உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 4
உங்களின் தமிழ் அறிவு எப்படி?
இந்த பகுதியில் சில தூய
தமிழ் சொற்களை கடந்த பதிவில் பார்த்தோம்! இன்று அன்றாடம் நாம் பயன் படுத்தும் சில ஆங்கில
வார்த்தைகளுக்கான தமிழ் சொற்களை பார்ப்போம்! ஆங்கிலம் பேசினாலும் தமிழை மறக்காமல் இருப்போம்!
இன்னும் சில வருடங்களில் அம்மா அப்பா என்ற சொல்லே மறைந்து விடும் போல மம்மி டாடி அங்கிள்
என்று உறவுகளை கூட ஆங்கிலத்தில் விளிக்க ஆரம்பித்து அன்னியப்படுத்துகின்றன குழந்தைகள்.
இந்த நிலையை தவிர்ப்போம்!
நம் குழந்தைகளை தமிழ் சொற்கள் கற்றுக்கொள்ள பழக்குவோம்!
அம்மா! அப்பா என்றழைக்க பழக்குவோம்!
ஆங்கிலச் சொல்- தமிழ் சொல்
1. மம்மி- அம்மா
2. டாடி
அப்பா
3. அங்கிள்
மாமா
4. மீல்ஸ் உணவு / சாப்பாடு
5. ரைஸ்
அரிசி / சாதம்
6. ஹெல்த்தியா வலுவாக
/நலமாக
7. ஹங்கிரி
பசியாக
8. டயர்ட்
களைப்பாக
9. பெய்ன்ஃபுலி வலியாக
10. ஸேட் வருத்தமாக
இது போல பல சொற்களை ஆங்கிலத்தில் உரையாடி
வருகிறோம்! அதில் தவறில்லைதான்! ஆனால் தமிழ் சொல்லையே அடுத்த தலைமுறை மறந்து விடும்
அளவிற்கு விடலாமா?
1 அட்மினிஸ்ட்ரேசன் ஆட்சி,நிர்வாகம்
2அம்பாசடர் தூதர்
3 ஏர் கண்டிசன் காற்றுபதனம்
4. ஆடிட்டர் தணிக்கையர்
5 கன்ஸ்யூமர் நுகர்வோர்
6பாலிடெக்னிக் பல்தொழில்நுட்ப பயிலகம்.
7ஆட்டோமேடிக் தானியங்கி
8. பஸ் பேருந்து
9 ஆடியன்ஸ் பார்வையாளர்கள்
10அசெம்பிளி சட்டசபை.
இப்படி பல சொற்கள் தமிழ் மறந்து ஆங்கிலத்தில்
உரையாடி வருகிறோம்! இது உரையாடலை எளிமை படுத்தினாலும் தமிழை மறக்க செய்து விடுகிறது
அல்லவா? அளவோடு ஆங்கிலம் கலப்போம்! தமிழை மறக்காமல் இருக்க முயற்சிப்போம்!
தமிழை அவ்வப்போது நினைவுபடுத்துவது நன்று
ReplyDeleteபாலிடெக்னிக்-பல்நுட்பம் என்பதே போதுமானது என்று நினைக்கிறேன்.
ஆமாங்க. பேச்சு வழக்கில் ஆங்கில பெயர்கள் நினைவில் நிற்பதுபோல தமிழ் வருவதில்லைதான். யாராவது இப்படி நினைவு படுத்திக்கொண்டே இருந்தால் நல்லதுதான். நன்றிகள்.
ReplyDeleteநல்லதொரு முயற்சி! வாழ்த்துக்கள்!
ReplyDelete