ஆரோக்கிய சருமத்திற்கு ஏற்ற அழகான குறிப்புகள்!

உடலின் ஆரோக்கியத்தை சருமம் காட்டிக்கொடுத்துவிடும். உடலின் ஜீரணத்தன்மை சரியாக இருந்தாலே ஆரோக்கியமான சருமம் கிடைக்கும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நன்றாக வெளியேற்றப்பட வேண்டும். அப்பொழுதுதான் சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

நார்ச்சத்து உணவுகள்

நாம் உண்ணும் உணவானது நார்ச்சத்துள்ளதாக இருக்கவேண்டும். இதுவே உடலின் ஜீரணத்தன்மையை அதிகரிக்கும். சருமத்திற்கும் ஆரோக்கியத்தை தரும். ஆப்பிள், மாம்பழம், அன்னாச்சிப்பழம் போன்ற பழங்களில் உயர்தர நார்ச்சத்து உள்ளது. அதேபோல் புருக்கோலி, காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவற்றை உண்பதன் மூலம் உடலுக்கு தேவையான நார்ச்சத்து கிடைக்கும். உணவின் ஜீரணத்தன்மையும் அதிகரிக்கும்.

நல்ல கொழுப்புகள்

அதேபோல் மன அழுத்தமும், தூக்கம் குறைபாடும் சருமத்தை பாதிக்கும் அம்சங்களாம். எனவே தினசரி 8 மணிநேரம் நன்றாக உறங்குங்கள். மன அழுத்தம் இன்றி ரிலக்ஸ்சாக இருங்கள். நல்ல கொழுப்புகள் சருமத்தை பளபளப்பாக்குகிறது. இது இதயத்தையும் பாதுகாக்கிறது. எனவே கடல் உணவுகளை அதிகம் உட்கொள்ளலாம். பளபளப்பான ஆரோக்கியமான சருமம் கிடைக்கும்.

பராமரிப்பு குறிப்புகள்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான சருமம் உள்ளது. அதற்கேற்ப பராமரிக்க வேண்டும். கரடு முரடான திக்கான சருமம் கொண்டவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை அரை டீ ஸ்பூன் எடுத்து தேனுடன் ஒரு டீஸ்பூன் பால் பவுடர் போட்டு கலந்து ‌பேஸ்ட் போல செய்யவும். இதனை முகத்தில் சீராகத் தேய்த்து 20 நிமிடத்திற்கு ஊறவைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவு‌ம். வாரம் ஒருமுறை இவ்வாறு செய்து வர சருமம் மென்மையாகும்.

ஒரு சிலருக்கு முகத்தில் ஆழமான துளைகள் காணப்படும். இவர்கள் சோள மாவுடன் பால் கலந்து அடி‌த்து‌, அ‌தில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து “பேஸ்ட்” செய்து அதை முகத்தில் உடனே தடவிக் கொள்ளவும் சருமம் சீராகும்.

வெள்ளரி பேஸ்ட்

கருப்பு மருக்களைக் கொண்ட சருமத்திற்கு, முட்டையின் வெள்ளைக் கருவை சோள மாவுடன் கலந்து பேஸ்ட் ஆக்கி இதைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது அரை மணி நேரம் வரை தடவவும். பிறகு தூய்மையான நீரில் தேய்த்துத் தேய்த்துக் கழுவவும்.

அனைத்து சருமத்திற்கு‌ம், வெள்ளரி பேஸ்ட் ஏற்றது. வெள்ளரி சாறு கண்களின் ஓரங்களில் உள்ள கரு வளையங்களை நீக்க உதவும். எனவே வெள்ளரிக்காயை பேஸ்ட் செய்து முகத்தி‌ல் தடவவும். இது சருமத்திற்கு பொலிவை ஊட்டுவதோடு குளிர்ச்சியையும் தருகிறது.


நன்றி தட்ஸ் தமிழ்

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2