நான் ரசித்த சிரிப்புக்கள் 7
நான் ரசித்த சிரிப்புக்கள் 7
நடிப்பு வராத நடிகையை ஏன் புக் பண்ணினீங்க?
மடிப்புக்காகத்தான்!
அ.ரியாஸ்
கோயம்புத்தூர்ல கொள்ளை அடிச்சது உன் ஆட்களா?
நமக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது எசமான்!
அ.ரியாஸ்
என் மனைவியைப் பார்த்தா எனக்கு பயமா இருக்குது கை கால் எல்லாம் நடுங்குது டாக்டர்!
வெரிகுட்! அப்படித்தான் இருக்கணும் யூ ஆர் வெரி நார்மல்!
கி ரவிக்குமார்
நீ செய்த தப்புக்கு தண்டணை என்ன தெரியுமா?
நான் சட்டமெல்லாம் படிக்கலை எசமான்!
வி.சாரதிடேச்சு
உன் மாமியாரை நாய் கடிச்சிட்டாமே!
ஆமாம்டி!
ஒருநாள் எங்க வீட்டுக்கு அந்த நாயை அழைச்சிட்டு வாயேன்!
பி.பாலாஜி கணேஷ்.
தலைவர் எப்படி ரயில்வே போலிஸ்கிட்ட மாட்டினார்?
வித் அவுட்டில் வந்த வித்தகனேன்னு கட்சிகாரங்க கோஷம் போட்டு இருக்காங்க!
அ.ரியாஸ்
தலைவர் எதுக்கு அவரோட பையனை இ.என்.டி டாக்டர்கிட்ட கூட்டிட்டு போனாராம்?
அவரோட பையனுக்கு படிப்பு வாசனையே தெரியலையாம்!
வி.சாரதி டேச்சு.
என்ன புலவரே இப்போது எல்லாம் பாட்டுப்பாடி பரிசு பெற வருவதே இல்லை?
பிளாக் எழுதவே நேரம் சரியாக உள்ளது மன்னா!
சிவம்
உங்க கட்சியின் சாதனையா நீங்க எதை நினைக்கறீங்க?
இன்னும் உடையாமல் இருக்கே!
வானவில் மூர்த்தி.
நம்ப தலைவர் பேர் ரொம்ப ரிப்பேர் ஆயிட்டாம்ல!
என்ன நடந்துச்சு?
கோர்ட்டுல சத்தியபிரமாணம் வாங்கறதுக்கு முந்தி அவர் வாயை ஊதிக் காட்டச் சொல்லி இருக்காங்க!
அம்பை தேவா.
சாட்சி சொல்ல கூண்டில் ஏறி நான் மௌன விரதம் என்று எழுதிக் காட்டுவதை இந்த கோர்ட் வன்மையாக கண்டிக்கிறது!
அ.ரியாஸ்
மத்திய அரசு நமக்கு நிதி தராததை கண்டிக்கிறோம்!
தலைவரே நாம எதிர்க்கட்சி நமக்கெல்லாம் எந்த நிதியும் தரமாட்டாங்க!
பா.ஜெயக்குமார்நன்றி குமுதம், ஆனந்த விகடன் வார இதழ்கள்!
Comments
Post a Comment