பொங்கலுக்கு ரேசனில் ரூபாய் 100 அன்பளிப்பு! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!


பொங்கல் பரிசு ரூ 100 ஜெ. அறிவிப்பு!

தமிழக அரசியல் வாதிகள் எதை மறந்தாலும் இலவசத்தை மறக்கமாட்டார்கள் போல! தமிழக மக்களும் இளிச்சவாயர்கள்! கரண்ட் இல்லை விவசாயம் படுத்துவிட்டது. காவிரியில் தண்ணீர் வரவில்லை என்பதை எல்லாம் மறந்துவிட்டு வழக்கம் போல இலவசத்திற்கு அடிமை ஆகி விடுவார்கள்!
   இந்த இலவச அறிமுகம் முதன் முதலில் எம்.ஜி.ஆர் காலத்தில் அறிமுகம் ஆனது. கதர் தொழிலை கை கொடுத்து தூக்கிவிட கோ- ஆப்டெக்ஸில் வேட்டி புடவைகள் கொள்முதல் செய்து பொங்கல் சமயத்தில் ஏழைகளுக்கு கொடுத்து துவக்கிவைத்தார் அந்த மகராசன் அப்போதே இதில் தில்லுமுல்லுகள் அதிகம்.
   இலவச டீவி கொடுத்து ஆட்சிக்கு வந்த கலைஞர் அய்யா பொங்கல் வைக்க வெல்லமும் அரிசியும் இதர பொருட்களும் கொடுத்து மக்களை மகிழ்ச்சி பொங்க வைத்தார்.
  எதிலுமே ஏட்டிக்கு போட்டியாக செயல்படும் தமிழக முதல்வரம்மா! இப்போது பொங்கல் பண்டிகைக்கு ரேசனில் கார்டு தாரர் அனைவருக்கும் நூறு ரூபாய் தரப்போறாங்க! இதன் மூலம் கவர்மெண்டு காசை வாங்கி கவர்மெண்டுக்கே வருமானம் தரப்போறான் தமிழன். அதாங்க டாஸ்மாக்!
    மக்கள் நல திட்டங்களில் அக்கறை காட்டாது இப்படி இலவசம் கொடுத்தே காலம் தள்ளும் தமிழக அரசை என்ன சொல்லி பாராட்டுவது வார்த்தைகளே வரவில்லை! எப்படியோ புத்தாண்டு தினத்தன்று குடிமக்களை மகிழ்வித்து மகிழ்ந்த அரசு பொங்கலன்றும் குடிக்க காசு கொடுக்கிறது. வாங்கி குடித்து கரண்ட் இல்லாவிட்டாலும்  காவிரியில் தண்ணீர் வராவிட்டாலும் குடியே முழுகி போனாலும் குடியில் முழுகி மனக்கவலை எல்லாம் மறந்து இருக்க இந்த ஐடியா பண்ணியிருக்குது இந்த அரசு.
    இந்த ஐடியா கொடுத்த சிகாமணி யாருன்னு தெரியலை! தெரிஞ்சா அவருக்கு ஒரு கட் அவுட் வைச்சி கும்பிடலாம்.
   தமிழக அரசு பொங்கலுக்கு ரேசனில் கொடுக்கப்போகும் பொருட்கள் பற்றிய அரசு அறிவிப்பு கீழே!
 தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்காக அரிசி பெறும் சுமார் 1 கோடியே 84 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 160 ரூபாய் மதிப்பிலான சிறப்புப் பொங்கல் பரிசு தொகுப்பு ஒன்று அளிக்கப்படும். இந்த தொகுப்பில், 20 ரூபாய் மதிப்பிலான 1 கிலோ பச்சரிசி, 40 ரூபாய் மதிப்பிலான 1 கிலோ சர்க்கரை மற்றும் பொங்கல் பண்டிகைக்காக இதர பொருட்கள் வாங்குவதற்காக 100 ரூபாய் ரொக்கம் ஆகியவை அடங்கும். இந்த தொகுப்பு அந்தந்த நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். இதனால் அரசுக்கு கூடுதலாக 300 கோடி ரூபாய் செலவு ஏற்படும். இதனால், விவசாயிகளின் துயர் துடைக்க வழி வகுப்பதோடு, பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகை செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்"" என்று அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அதனாலே எல்லாத்தையும் மறந்து மகிழ்ச்சியா ரூபா வாங்கிகினு பொங்கலை கொண்டாடுங்கள் மக்களே!
தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. தமிழக அரசியல் வாதிகள் எதை மறந்தாலும் இலவசத்தை மறக்கமாட்டார்கள் போல!
    இதை வைத்துதான் அவர்கள் அரசியலே நடத்துகிறார்கள்.அதுலபோயி நீங்க,,,,,????

    ReplyDelete
  2. வருடா வருடம் பொங்கலுக்கு இப்படிதானே எதையாவது இலவசம் என்கிற பெய்ரில் கொடுக்கிறாங்க.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2