தளிர் அண்ணா கவிதைகள்
ஐயையோ ஹைக்கூ
நட்சத்திரங்கள்
அடி வான பெண்ணே!
உன் புடவையில்
இத்தனை ஜிகினாக்களா?
அமாவாசை
அடி நிலாப்பெண்ணே!
உனக்கு யார் மீது கோபம்
இப்படி முகத்தை திருப்பிக்கொண்டாய்
பனி
பனி மகளே!
காதலன் கதிரவனை கண்டதும்
ஏனிந்த வெட்கம்?
கண்ணிமைப்பதற்குள்
காணாமல் போகிறாய்.
அழகு
மனதை
மயக்கி
அறிவைமழுங்க
செய்யும்
அபாயப்பொறி
கோபம்
உணர்ச்சி
கொந்தளிப்பில்
உள்ளம் புழுங்கி
வீசும் புயல்.
Comments
Post a Comment