லஞ்சத்தின் தமிழ் பெயர் தெரியுமா?உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 5


உங்களின் தமிழ் அறிவு எப்படி?  பகுதி 5

இந்த பகுதி வாயிலாக சில தூய தமிழ் சொற்களை கற்று வருகிறோம்! தாய்மொழியாம் தமிழை மறக்காமல் இருக்க ஓர் சிறு முயற்சியாக இந்த பகுதியை தொடங்கினேன். இதற்கு வலையுலகில் ஆதரவு குறைவு எனினும் எனக்கு நேரம் கிடைக்கும் போது எனக்கு தெரிந்த நான் கற்ற சில தமிழ் சொற்களை உங்களுடன் பறிமாறிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
   இன்று அலுவலகத்தில் அன்றாடம் உபயோகிக்கும் சில ஆங்கில சொற்களுக்கான தமிழ் கலைச் சொற்கள் சிலவற்றை பார்ப்போம். உபயம் பழைய பன்னிரண்டாம் வகுப்பு பாடநூல்.

ரெகார்ட்-  ஆவணம்
செகரெட்டரி- செயலர்
மேனேஜர்- மேலாளர்
பைல்-     கோப்பு
புரோநோட்-  ஒப்புச்சீட்டு
பால்கனி   - முகப்பு மாடம்
பாஸ்போர்ட்  - கடவுச்சீட்டு
டிசைன்     - வடிவமைப்பு
சாம்பியன்  -  வாகைசூடி
விசா    - நுழைவு இசைவு
டெலிகேட் - பேராளர்
ஸ்பெஷல்பஸ் – தனிப்பேருந்து.
புரொபசல்   - கருத்துரு.
ஆட்டோகிராப்-   வாழ்த்தொப்பம்.
விசிட்டிங்கார்ட் - காண்புச்சீட்டு
ப்ரிப்கேஸ்  -  குறும்பெட்டி
லம்சம் -   திரட்சித் தொகை
மெயின்ரோடு - முதன்மைச் சாலை
புரோட்டாகால் - மரபுத் தகவு
செக் -  காசோலை
ரசீது-  பற்றுச்சீட்டு.

இதில் பலச் சொற்கள் இன்று தமிழ் சொற்களாகவே கலந்துவிட்டது வருந்தற்குரியது. பலமொழியும் கற்பதில் தவறில்லை! ஆயினும் தாய்மொழியை இகழ்வதும் மறப்பதும் மிகத்தவறு.
தமிழகத்தில்தான் தாய்மொழி தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலை மாறவேண்டும்.
  
கொசுறு:   பேசு என்பது ஏவல் வினைமுற்று. பேசுக என்பது வியங்கோள் வினைமுற்று.
ஏவல் என்பது இதைச் செய் என்று கட்டாயப்படுத்துவது. வியங்கோள் என்பது கொஞ்சம் பணிவுடன் கேட்பது. ஆங்கிலத்தில் ப்ளீஸ் என்கிறோம் அல்லவா? அதற்கு தயைகூர்ந்து அருள்கூர்ந்து என்று அர்த்தம். பேசு என்பது ஸ்பீக் என்றும் அருள்கூர்ந்து பேசு என்பதற்கு ப்ளீஸ் ஸ்பீக் என்று ஆங்கிலத்தில் கூற வேண்டும். இதையே தமிழில் பேசுக என்றால் போதும். பேசுக என்பது தழைந்து அழைப்பதாக அமையும்.
மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் தமிழின் பல இனிமைகளை காண்போம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
         

Comments

  1. 'கையூட்டு ' என நினைக்கிறேன்.
    பயனுள்ள பதிவு.
    வாகைசூடி அழகான தமிழ்ப் பெயர்.
    பகிர்விற்கு நன்றி !

    ReplyDelete
  2. நல்ல பதிவு மறக்காமல் இருக்க அவ்வப்போது இதுபோல் தேவைதான். தயங்காமல் தொடரவும்.

    ReplyDelete
  3. புதிய சொற்கள் தெரிந்து கொண்டேன்

    ReplyDelete
  4. தமிழில் கையூட்டு... மலையாளத்தில் கைக்கூலி...

    ReplyDelete
  5. இப்படி பதிவு போட்டால் நாமும் தமிழை மறக்காமல் நிறைய வார்த்தைகளும் தெரிந்துகொள்ள முடியும். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  6. payanulla thakaval...


    nantri sako...!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!