தளிர் அண்ணா கவிதைகள்

     குழந்தை

கோடி வீட்டு கோமளா கண் வைப்பதும்
பக்கத்து வீட்டு பாபுவிடம் பார்த்து பழகவும்
திருட்டு பாலாஜி வந்தால் பொருட்களை மறைக்கவும்
அடுத்த ஊரு மாமிக்கு அளப்பு ஜாஸ்தி என்பதும்
தள்ளி வைப்பதும் குற்றம் காண்பதும்
ஒளிவு மறைவு எதுவும் குழ்ந்தைக்கு கிடையாது.
அதனுலகில் அதற்கு எல்லோரும் “பட்டுத்தாத்தா,பட்டுபாட்டி பட்டு அண்ணா,பட்டு அத்தை”மட்டும் தான்.





அப்பாவின் கட்டில்.

முற்றத்தில் நடு நாயகமாய்
வீற்றிருக்கும் அப்பாவின் கயிற்று கட்டில்.
பர்மா தேக்குல செஞ்சதுடா என்று அவர்
சொல்வதே தனி அழகு.
யாரையும் அதில் அமர விட மாட்டார்
என்னைத் தவிர
வெயில் காலத்தில் வேப்ப மரத்தடி நிழலுக்கும்
அறுவடைக்காலத்தில் களத்து மேட்டிற்கும்
சென்றாலும் அப்பா அதை பராமரித்த விதமே தனி
தளர்ந்த கயிறுகளை இறுக்கும் வித்தயை
பார்க்க எனக்கு மிகவும் பிடிக்கும்.
பின்னோர் நாளில் நீ படுத்துக்கோடா என்று
அப்பா சொன்ன போது என் மகிழ்சிக்கு அளவே இல்லை
காலத்தின் சுழற்சியில் கல்யாணமாகி
மரக்கட்டில் பஞ்சு மெத்தை என மாறிப்போனது படுக்கை.இன்று அப்பாவை போல
மூலையில் கிடக்கிறது அப்பாவின் கட்டில்.

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2