கவன ஈர்ப்பு


சிலிண்டர் தட்டுப்பாடு ஏன்?

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் சிலிண்டர் தட்டுப்பாட்டிற்கு காரணம் என்ன? தற்போதைய தமிழக அரசே காரணம். தமிழக அரசின் இலவச காஸ் இணைப்புக்கு பிறகு தமிழகத்தில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது.அதே சமயம் புதிதாக இணைப்பு கேட்டு பெறுவோரும் அதிகரிக்க அதற்கு போதுமான அளவு சிலிண்டர்களை மத்திய அரசு ஓதுக்கீடு செய்ய வேண்டும்.ஆனால் மத்திய அரசு வழக்கமான அளவே ஒதுக்கீடு செய்து வருகிறது.
       தமிழக அரசோ இலவச சிலிண்டர்களை வழங்கி வருகிறது எப்படி? வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு  18 முதல் 20 நாட்களுக்கு வழங்க வேண்டிய சிலிண்டர்கலை நாட்கடத்தி 25நாட்கள் கழித்துதான் பதிவு செய்யவேண்டும் என்று கட்டளையிடும் ஏஜன்சிகள் பதிவு செய்து 15நாட்கள் கழித்தே சிலிண்டர்களை விநியோகம் செய்கின்றன. ஆக குறைந்தபட்சமொரு குடும்பத்திற்கு ஒரு ஆண்டிற்கு வழங்க வேண்டிய 12 சிலிண்டர்களை 40 முதல் 45 நாட்களுக்கு ஒரு சிலிண்டராக மாற்றி வழங்கி ஆண்டிற்கு இரண்டு சிலிண்டர்களை மிச்சம் பிடித்து இலவச பயனாளிகளுக்கு வழங்கி வருகிறது.
     இதனால் செயற்கையாக சிலிண்டர் தட்டுப்பாடுஏற்பட்டு மக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர். இதில் இலவச சிலிண்டர் பெற்றவர்கள் பாடு இன்னும் திண்டாட்டம்.அவர்கள் மூன்று மாதத்திற்கு ஒருமுறைதான் பதிவு செய்ய வேண்டும் என்று காஸ் ஏஜன்சிகள் அறிவுருத்துகின்றன.
       தமிழக அரசின் இந்த கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் வேலையால் அவதிப்படுவது அப்பாவி பொதுஜனமே அதை அறியாமல் இலவச பொருட்களுக்கு அலைவது இன்னும் வேடிக்கையான விஷயம்.
      இலவச பொங்கல் பொருட்கள் வழங்குவதாக அரசு அறிவித்த மறு நாளே முந்திரி,ஏலக்காய், வெல்லம், திராட்சை உள்ளிட்ட பொருட்களின் விலை கூடியது கண்கண்ட உதாரணம். இலவச வீடு வழங்கும் திட்டத்தால் கட்டுமான பொருட்கள் விலையும் கூடிவிட்டது.
  என்று தணியும் இந்த இலவச மோகம்?

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2