தளிர் ஹைக்கூ கவிதைகள்! 6
தளிர் ஹைக்கூ கவிதைகள்!
மனதை மயக்கி
அறிவை மழுங்குவது
இரைச்சலில்
தொலைந்து போனது
மவுனம்!
விட்டு போக நினைக்கையில்
விடாமல் துரத்துகிறது
வெண்ணிலா!
வயிற்றில் நெருப்பு
வலிக்காமல் உலவுகிறது
மின்மினி!
உழைத்து தேய்ந்து
மூலையில் கிடக்கிறது
பகலில் வெளிச்சத்தை
தொலைத்தது
மின்விளக்கு!
எல்லோரும் கூடி
வெட்டினார்கள்!
பிறந்தநாள் கேக்!
சேற்றிலே விளைகிறது
செம்பொன்மணி!
நெற்கதிர்.
யார் துரத்த
வேகமாய் ஓடுகிறது
மேகக்கூட்டம்.
சிரித்தவுடன்
பறிக்கப்பட்டது
செடியில் பூக்கள்!
ஜெயிக்கும் முன்பே
காற்றில் பறந்தன வாக்குறுதிகள்!
ஒலிப்பெருக்கி
ரொம்ப நேரமாய் வாசித்தும்
கேட்கவில்லை!
படத்தில் சரஸ்வதி!
தங்கள் வருகைக்கு நன்றி! கருத்துக்களை பகிரலாமே!
சூப்பர் பாஸ்
ReplyDeleteஅத்தனையும் அற்புதம்.