அவலம்
பொன்னேரி சாலை சீர் படுமா?
பொன்னேரி திருவள்ளூர் மாவட்டத்தின் ஒர் வட்டம் மட்டுமல்ல.ஓர் தொகுதியும் கூட.வட்டாட்சியர் அலுவலகம் கோர்ட் சில கல்லூரிகள் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் வங்கிகள் அரசு பொது மருத்துவமனை போன்ற முக்கிய அலுவலகங்கள் இங்கு அமைந்துள்ளன. இந்த பேரூரை சுற்றியுள்ள பல கிராமங்கள் இந்த ஊரைத்தான் சார்ந்துள்ளன.
இத்தகைய சிறப்புவாய்ந்த பொன்னேரிக்கு செல்லும் சாலைதான் மிகவும் சீர்கேடு அடைந்து காணப்படுகிறது.அதிலும் தச்சூர்கூட்டுச்சாலைமுதல் பொன்னேரி வரை இந்த சாலை இருக்கிறதா என்றே தெரியாத அளவுக்கு பழுதடைந்து உள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு இருவழிச் சாலையாக மாற்றப்பட்டது.அப்போது இச்சாலை சரிவர போடப்படவில்லை.அதனால் மழையால் அரித்துஆங்காங்கே பெயர்ந்து பள்ளங்களாக காட்சி அளிக்கிறது.
பள்ளங்களை மூட செம்மண் பயன்படுத்தியதால் வாகனங்கள் செல்லும்போது புழுதி பறக்கிறது.இதனால் கனரக வாகனங்கள் செல்லும்போது இரு சக்கர வாகனங்கள் செல்லவே முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இரவில் இந்த வழியில் வர தனி சாகசமே புரிய வேண்டியுள்ளது. புதியவர்கள் இந்த வழியில் வரவே முடியாத அளவுக்கு வழியெங்கும் பள்ளங்கள். கனரக வாகனங்கள் இரு வழியையும் மாற்றி மாற்றி பயன் படுத்துவதால் பாதசாரிகளும் இரு சக்கரவாகன ஓட்டிகளும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு இச்சாலையில் பயணிக்க வேண்டியுள்ளது இதனால் ஒரு பள்ளிச்சிறுமி உட்பட பலர் உயிர் இழந்துள்ளனர்.
மக்களின் அன்றாட வாழ்வுக்கு உறுதுணையாக உள்ள ஒரு நகரத்தின் சாலையை அரசு விரைவில் சீராக்குமா?
Comments
Post a Comment