கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 63.

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 63.


1.   சிக்னல் கிடைக்கவே மாட்டேங்குதுன்னு உன் ப்ரெண்ட் புலம்பிக்கிட்டே இருக்கானே எந்த கம்பெனி சிம் யூஸ் பண்றான்?
ஊகும்! நீ வேற அவன் லவ் பண்ற பொண்ணுகிட்டே இருந்து சிக்னல் வரலைன்னு புலம்பிக்கிட்டிருக்கான்!

2.   நீங்க எந்த தொகுதியிலே நின்னாலும் மக்கள் ஒரு முடிவோட இருக்காங்க தலைவரே…!
  வெற்றியை அள்ளிக் கொடுப்பாங்களா?
நீங்க வேற டெபாசிட்டை காலி பண்ணி அனுப்ப ரெடியா இருக்காங்கன்னு சொல்ல வந்தேன்!

3.   கூட்டணி வேணாம்னு சொல்றதுக்கு தலைவர் ஏன் இவ்வளோ நேரம் எடுத்துக்கிட்டார்…?
அணி சேராமலேயே அவரோட “வெயிட்டை” காட்டறாராம்!

4.   எதிரிகள் ஒன்று கூடி விட்டார்களாமே நம் படைகள் எப்படி இருக்கிறது தளபதியாரே!
  ”உதிரிகள்” ஆகி பலகாலம் ஆகிவிட்டது மன்னா!


5.   மன்னர் ஏன் புலவர் மேல் கோபமாய் இருக்கிறார்?
எதிரி மீது போர் தொடுக்கும் வேளையில் “ தேறா மன்னா!” என்று பாட ஆரம்பித்தாராம்!

6.   கூட்டணியிலேதான் நிறைய தொகுதிகளை அள்ளி கொடுத்திட்டாங்களே அப்புறமும் ஏன் தலைவர் சோகமா இருக்கார்?
தொகுதியிலே போட்டியிட வேட்பாளர் கிடைக்கவே இல்லையாமே!

7.   எதிரி மன்னர்  கேலியை பார்த்துக்கொண்டு நம் மன்னர் வாளாவிருந்தாரா? ஏன் அப்படி?
பின்னே வாழாதிருக்க முடியாதில்லையா? அதனால்தான் வாளாவிருந்தார்!


8.   தொகுதிக்குள்ள கிடைச்ச வரவேற்பில் தலைவர் ரொம்பவே திகைச்சுப் போயிட்டாராமே?
பின்ன அஞ்சு வருஷம் கழிச்சு ஆளைப் பார்த்ததும் சும்மா ‘தெறிக்க விட்டுட்டாங்க மக்கள்.

9.   டாக்டர் என்னை பத்தி நாலுபேர் நாலுவிதமா பேசறதை தாங்கிக்கவே முடியலை டாக்டர்!
கவலையே படாதீங்க! ஒரே ஆபரேஷன்! அப்புறம் யார் எது சொன்னாலும் உங்கள் காதுலேயே விழாது!

10.  மந்திரியாரே அரசவை இந்த கோடைக்காலத்தில் முழுதும் நிறைந்திருக்கிறதே என்ன விஷயம்?
  ஏசிக் காற்றை ஓசியில் அனுபவிக்கத்தான் இப்படி கூடி இருக்கிறார்கள் மன்னா!

11. ஒரு டாக்டரை வேட்பாளரா அறிவிக்கணும்னு தலைவர் ஏன் உறுதியா நிக்கிறார்? 
  மக்களோட நாடித் துடிப்பை அவர்தான் அறிஞ்சி வைச்சிருப்பாராம்!

12.  தன்னோட தொகுதிக்கு ஏதாவது நல்லது  நடக்கணும்னு தலைவர் விரும்புறாராமே?
    அப்ப போட்டியிடாம ஒதுங்கிடச் சொல்லு!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. ஹாஹாஹ 2, 6, 8, 12 மிகவும் ரசித்தேன் நண்பரே....

    ReplyDelete
  2. அனைத்தையும் ரசித்தேன். அனைத்துமே அருமை, வழக்கம்போல.

    ReplyDelete
  3. ஹஹஹஹஹ் அனைத்தும் ரசித்தோம் சுரேஷ்...6, மற்றும் அரசியல் ஜோக்குகள் எல்லாமே...

    ReplyDelete
  4. ஆஹா அனைத்தும் அருமை,,, தளீர் ஹைக் கூ கவிதைகள் எம் தளத்தில்,, காண வாருங்கள்....

    ReplyDelete
  5. ஹ ஹா ஹா அருமையான நகைச்சுவைகள்
    ரசித்தே சிரித்தோம் நண்பரே....

    பாலமகி பக்கங்கள் தளத்தில் இன்று
    உங்கள் தளம் எனக்கு அறிமுகமானது...
    இதே என் முதல் வருகை உங்கள் தளத்திற்கு...
    தொடர்ந்து வருவேன் தங்கள் தளத்தில்....

    தாங்கள் விரும்பினால் எம் தளத்திற்கு
    வருகை தாருங்கள் நண்பரே....
    http://ajaisunilkarjoseph.blogspot.com

    ReplyDelete
  6. அருமையான சிரிப்புவெடி)))

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2