் வரக்கூடாது உங்க ஒய்ஃப் ஏதாவது..” “சேச்சே அவ எதும் சொல்லலே ஆனா.. “என்ன ஆனா ஆவன்னானு சும்மா சொல்லுங்க!” நம்ம காலேஜ் டேஸ்ல நம்மள பத்தி காலேஜ் என்ன சொல்லுச்சு
லவ்வர்ஸ்னு ஆனா அது ஒரு ஜோக்கில்லியா?
அது ஜோக்கில்ல நிலா நான் உன்னை விரும்பினேன் ஆனா அதுக்குள்ள உனக்கு கல்யாணம் நிச்சயமாயிடுச்சு.
நிலாவின் முகத்தில் ஒரு சின்ன மாறுதல். நான் தொடர்ந்தேன். நிலா பழசு உன்ன இப்ப பார்த்தவுடன் ஞாபகத்திற்கு வருதுநிலா உன்ன நான் விரும்பறேன் உன்ன மறக்க முடியில எங்கே என் மனைவிக்கு துரோகம் செஞ்சுடுவோனோன்னு பயமா இருக்குது.நீ இனிமே எங்க வீட்டிற்கு வராதே. முழுமூச்சில் சொல்லி முடிக்க நிலா கை தட்டினாள்.
என்னை தீர்க்க்மாய் பார்த்து சபாஷ் சத்யா நீங்க என்ன இப்பவும் விரும்பறீங்களா? ஆனா நான் எப்பவும் உங்களை விரும்பினது இல்ல ஒரு தோழனாத்தான் பழகி வர்ரேன் இப்ப மட்டுமில்ல எப்பவுமே ஒரு பெண்ணுக்கு தாலி கட்டிய ஒரு குழந்தைக்கு அப்பாவான நீங்க இப்ப கூட படிச்ச ஒரு பெண்ண பாத்ததும் காதல் வசப்பட்டு ஏதேதோ கற்பனய வளர்துகிட்டு... ஒரு பொண்ணு ஆண்கள் கிட்ட சிரிச்சு பழகினாலே காதல்தானா?
எப்படி எப்படி மனைவிக்கு துரோகம் செஞ்சுடுவொம்னு பயமா இருக்கா இப்ப மட்டும் என்ன செய்யறீங்க கட்டின பொண்டாட்டி உயிரோட இருக்கறப்ப அடுத்தவள நினைக்கறதுக்கு பேர் என்ன? கட்டின கணவன் இறந்து போனாலும் அவர தவிர வேற யாரயும் நான் மனசுல நினைச்சதில்ல ஆனா நீங்க ? போங்க சார்போங்க உங்க மனசுல இருக்க அழுக்கை பிளிச்சிங் பவுடர் போட்டு கழுவுங்க மனசில அழுக்க வச்சிகிட்டு வெளியில ஜெண்டில் மேனா நடந்துக்குங்க என்றாள்.
பவுர்ணமி நிலா உதயமாகி வர அந்த நிலவொளியில்அவள் முகம் பிரகாசிக்க என் முகம் மட்டும் அமாவாசையாக இருண்டு கிடந்தது.(முற்றும்)
Comments
Post a Comment