முருங்கை மரமும் முன்னோக்கிய நினைவுகளும்!
முருங்கை மரமும் முன்னோக்கிய நினைவுகளும்!
ஏழுமலையான் கோயிலுக்கு விளக்கேற்ற போகையிலே
எப்போதும் போல வறவேற்றது எதிரில் நின்ற கணேசன் வீட்டு
ஒற்றை முருங்கை மரம்!
பிள்ளையாய் நானிருக்கும் போதே பிஞ்சு விட்டது அது!
இன்னமும் காய்க்கிறது!
காவிப் பற்கள் சிரிக்க வெத்தலை கேட்கும் நாகம்மா
கிழவி வைத்ததாம் அது! எப்போதும் ஒரு கூட்டம் அதன் கீரை
பறிக்க வைவாள் கணேசன் மனைவி!
விறகு வெட்டப் போய் காலொடிந்த கணேசன் அதனடியில் தான்
அமர்ந்திருப்பான் !
அவன் பிள்ளைகள் அஞ்சாங்காயும் ஆடு புலி ஆட்டமும்
அங்கேதான் ஆடும்!
அதன் அருகேதான் சாயந்தரம் அஞ்சு மணிக்கு சுண்டல்விற்பாரு
அன் டிரெய்னி வாழுமுனி வாத்தியாரு!
சித்ரா பவுர்ணமிக்கு பெருமாளு வீதி உலா வருகையிலே
மரமும் சீரியல் பல்போட ஜொலிக்க அசைந்தாடும்!
நாகம்மாகிழவி பொன பின்னே கணேசனும் போய் சேர்ந்தான்!
அவன் புள்ளைகளும் ஊரு விட்டு போனாலும்
ஓங்கி உயர்ந்து நிற்குது ஒற்றை முருங்கை!
காலங்களும் காட்சிகளும் மாறினாலும்
சாட்சியாய் அங்கே காட்சி தருது ஒற்றை முருங்கை!
இன்னும் எத்தனையோ பேரு மாறியும் மறைந்தும்
விட்டாலும் மாறாம நிக்குது மரமும்
மறக்காத நினைவுகளும்!
தங்கள் வருகைக்கு நன்றி ! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபல படுத்தலாமே!
Comments
Post a Comment