பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 29


பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 29
உங்கள் ப்ரிய “பிசாசு”
முன்கதைசுருக்கம்: ராகவனின் நண்பன் வினோத் அழைத்துவரும் பெண் செல்விக்கு பேய் பிடித்துக் கொண்டிருப்பதால் முஸ்லிம்நகர் தர்காவிற்கு மந்திரிக்க அழைத்துச் செல்கின்றனர்.ஆனால் பாய் மந்திரிக்காமல் விட்டுவிட செல்வி தப்பித்து விடுகிறாள். செல்வி மீது பிடித்துக் கொண்டிருக்கும் ப்ரவீணாவின் கதையை பாய் கூறுகிறார்.
முந்தைய பகுதிகளுக்கான லிங்க்

    இனி:
       அந்த அதிகாலை வேலையிலும் ப்ரவீணாவின் தாய் பொன்னம்மாளுக்கு வியர்த்துக் கொட்டியது. மகளைக் காணாது தவியாக தவித்தாள்.எங்கு சென்றிருப்பாள் ஒருவேளை மகேஷுடன் எங்காவது ஓடிப் போய் விட்டாளோ?
   கடவுளே அப்படி ஏதும் நடந்து விடக்கூடாது! அப்புறம் ஊரில் தலைக்காட்ட முடியாது. நமக்குப் போய் இந்த நிலை வரவேண்டுமா? என்று அவள் நெஞ்சம் குமுறிக்கொண்டிருந்தது. விடிந்ததும் ஒவ்வொருவராய் விசாரிக்க ஆரம்பித்து விடுவார்களே? என்ன பதில் சொல்வது. அவள் கலங்கி நின்றபோதுதான் பக்கத்து ஊர் தர்காவின் ஓதுதல் காதில் ஒலித்தது. ஒரே வழி பாயை பார்த்து விவரம் கேட்பதுதான் என்று அந்த அதிகாலையிலேயே வீட்டை பூட்டிக் கொண்டு கிளம்பினாள். இன்று ஒரு நாள் வியாபாரம் போனாலும் பரவாயில்லை! மகளை நல்லபடியாக காணவேண்டும் என்று அவள் மனது துடித்து கொண்டிருந்தது.
     விடிகாலையிலேயே வந்து நிற்கும் பொன்னமாவை அதிசயமாக பார்த்தார் மவுல்வி! என்ன பொன்னம்மா! வியாபாரத்தை விட்டுபுட்டு இவ்வளவு கார்த்தாலே இங்க வந்திருக்கே?
  பொன்னம்மாவிற்கு கண்ணீர் கரை புரண்டு ஓடியது! அழுது கொண்டே முழு விபரமும் கூறினாள். பாய் ஐயா! நீங்கதான் எப்படியாவது என் மகளை கண்டுபிடிச்சு தரணும் என்று காலில் விழப்போனாள்.
   ஐயையோ! என்னம்மா இது! நீங்க அல்லாவை தொழுங்க! என்னை கடவுளாக்காதீங்க! எல்லாம் அல்லா பார்த்துப்பான்! கொஞ்ச நேரம் இங்கனயே உக்காருங்க! நான் தொழுகை பண்ணிட்டு அப்புறம், விபரம் சொல்றேன் என்று பள்ளிவாசலினுள் நுழைந்தார் அந்த மவுல்வி.
    சரியாய் ஒரு அரை மணி நேரம் அரை யுகமாக கடந்தது பொன்னம்மாளுக்கு! மவுல்வி வெளியே வந்தார். அவர் முகத்தில் கொஞ்சம் கலவரம் இருந்தது. இதை எப்படி சொல்வது என்று தயங்கினார்.
  பாய் ஐயா! என்ன ஆச்சு? எதுவானாலும் தயங்காம சொல்லுங்க!
இல்ல பொன்னம்மா நீ தாங்க மாட்டே!
ஐயா! என் மக உசுரோட இருக்காளா?
பாய் தயங்கினார். பின்னர் சொன்னார்! உன் மக உயிரோடத்தான் இருக்கா! ஆனா பண்னையார் ஆளுங்க கடத்திட்டு போய் நாசம் பண்ணிட்டானுங்க!
    ஆ! என்ன பாய் சொல்றீங்க? பொன்னம்மா அப்படியே மயக்கம் போட்டாள்.
மவுல்வி சிறிது தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிவித்தார். பொன்னம்மா பெரிய இடத்து சகவாசம் கூடாது உன் மகளுக்கு! அதனாலதான் இப்படி ஆயிருச்சு!
   எப்படி கூட்டிட்டு போனாங்க?
எப்படியோ மயக்கி கூட்டிட்டு போய் திருப்பதி கிட்ட ஒரு இடத்தில வச்சு நாசம் பண்ணிட்டானுங்க பாவி பசங்க! இப்ப அவ அங்க குத்துயிரும் குலையுயிருமா கிடக்கா!
  சாமி! என் மக உயிரோட இருக்கா இல்லையா?
இப்பவரைக்கும்  உயிர் இருக்கு!
அது போதும் சாமி! அது போதும்! அவளை நான் போய் காப்பாத்திக்கிறேன்! அவ எங்க இருக்கான்னு மட்டும் நீங்க சொல்லுங்க சாமி!
   திருப்பதி பக்கத்துல கொண்ட பள்ளிங்கற ஒரு குக்கிராமத்துல அவ இருக்கறா? ஒரு பாழடைந்த வீட்டுல அவ இப்ப மயக்கமா இருக்கறா?
  இது போதும் சாமி! இது போதும்! நான் அவளை மீட்டுகிட்டு வந்துருவேன்!
பொன்னம்மா போனவள்தான் ஆனால் மீண்டும் வரவே இல்லை! அவள் மகளும் வரவே இல்லை!
  பாய் நிறுத்தினார்.
வினோத் கண்களில் கண்ணீர் வழிந்தது! பாய் அப்புறம் என்ன ஆச்சு? என்றான் கண்ணீரை துடைத்துக் கொண்டே
    கொண்டப்பள்ளியிக்கு போன பொன்னம்மாவும் திரும்பலை! ப்ரவீணாவும் திரும்பலை! ஊரே அவங்க ரெண்டுபேரும் பண்ணையாருக்கு பயந்து ஊரை காலிபண்ணிக்கிட்டு போயிட்டதா பேசிக்கிட்டாங்க! 
  அப்புறம் எப்படி அவங்க சென்னைக்கு போனாங்க?
  அவங்க எங்க போனாங்க?
அப்ப சென்னையிலே தீ வைச்சி எரிச்சதா பேசிக்கறாங்களே?
அதெல்லாம் கட்டுக்கதை!
அப்ப உண்மை!
பொன்னம்மா கொண்டப்பள்ளி போய் அந்த பாழடைஞ்ச பங்களாவை தேடி கண்டுப்பிடிச்சு பார்த்தப்ப ப்ரவீணாவோட பிணத்தை தான் பார்க்க முடிஞ்சது. அந்த அதிர்ச்சியிலே அவளும் பிணமாகிட்டா!  அந்த ஊர்க்காரங்க அவங்க ரெண்டு பேரையும் அனாதை பிணமுன்னு எரிச்சிட்டாங்க!
  அப்புறம்?
பொன்னம்மாவுக்கு ஒரு தங்கை இருந்தா! அவ சென்னையிலே வசிச்சா அவ பொன்னம்மாவை தேடி நத்தம் வந்தா!
   பொன்னம்மா காணாம போனது தெரிஞ்சு அவ என்ன ஆனான்னு தெரிஞ்சிக்க என்கிட்ட வந்தா!
இங்க பார்த்த போது தான் பொன்னம்மாவும் அவ பொண்ணும் இப்படி அநியாயமா செத்து போனது தெரிஞ்சது. அவ கொதிச்சு போயி பண்ணையார்கிட்ட நியாயம் கேக்கப் போறதா சொன்னா?
அவளுக்கு ஒரு சின்ன பையன் இருந்தான். அவனும் அந்த வயசிலேயே ரொம்ப கோபப்பட்டான். ஆனாலும் இந்த ஊரிலே பண்ணையாரை எதிர்த்து எதுவும் செய்யமுடியாதுன்னு தெரிஞ்சி திரும்பவும் சென்னைக்கே போயிட்டாங்க!
 அவங்க பண்ணையாருக்கு எதிரா கிளப்பி விட்ட கதைதான் இப்படி ப்ரவீணாவை எரிச்ச கதை! ஆனா ப்ரவீணா பாவிகளாலே நாசமாக்கப்பட்டு இறந்து போனா! இப்ப அவ பழி வாங்க துடிச்சிகிட்டு இருக்கா! என்கிட்ட வளந்த பொண்ணு! அவளை அடக்கிப் போட எனக்கு மனசு வரலை! அதான் விட்டுட்டேன்!
  இப்ப ப்ரவீணா! ஐ மீன் செல்வி எங்கே?
அவ தன் தம்பியை தேடிகிட்டு போயிருக்கா!
அதான் எங்கே?
திருப்பதி பக்கம் கொண்டப்பள்ளிகிட்ட இருக்கா!
நாமளும் இப்பவே கிளம்பலாம்!
போய்வாங்க! எல்லாம் நல்லபடியா நடக்கட்டும்! பாய் சொல்லி முடித்தார்.
அதே சமயம் குஹாத்ரி மலையில்  சுவாமிகள் ஆஸிரமத்தினுள் செல்வி ஆவேசமாக நுழைந்து கொண்டிருந்தாள்
                                                   மிரட்டும்(29)                                           
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2