சினிமாவை பார்த்து காதல் மோகம்: பைக்கை எரித்த சிறுவனுக்கு வலை

சென்னை :சினிமாவை பார்த்து சிறுவர் சிறுமியர் காதலில் சிக்கி சீரழிந்து வருகின்றனர்.

சினிமா பாணியிலேயே, பள்ளி செல்லும் மாணவியரை தொடர்ந்து சென்று, தொல்லை கொடுத்து, இறுதியில் அனைத்தையும் தொலைத்து, சீர்திருத்தப் பள்ளிக்கு செல்கின்றனர் சிறுவர்கள்.திருவொற்றியூர் இந்திராகாந்தி நகர், பேசின் சாலையை சேர்ந்தவர் பிரபாகரன்,40. இவரின் அண்ணன் பெருமாளின் மகள், தனியார் பள்ளியில் பத்தாவது படித்து வந்தார்.பள்ளிக்கு செல்லும்போது, 16 வயது மதிக்கத்தக்க சிறுவன், பின்தொடர்ந்து வருவான். பள்ளி தவிர, மாணவி போகும் மற்ற இடமெல்லாம், சிறுவன் வலம் வந்தான். காதல் மொழி பேசினான்.

சில நாட்களுக்கு முன், சிறுமி பயணித்த ஆட்டோவில் அந்த சிறுவனும் சென்றார். இதையறிந்த சிறுமியின் சித்தப்பா, சிறுவனை எச்சரித்து அனுப்பி உள்ளார்.
இதனால் கோபமடைந்த சிறுவன், எச்சரித்தவரின் வீட்டுக்கு அதிகாலை 4.30 மணிக்கு சென்றான். வீட்டுக் கதவை பலமாக தட்டி, கூச்சல் போட்டான். "சிறுமியின் பின்னால் போகக் கூடாது என்ற சொல்ல, நீ யார்?' என, தகராறில் ஈடுபட்டு, பிரபாகரனின் பைக்கை தீ வைத்து எரித்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.இதுகுறித்த புகாரின்படி, திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி வழக்கு பதிந்து, இருசக்கர வாகனத்தை எரித்த சிறுவனை தேடி வருகிறார். 

நன்றி தினமலர்

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2