வரன் ஒரு பக்க கதை

 வரன்..ஒருபக்க கதை.


நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு.



என்னங்க வயசுக் கூடிக்கிட்டே போவுது இன்னும் இப்படியே உக்காந்துகிட்டிருந்தா எப்படி சட்டு புட்டுன்னு ஒரு வரனை பேசி முடிச்சாத்தானே..

நான் என்ன சும்மா இருக்கிறேன்னு நினைச்சியா இதுவரைக்கும் தரகர்களுக்கு மட்டுமே முப்பதாயிரம் கொடுத்திருக்கேன். மேட்ரிமோனியல் தனிக் கணக்கு. ஒரு வரனாவது குதிர்ந்தாதானே..

பேசாம நம்ம ஜோஸ்யர்கிட்டே போய் ஏதாவது பரிகாரம் கேட்போமா?

ஏண்டி தெரியாமத்தான் கேக்கிறியா இதுவரைக்கும் மாசத்துக்கு ஒர் பரிகாரம்னு நாட்டுல் இருக்க எல்லாக் கோயிலும் சுத்தி வந்தாச்சு

அப்ப என்னதாஙக பண்றது?

ஒண்ணும் பண்ண முடியாது. படிக்கிற காலத்திலே ஒழுஙகா படிச்சு நல்ல வேலைக்குப் போயிருந்தா இந்த கஷ்டம் இருந்திருக்காது...

அதெல்லாம் சும்மாங்க..ஃபாரின்ல வேலைப்பார்க்கிற பசஙகளுக்கு கூட வரன் அமைய மாட்டேங்குது..

ஒத்தபைசா வரதட்சணை வேணாம்கிறோம். போதுமான சம்பாத்தியம் சொந்த வீடெல்லாம் இருந்தும் நம்ம பையனுக்கு வரன் அமைய மாட்டேங்குதே இது கலிகாலம் தான்

அங்கலாய்த்துக் கொண்டனர் அந்த தம்பதிகள்.

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2