தளிர் அண்ணா கவிதைகள்


வளைந்துகொடு!

வளைந்துபார்!
இளைஞா!
வானம் வசப்படும்
நாணல் வளைவதால்தான்
அலைகளை எதிர்த்து
நிற்கிறது
மூங்கில் வளைந்ததால்தான்
வில்லாக மாறிஎதிரியை
வீழ்த்துகிறது.
ஆறு வளைந்ததால்தான்
ஊரெல்லாம் சென்று
நாடு செழிக்கிறது.
நீயும் வளைந்துகொடு
உன்வாழ்க்கை
வளமாகும்.
            சுரேஷ்பாபு.சா.

மார்கழிக்காலை!
பூமகளைத் தழுவிய பனிமகன்
நாணி நழுவிட
வண்டுகள் கீதத்தில் மயங்கிய
மலர்கள்விரிய
வாசலில் பூத்திட்ட வண்ணமலர்
கோலங்கள் சிரித்திட
பூசனைமுடிந்து கோயில்மணி
ஒலித்திட
பூத்தது மார்கழிக்காலை!.


முரண்பாடு.

திரைமறைவில்
சேலை அவிழ்ப்பதால்
நாங்கள் விபச்சாரிகள்
திரையிலே சேலை
அவிழ்த்தால்
அவர்கள்
கலைமாமணிகள்.

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2