வேலை!
. நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு.
“களை பிடுங்க கூப்பிட்டா ஒருத்தரும் வரமாட்டேங்கறீங்களே! அப்படி எங்கதான் போறீங்க? நாளை பின்னைக்கி ஒரு கஷ்டம்னா நம்ம கிட்டேதான் வந்து நீப்பீங்க? பண்ணையார் தனுஷ்கோடி கத்த..
”அதெல்லாம் அந்த காலங்க ஐயா! அரை நாளு சேத்துலே இறங்கி களை பிடுங்கினா கூலி அம்பது ரூபாயை தாண்ட மாட்டேங்குது..! சேத்து புண்ணு வேற வந்துசேருது! வெயில் வேற கொளுத்தும்! ஒரு நிமிஷம் ஓய்வெடுக்க முடியாது! இப்ப இதுக்கெல்லாம் யாரும் வரமாட்டாங்க! எல்லோரும் நூறு நாள் வேலைத்திட்டத்துக்கு போயிட்டாங்க! ”என்றான் படியாள் விநாயகம்.
”அங்க அப்படி எவ்வளவுதான் கொடுக்கிறாங்க!”
”ஒரு நாளைக்கு 200 ரூபாவுலே இருந்து 2 50 ரூபா வரைக்கும் கிடைக்குதாம்!”
”சரி நானும் 200 ரூபாவே கொடுக்கிறேன்! நாளைக்கு பத்து பேரை கூட்டிட்டு வந்து களை பிடுங்கு!”
”சரிங்க ஐயா! கூப்பிட்டு பார்க்கறேன்! என்று போனவன் மறுநாள் அவன் மட்டும் வந்து நின்றான்.”
”என்ன விநாயகம்! ஆளுங்க எங்கே?”
”அவங்க யாரும் வர மாட்டேங்கிறாங்க ஐயா!”
”என்னவாம்! ”
“அங்கே இரு நூறு ரூபா கூலி வாங்கிட்டு நிழல்லே உக்காந்துட்டு வந்துருவாங்களாம்! அரைமணிநேரம்தான் வேலை செய்வாங்களாம்! இங்கே நாலுமணி நேரம் சேத்துலே கால் வைக்கணுமாம்! எங்களாலே முடியாது! இதுவே பழகிப் போயிருச்சு! அங்க வந்து கஷ்டப்பட முடியாதுங்கிறாங்கய்யா!”
தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டார் பண்ணையார் தனுஷ்கோடி!
இதுவும் நடக்கிறது தான். என்ன சொல்ல!
ReplyDelete