பொங்கல் வாழ்த்து!
பொங்கல் வாழ்த்து!வெண்பனிப் போர்வை விலக்கி

வெங்கதிரோன் வெம்மைக் கூட்ட

மங்கிய உயிர்களெல்லாம் மகிழ்வுற

மங்கள மஞ்சள் அணிந்து வரும்

தங்கத் தை மகளே வருக!

எங்கள் இல்லங்களில்

பொங்கும் மகிழ்ச்சியை அள்ளித் தருக!செந்நெல்லைச் சோறாக்கி

செங்கரும்பு பாகெடுத்து

பொங்கிவரும் புதுப்பாலில் பொங்கலிட்டு

வாசலிலே தோரணங்கள் கோலமிட்டு

பூசனைகள் செய்திடுவோம்!

பொங்கல் நன்னாளில் எங்கும்

மகிழ்ச்சி பொங்கட்டும்!

பொங்கல் வாழ்த்துக்கள்!

Comments

 1. இனிய தமிழ் புத்தாண்டு பொங்கல்த் திருநாள் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவினர்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அருளால் எல்லா நலனும் வளமும் பெருக மகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக இவ்வாண்டு மலர வாழ்த்துகின்றேன் .

  ReplyDelete
 2. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள். கவிதை நன்று

  ReplyDelete
 3. இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !
  நன்கு ப்ரெசென்ட் செய்துள்ளீர்கள் !

  ReplyDelete
 4. இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
  எல்லா வளமும் நலமும் பெற்றுவாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்!

  ReplyDelete
 5. இனிய இணைய பொங்கல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. கவிதை மிக மிக அருமை....உங்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2