கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 64.

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 64.


1, தலைவர் போட்டியிடப் போறது இல்லைன்னு சொன்னதும் தொண்டர்கள் எல்லாம் கைதட்டி பாராட்டினாங்களாமே!
  டெபாசிட்டாவது மிஞ்சும்ங்கிற சந்தோஷம்தான்!

2. இப்ப எதுக்கு திடீர்னு உங்க வீட்டுக்காரர் மேல பத்துலட்சத்துக்கு இண்ஷூரன்ஸ் எடுக்கணும் பிடிவாதமா இருக்கிறே!
  எலக்‌ஷன் பிரசார கூட்டத்துக்கு எல்லாம் நிறைய போக ஆரம்பிச்சிட்டாரே!

3. மனைவி பேச்சை கேக்காததாலே வீட்டுல சண்டையா ஆயிருச்சா அப்படி எதை கேக்காம விட்டே?
  அவ ஒரு “கேக்” வேணும்னு கேட்டதை காதில கேக்காம விட்டுட்டேன்!

4. தலைவர் தோத்ததுக்கு காரணம் அவர் வேட்பு மனு தாக்கல் செய்யறப்போ சொத்தே இல்லைன்னு சொன்னதுதான் காரணமா எப்படி சொல்றே?
 சொத்தே இல்லாதவர் எப்படி ஓட்டுக்கு காசு கொடுப்பாருன்னு  அவருக்கு யாரும் ஓட்டு போடலையாம்!

5. தலைவர் எதுக்கு நமத்து போச்சு நமத்துப் போச்சுன்னு புலம்பிக்கிட்டு இருக்கார்?
 நீ வேற நடிகை நமீதா வேறக் கட்சியிலே சேர்ந்ததை தாங்கிக்க முடியாம புலம்பிக்கிட்டு இருக்கார் அவரு…!


6. ஒரு சிக்கலை சொல்ல முடியாம மென்னு முழுங்கிக்கிட்டு இருக்கேன்னு  சொன்னியே அப்படி என்ன சிக்கல்?
  நூடுல்ஸ் தான்!

7. ஹெல்மெட் போட்டுட்டு போனதாலே போலிஸ்கிட்ட மாட்டிக்கிட்டியா ஏன்?
 நாங்க திருட இல்ல  போனோம்!


8. மந்திரியாரே! என் அந்தரங்கத்தை வாட்சப்பில் வீடியோவாக எவனோ போட்டிருக்கிறானாமே!
  குவாலிட்டி சரியாக இல்லை மன்னா! மங்கலாத தெரிகிறது! ஒழுங்காக எடுக்கத் தெரியாத பக்கிப்பயல்….!

9. நம் உளவுத்துறை எதிரியிடம் விலை போய்விட்டது மன்னா?
   இதை விலைகொடுத்து வாங்கும் அளவிற்கு எதிரி பலவீனப்பட்டுவிட்டான் என்பதை நினைக்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது!

10  தலைவர் புதுசா ஒரு கேப்ஷனை உருவாக்கி இருக்காராமே என்ன அது?
  நோட்டாவை பாக்காதீங்க! நோட்டை பாருங்க!ன்னு சொல்லி அடிக்கிறார்.

11.    சில்லறைக் கட்சிகளை கூட்டணியிலே சேர்த்துக்க மாட்டோம்னு  பெரிய கட்சி சொன்னதும் தலைவர் கோபமாயிட்டார்!
   எங்களை மாதிரி ஆளுங்களை சேர்த்துக்கிட்டாதானே உங்களை மாதிரி கோடிகளை சம்பாதிக்க முடியும்னு புலம்பித் தள்ளிட்டார்.


12.   தலைவருக்கு குடும்ப கஷ்டம் அதிகம் போலிருக்கு…!
   எப்படிச் சொல்றே?
பத்து மணிக்கு மேல பேசக்கூடாதுன்னு மைக்க பிடுங்கினதும்
வீட்டுலதான் பேச முடியலைன்னு பார்த்தா வெளியிலேயும் பேச விடமாட்டீங்கிறீங்களேன்னு புலம்பி தீர்த்துட்டார்.

13.   நைட்டு சாப்பாட்டுல கொஞ்சம் உப்பு அதிகமா இருந்துச்சே ஏம்மா?
  அம்மா வீட்டுக்கு போகனும்னு என் வீட்டுக்காரர் அழுதுகிட்டே சமைச்சார் அதனாலதான்!

14.   டூட்டி நர்ஸ் கூட பழகினது தப்பா போச்சா ஏன்?
  டூட்டி கட்டினாத் தான் வீட்டுக்கே போக அனுமதிக்கிறா!


15.    எதிரி வருகின்றான் என்று தெரிந்தவுடன் நமது நால்வகை சேனைகளும் நாலா புறத்திலும்….
   அணிவகுத்து நிற்கிறதா தளபதியாரே!
 தலைதெறித்து ஓடி மறைந்துவிட்டது மன்னா!

16.   தலைவர் பிரசாரத்திலே அப்படியே அனல் தெறிக்குதாமே…!
  அனல் தெறிக்குதோ இல்லையோ அவர் பேசறப்ப எதிர்ல இருக்கிறவங்க எல்லாம் தெறிச்சு ஓடறாங்க!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!




Comments

  1. 1, 2, 4, 8, 10, 15, சிறப்பு நண்பரே ரசித்தேன் வாழ்த்துகள் தேர்தல்வரை இனி சிரிப்பு மழைதான்
    இருந்தாலும் எடுத்தவுடன் வைகோவை இப்படி சொல்லி இருக்கப்படாதூூூூ

    ReplyDelete
  2. சூழ்நிலைக்குகேற்றவாறு நகைச்சுவைகளை அள்ளித் தெளிக்கும் உங்கள் திறமை வியக்க வைக்கிறது. பாராட்டுக்கள்

    ReplyDelete
  3. எல்லாமே அருமை. ரசித்தேன்.

    ReplyDelete
  4. அருமை
    சிரித்தேன்
    ரசித்தேன்
    நன்றி நண்பரே

    ReplyDelete
  5. ரசித்தேன்
    சிரித்தேன்...

    ReplyDelete
  6. அருமையான பகிர்வு

    தங்கள் பதிவுகளை இணைத்து மின்நூல் ஆக்க உதவுங்கள்
    http://tebooks.friendhood.net/t1-topic

    ReplyDelete
  7. அனைத்தும் அருமை. மன்னரின் அந்தரங்கத்தைப் பற்றிய நகைச்சுவையினை அதிகம் ரசித்தேன்.

    ReplyDelete
  8. எல்லாம் தேர்தல் காலம் செய்யும் வேலை! :)

    ReplyDelete
  9. அனைத்தையும் ரசித்தோம் சுரேஷ்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2