விவேகானந்தரின் பொன்மொழிகள்! இன்று 150வது ஜெயந்தி!


* பிறருக்காகச் செய்கின்ற சேவையால், நம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ள முடியும்.
* சுயநலத்தால் சுகம் கிடைக்கும் என்று மனிதன் முட்டாள்தனமாக நினைக்கிறான். உண்மையில், தன்னலத்தை ஒழிப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது.

* நம்மை நாமே பெரிதாக எண்ணிக் கொண்டு அகந்தை கொள்வது கூடாது. சாதாரணமானவர்களாக நம்மை கருதும் போது தான், நம்மிடம் கருணையும், பணிவும், நல்ல சிந்தனையும் வெளிப்படத் தொடங்கும்.

* விவசாயி மடையைத் திறந்து விட்டால் புவியீர்ப்பு விசையால் நீர் தானாக பள்ளத்தைநோக்கிப் பாய்வது போல எல்லா ஆற்றல்களும் மனிதனுக்கு இயல்பிலேயே இருக்கின்றன. ஆன்மிகத்தின் உதவியால் தடைகளைப் போக்கி நாம் நிறை நிலையை அடைய வேண்டும்.

* ஆன்மிகத்தின் உதவியால் தீயவர்கள் கூட மகானாக முடியும். வாழ்வில் தடைகளைப் போக்கினால் போதும். நம் இயல்பான குணமாகிய நிறை நிலையின் வாசல்கள் தானாகவே திறந்து விடும்.

  
* நன்மை செய்யவும், நல்லவர்களாக வாழவும் விரும்புபவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.
* உண்மை எதற்கும் தலை வணங்கத் தேவையில்லை. மனித சமூகம் தான் உண்மைக்குத் தலை வணங்க வேண்டும்.

* எல்லாவிதமான அறிவும் மனிதனுக்குள்ளேயே இருக்கிறது. அதை விழித்து எழச் செய்வதே நல்லாசிரியரின் கடமை.

* இன்றைய கல்வித்திட்டம் மனிதனை இயந்திரமாக மாற்றிக் கொண்டிருக்கிறது. ஒழுக்கம், மனவலிமை, பரந்த அறிவு இவற்றை புகட்டுவதாக கல்வித்திட்டம் மாற வேண்டும்.

* மனிதர்கள் விலங்குகளை விட அதிக ஒழுக்கமானவர்களாக இல்லை. சமுதாயக் கட்டுப்பாடு என்ற சாட்டையால் மனிதன் அடக்கி வைக்கப்பட்டிருக்கிறான்.

* கற்புநெறியில் இருந்து பிறழும் போது, மனித சமூகம் முடிவை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பது தெளிவாகும்.

* நாம் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்வை அனுசரித்து அமைத்துக் கொள்வது தான் வெற்றி வாழ்வுக்கான ரகசியம்.

- விவேகானந்தர்                                        
இன்று விவேகானந்தரின் 150வது ஜெயந்தி! அவரது சில பொன்மொழிகளை பகிர்வதன் மூலம் நினைவு கூர்ந்துள்ளேன்! நன்றி!

Comments

  1. விவேகானந்தரின் பொன்மொழிகள் பகிர்வுக்கு நன்றி. எல்லாமே நல்லா இருக்கு.

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  3. இந்நாளில் ஸ்வாமிஜி அவர்களின் பொன்மொழிகளை நினைவூட்டியமைக்கு நன்றி

    ReplyDelete
  4. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்-எழில்

    ReplyDelete
  5. எனக்கு ரொம்ப பிடித்தவரோட பிறந்தநாளில் அவர் கூறிய பொன்மொழிவை பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  6. அருமையான பொன்மொழிகளை பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2