நான் ரசித்த சிரிப்புக்கள்! 8
நான் ரசித்த சிரிப்புக்கள்! 8
அந்த டாக்டர்கிட்ட போய் தலைவருக்கு வியாதி
இன்னும் அதிகமாயிடுச்சு!
அதுக்காக அவர்மேல ‘நல அபகரிப்பு புகார்’
போடறது சரியில்லை!
பா.ஜெயக்குமார்
தலைவர் சினிமாவுல இருந்து வந்தவர்ங்கறதை
நிருபிச்சிட்டாரு!
எப்படி சொல்ற?
லாக் அப்ல கூட மேக்கப்ல இருக்காறே!
வீ விஷ்ணுகுமார்
மாப்பிள்ளை ஏன் உம்முன்னு இருக்கீங்க?
உங்க பொண்ணை நான் வரதட்சணை வாங்காமக்
கல்யாணம் பண்ணி இருக்கலாம். அதுக்காக என்னை விலையில்லா மாப்பிள்ளைனு சொல்றது
கொஞ்சம் கூட நல்லா இல்லே!
எஸ் மோகன்.
கடைசியாக நீங்கள் வைக்கும் வாதம் என்ன?
இந்த கேஸில் நான் ஜெயிச்சு ஃபீஸ்
வாங்கிட்டு போனாத்தான் என் சம்சாரம் என்னை வீட்டுக்குள்ளேயே விடுவா! தயவு பண்ணுங்க
யுவர் ஆனர்!
கிணத்துகடவு ரவி
அப்பா நான் டாக்டருக்கு படிச்சு உங்களை
காப்பாத்துவேன்!
அடேய், என்னை காப்பாத்தணும்னா நீ சி.பி.ஐக்கு படிக்கணும்டா!
சிக்ஸ்முகம்.
ஹலோ! நான் புறமுதுகிட்டு ஓடி வந்திட்டு
இருக்கேன்..வெந்நீர் போட்டுவை .. ஒத்தடம் கொடுக்கணும்!
அ.ரியாஸ்.
ஆபரேசனுக்கு வந்த பேஷண்டை எதுக்கு நீங்க
டிஸ்சார்ஜ் பண்ணி அனுப்புனீங்க?
நீங்கதானே டாக்டர் அவரை எப்படியாவது
காப்பாத்தணும்னு சொன்னீங்க!
வி.சாரதி டேச்சு
குற்றபத்திரிக்கையை படிச்சிட்டு தலைவர்
என்ன சொல்றார்!
சுவாரஸ்யமா இருக்கு சந்தா கட்டிருன்றார்!
கிணத்துகடவு ரவி
ஸ்கூலுக்கு போகமாட்டேன்னு என் பையன்
அடம்பிடிக்கிறான்!
என்ன படிக்கிறான்?
ஆசிரியரா இருக்கான்!
பாளை பசும்பொன்.
என்ன தலைவரே இது கூடவா தெரியலை.. கோர்ட்ல
கேஸ் நடக்கும்!
சிக்ஸ் முகம்.
நம்ம எம்பி தன்னோட தொகுதி மேம்பாட்டு நிதி
முழுவதையும் ஜெயில் மேம்பாட்டுக்குக் கொடுத்திட்டாரே!
எல்லாம் ஒரு முன்னேற்பாடுதான்!
கிணத்துகடவு ரவி
காயின் போன் மேல ஏன் ஒரு ரூபா காயினை
ஒட்டி வச்சிட்டு போறீங்க?
போன் டெட்டா இருக்கே!
அ.ரியாஸ்.
சட்டசபையில எகிறின தலைவரை எப்படி
அடக்கினாங்க?
‘கட்’னு சொன்னதும் உட்கார்ந்துட்டார்!
அ.ரியாஸ்
கேஸை நினைச்சு கவலைப்படாதீங்க தலைவரே
எப்பவும் நீதியும் நேர்மையும் உண்மையும் தான் ஜெயிக்கும்!
எனக்கு அதை நினைச்சாதான்யா பயமா இருக்கு!
கே. ஆனந்தன்.
ஜெனரல் வார்டுல இருக்க விரும்பறீங்களா?
ஸ்பெஷல் வார்டுல இருக்க விரும்பறீங்களா?
எங்கே வேணா இருக்கேன் டாக்டர் ஆனா நான்
இருக்கணும்!
தஞ்சை தாமு.
நன்றி ஆனந்தவிகடன்.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த
கருத்துக்களை பகிரலாமே வாக்களித்து பிரபலபடுத்தலாமே!
நல்ல தொகுப்பு.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.