தளிர் ஹைக்கூ கவிதைகள் 18


இரவல் நகை!
பாராட்டினார்கள்!
நிலா!


பயந்து
பயப்படுத்துகிறது
பாம்பு!


தொங்கிக் கொண்டே இருக்கிறது
வலிக்கவில்லை!
பல்பு!

 
ஒளித்து வைத்ததை
உடைத்து குடித்தார்கள்!
இளநீர்!

அலைந்து கொண்டே இருக்கிறது
அவதிப்படுகிறோம்
மனசு!

பிள்ளைகள் வளர்கையில்
வயதாகிறது
நமக்கு!

கண்சிமிட்டின
களங்கம் அடையவில்லை!
நட்சத்திரங்கள்!

விளக்கினடியில்
விருந்து
தவளை!


அழுகை சத்தம்!
மகிழ்ந்தார்கள்!
பிரசவம்!

வலி!
இன்பமானது
சுக பிரசவம்
 
மை பூசியதும்
பொட்டு இட்டுக்கொண்டது வானம்!
நிலா!

 
வானில் பிறந்தாலும்
மண்ணோடு கலக்கிறது
நீர்!

அழகான பூ
மிதிபட்டது!
மிதியடி!

துப்பறிந்ததும்
விரட்டப்படுகின்றன!
எறும்புகள்!

அசைந்தாலும்
நகரவில்லை!
நீரில் நிழல்!

 

தேடிக்கொண்டே இருக்கின்றன
எதையும் தொலைக்கவில்லை!
எறும்புகள்!
 தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள் நன்றி!

Comments

 1. ovvontrum arumai sako...!


  ungal punnoottathaal "VISHA-ROOPM" thodar ezhuthiyullen.
  vaarungal en thalathirkku....

  ReplyDelete
 2. ம்ம்ம்.. ஹைக்கூ ஸ்நாக்ஸ் கொறித்தது போல் இருந்தது.

  ReplyDelete
 3. பதினாறும்
  பளிச்....

  ReplyDelete
 4. எல்லாம் அருமை!அதுவும் கடைசி ஹைக்கூ சூப்பர்!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2