ஓல்டு ஜோக்ஸ் பகுதி 5


ஓல்டு ஜோக்ஸ் பகுதி 5

1.   என்னது கமல் மேல குற்றச்சாட்டு வந்திருக்கா ஏன்?
ஆமாம் தசாவதாரம் ஆடியோ ரிலீசுக்கு ஜாக்கி சான் வேஷத்துல வந்ததும் கமல்தானாம்!
                              பா.ஜெயக்குமார்
2.   என் சம்சாரத்துக்கு பெரிய ராமதாஸுன்னு நினைப்பு!
ஏன்?
என்னை காலையிலே திட்டறா! நைட்ல பாராட்டுறா!
                                சென்னிமலை சி,பி.செந்தில்குமார்.
3.   உங்க ஏரியாவிலே கரண்ட் கட் அதிகமா?
ஆமாங்க! ஒரே “டார்ச்”சர்!
                              எம். பிரபாகரன்.
4.   ஒரே வீட்ல இருந்தும் அத்தையும் நானும் பேசிக்கறதே இல்லை!
தனித்தனி சமையலா!
தனித்தனிச் சேனல்!
                         பர்வதவர்த்தினி.
5.   அமைச்சர் ஏன் மன்னரிடம் அறை வாங்கினார்.
போரில் தோற்ற மன்னரிடம் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் என்று சொன்னாராம்!
                                  எஸ். மோகன்.
6.   அந்த பிச்சைக்காரன் ஒரு வேளை கூட பசி தாங்க மாட்டான் போல இருக்கு!
எப்படி சொல்றீங்க?
அம்மா! சாப்பிட்டு நாலுமணி நேரமாவுதுன்னு சொல்லிப் பிச்சை கேட்கிறானே!
                                      எஸ். சசிகலா.
7.   நம்ம டாக்டர் அபாய கட்டத்தை தாண்டிட்டாரு!
என்ன சொல்றே?
பேங்க் லோன் கட்ட இன்னிக்கு கடைசிநாள்.என்னபண்றதுன்னு முழிச்சிகிட்டு இருந்தாரு. அதுக்குள்ள ஒரு பேஷண்ட் வந்துட்டாரு!
                             பா.ஜெயக்குமார்.
8.   ஐயையோ! தப்பா புரிஞ்சிகிட்டிங்க மன்னா!
முற்றிலும் பாதுகாப்பானதுங்கறதுக்காக போர்க்களத்துல காண்டமெல்லாம் பயன்படுத்த முடியாது!.
                               பெரியகுளம் ரவி.
9.   மன்னர் ஏன் போர்க்களத்திற்கு  மகாராணியையும் அழைத்துச் செல்கிறார்?
எதிரி மன்னனிடம் மகாராணியை  தாலிப் பிச்சை கேட்கச் சொல்லித் தப்பித்துவிடலாம் என்றுதான்!
                                      எஸ். சசிகலா.
10. மன்னா! எதிரியிடம் இருந்து தப்பிக்க ஒரே வழி சரணாகதிதான்!
இல்லைன்னா!
 அதோகதிதான்!
                                     தஞ்சை தாமு.
11. அமைச்சரே இந்த பணியாளன் அரண்மணையில் வேலைக்கு சேர்வதற்கு முன்பு ரவுடியாக இருந்திருப்பான் போல!
எப்படி சொல்கிறீர்கள் அரசே?
யாரங்கே என்று கூப்பிட்டால் “யெஸ் பாஸ்” என்கிறான்!
                                               கே. ஆனந்தன்.
12.  என்ன டாக்டர் ஸ்பெஷல் வார்டுல கொசு கடிக்குது!
ஸ்பெஷல் வார்டுன்னு உங்களுக்கு தெரியும், கொசுவுக்கு தெரியாதே!
                                         வி.சாரதி டேச்சு.
13. சே! நம்ம டாக்டருக்கு இதே வேலையா போச்சு!
ஏண்டீ! என்னாச்சு!
எடுத்த கிட்னியை எங்கேயாவது மறந்து வெச்சிட வேண்டியது.., அப்புறம் ஆஸ்பத்திரி பூரா தேட வேண்டியது. கொஞ்சமாவது பொறுப்பு வேண்டாம்!
                                   சாய்ராம்.
14. பஞ்சமி, அஷ்டமி நவமி மாதிரி நீ ஒண்ணு சொல்லு!
   கவுதமி!
                         சம்பத் குமாரி.
15.  அட நான் உங்க மனைவிதானே! கொஞ்சம் வெட்கப்படாம இறுக்கித்தான் அணைங்களேன்!சேலை கசங்கினாத்தான் என்ன இப்போ?
ஆமா! உனக்கென்ன சொல்லுவே! நாளைக்கு நான் தானே அதை துவைக்கணும்!
                                 ராசி. பன்னீர் செல்வன்.

நன்றி! ஆனந்தவிகடன் பழைய இதழ்கள்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2